Latest Posts

திருடுபோன வாகனங்களை மீட்க உதவும் கருவி !

- Monday, July 02, 2018 No Comments
தற்காலத்தில் முக்கிய பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன. அவ்வாறு திருடு போன வாகனங்களை மீட்பது கடினம். வண்டியை பறிகொடுத்தவர்கள், வண்டியை மீட்க முடியாமல், கடனையும் அடைக்க முடியாமல் திண்டாடுவர்.

காணாமல் போகும் வானகங்களை கண்டுபிடித்து மீட்பதற்கு தற்பொழுது புதிய கருவி [GPS Device] ஒன்று வெளிவந்துள்ளது. அதை வாகனங்களில் பொருத்திவிட்டால் போதும்.

GPS Tracker for Two Wheeler


அக்கருவியுடன் எளிதாக தொடர்புகொள்ள கூடிய ஆன்ட்ராய்ட் செயலி மூலம் திருடுபோன வண்டி எந்த இடத்தில் உள்ளது என்பதை மிக எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த கருவியை புதிய மற்றும் பழைய வாகனங்களில் கண்ணுக்குத் தெரியாத வகையில் சீட் அல்லது டேங்கிற்கு அடியில் பொருத்திக்கொள்ளலாம்.

திருடர்கள் சைட் லாக்கரை (Side Locker) உடைத்து, அல்லது சைட் லாக் ஓப்பன் செய்து எடுத்துச் செல்லும்போது, உடனடியாக இந்த டிவைஸ் செயல்பட்டு,  திருடர்கள் வண்டியை திருடிச் சென்று போய்க் கொண்டிருக்கும் இடம் எது என்ற தகவல் உரிமயாளருக்கு SMS மூலம் தகவல் போய் சேர்ந்துவிடும்.

டிவைசும் கைபேசியும், ஒரு, 'ஆப்' மூலமாக இணைக்கப்படுவதால், உரிமையாளருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதனால், திருடப்பட்ட வண்டி எங்கு இருக்கிறது, அது ஓடிக் கொண்டிருக்கிறதா, 'ஓவர் ஸ்பீடில்' போகிறதா, எந்த சிக்னலில் நின்று கொண்டிருக்கிறது என்பதை, ஜி.பி.எஸ்., வாயிலாக, தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

வலைதளம் தொடர்பில்லாமல் இருந்தாலும், சாதாரண மொபைல் போனில், குறுஞ்செய்தி அனுப்பப்படும் வசதியும் இருக்கிறது. இத்தகைய கண்காணிப்பை, மூன்று நாட்கள் வரையிலும், மொபைல் போனில் வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக, திருடர்கள் வண்டி சாவி இல்லாமலோ, தலைபூட்டை உடைத்தோ அல்லது வண்டியை இயக்காமல் உருட்டி சென்றாலோ, தொடர்ந்து மொபைல் போனில் அலாரம் அடித்துக் கொண்டிருக்கும்.

அப்போது, குறுஞ்செய்தி மூலம் மொபைல் போனிலிருந்து வண்டியில் இருக்கும் டிவைசிற்கு கட்டளை அனுப்பி, இயக்கத்தில் இருக்கும் வண்டியை நிறுத்தலாம். இதற்கான செலவு, முதலில், 3,000 - 4,000 ரூபாய்.

அதைத் தவிர மாதம், 600 ரூபாய் செலவில், மொபைல் போனில் உள்ள செயலியை புதுப்பித்துக் கொள்ளலாம்.

Tags: GPS Tracker for Two Wheeler, Car GPS Tracker, GPS android app for CAR and Two Wheeler


Source:Dinamalar.com

டூப்ளிகேட் தகவல்களைத் தடுக்க பேஸ்புக்கின் புதிய முயற்சி

- Monday, June 25, 2018 No Comments
பேஸ்புக்கில் உண்மைத் தகவல்களைவிட, போலியான இட்டுக்கட்டி எழுத்தப்பட்ட தகவல்கள் அதிவிரைவில் பரவிவிடுகிறது. மேலும் ஒருவரின் தகவல்களை மற்றவர்கள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதிவதும் அதிகரித்து வருகிறது.

அதுபோன்ற தகவல்கள் மற்றும் செயல்களைத் தடுக்க பேஸ்புக் முயற்சி எடுத்து வருகிறது.machine learning technology

இதன் ஒரு பகுதியாக, Machine Learning எனும் தொழில்நுட்பட்பத்தை பயன்படுத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் போலி தகவல்கள், நகலெடுக்கப்பட்ட தகவல்கள் போன்றவற்றை மிக எளிதாக கண்டறிந்து தடுக்க முடியும் என ஃபேஸ்புக் பிராடக்ட் மேனேஜர் Tessa Lyons தெரிவித்துள்ளார்.

மெசின் லேர்னிங் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், காப்பி பேஸ்ட் பதிவுகள், புரளிகள், பொய்யான தகவல்கள் அனைத்தும் குறைந்துவிடும் என ஃபேஸ்புக் நம்புகிறது.

Tags: Facebook, New Technology, Machine Learning.

மாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app

- Sunday, June 24, 2018 No Comments
கல்வி என்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்க கூடாது. அதை விரும்பி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த கல்வி அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். தற்பொழுது உள்ள கல்விமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகதான் இருக்கிறதேயன்றி, அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இல்லை.

இந்நிலையை தவிர்க்க "இன்ட்ராக்ட்டிவ்" கல்விமுறையை செயல்படுத்த வேண்டும் என்பது கல்வியலாளர்களின் கருத்து.

tn schools live 3d app


அப்பொழுதுதான் ஈடுபாட்டுடன் மாணவர்கள் கற்றலை மேற்கொள்வார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை மெல்ல மெல்லதான் கல்வித்துறையில் சிற்சில மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கல்வியை மாணவர்கள் சிரமின்றி கற்றுத்தேற புதிய ஆன்ட்ராய்ட் 3D ஆப் வெளியிட்டுள்ளனர்.

இது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வியை எளிதாக பரிந்து படிக்க உதவுகிறது.

புரிந்து படிக்கும்பொழுது, படித்தவைகள் அப்படியே மனதில் நிற்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

அதற்கு தகுந்தாற் போல பாடப்புத்தகங்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்திடும்பொழுது, 3D வடிவத்தில் படங்கள் விளக்கத்துடன் காட்சி அளிக்கின்றன.

எப்படி பயன்படுத்துவது?

 • ஆன்ட்ராய்ட் போன் மூலம் Google Play Store சென்று அங்கு "TN SCHOOLS LIVE" என்ற ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
 • ஆப்பைத் திறந்தவுடன் பத்தாம் வகுப்பா, பன்னிரெண்டாம் வகுப்பா எனத் தெரிவு செய்துவிட்டு, புத்தகத்தில் உள்ள படத்திற்கு நேராக போன் கேமிராவை காண்பிக்கவும்.
 • உடனே அந்த ஆப் புத்தகத்தில் உள்ள தகவல்களை உணர்ந்து, அதற்குரிய 3 படங்களை காட்டும்.
10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ’டிஎன்ஸ்கூல்லைவ்" ஆப் வெளியிடப்பட்டுள்ளது. வெகு விரைவில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆப் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Android App, Tn Schools Live, 10, +2 Students.

போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க

- No Comments
இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள். சமூக வலைத்தளங்களில் இதுபோன்று போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் அதிக பிரபல்யம் அடையும்.

technology for find photoshoped pic

அவ்வாறு PhotoShop செய்யப்பட்ட படங்களை கண்டறிவது மிக கடினம். ஆனால் அதுபோன்ற படங்கள் ஏற்படும் தாக்கம் அதிகம். அதனால் தற்பொழுது அப்படி போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க புதிய நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தவிருப்பதாக "Adobe" நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரிஜினல் படங்களைவிட, போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாலேயே, இதுபோன்ற நுண்ணறிவுத் தொழிநுட்பம் போட்டோஷாப்பில் வெளிவரவிருப்பதாக அடோப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: Photoshop, New Technology, Photoshoped Pics.

கம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும் ?

- Saturday, June 23, 2018 No Comments
வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருந்தால் கண்கள் மற்றும் உடலுக்கு நல்லது என்பது பற்றி இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம்.

ஒரு கம்ப்யூட்டர் அல்லது பல கம்ப்யூட்டர்களை பயன்படுத்தக் கூடிய அறை நிச்சயமாக குறிப்பிட்ட அமைப்பின்படி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கண்கள் மற்றும் உடலுக்கு அதிக பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

கம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும்?


 • கம்ப்யூட்டர் அறை நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.
 •  போதுமான அளவிற்கு வெளிச்சத்தை தரக்கூடிய விளக்குகள் இருக்க வேண்டும்.
 • சன்னல்களுக்கு எதிர்ப்புறமாக கணினி மேசை அமைந்திருக்க கூடாது.
 • சன்னல்களின் வெளிச்சம், மின் விளக்குகளின் வெளிச்சம் போன்றவை கம்ப்யூட்டர் திரை மீதோ அல்லது உங்களின் மீதோ பட்டு எதிரொளிக்கும் வகையில் இருக்க கூடாது.
 • கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் எதிர்புற சுவரில் பட்டு எதிரொளிக்காத வகையில் சுவரின் வண்ணம் இருக்க வேண்டும்.

computer room basic setup

image credit: pinterest.com
கம்ப்யூட்டர் இருக்கும் இடத்திற்கு பக்கவாட்டில் சன்னல்கள் அமைந்திருப்பது நல்லது.  அதே நேரத்தில் அதிலிருந்து அதிகப்படியான வெளிச்சம் வரலாமல் இருக்க, அதற்கு தகுந்தாற் போன்ற நல்ல "சன்னல் திரைகள்" (Windows Screen) பயன்படுத்த வேண்டும்.

computer room with low lights

இதனால் வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தை குறைக்க முடியும். தூசிகள் போன்றவைகள் அறைக்கு வருவதை குறைத்திடலாம். மேலும் கண்கள் அதிக ஒளியால் பாதிபடைவதை தடுக்கலாம்.

சரியான மேசை & நாற்காலி :

என்ன வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்பது பொறுத்து உங்களுடைய மேசை மற்றும் நாற்காலி அமைய வேண்டும்.  கம்ப்யூட்டர் பயன்படுத்தவென (Desktop) மேசைகள் உள்ளன. அதற்கு பொருத்தமான சுழலும்  நாள்காலிகள் இருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

Computer Chair with adjustable arms

அந்தளவிற்கு வசதிகள் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் மேசையை பயன்படுத்தலாம். ஆனால் உங்களது உயரம், மற்றும் பார்வை நேர்கோட்டிற்கு 20 டிகிரி சாய்வாக திரை இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் கணினியில் பணிபுரிபவர்கள் முதுகு வலி, கழுத்து வலி வராமல் இருக்க, அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகளைப் (Ergonomic Chairs) பயன்படுத்தலாம். இதுபோன்ற Heavy Duty Chairs விலை சற்று அதிகமாக இருப்பினும், எதிர்காலத்தில் முதுகு தண்டுவடப் பிரச்னை வராமல் இருக்க இது நிச்சயமாக உதவும்.

 "கம்ப்யூட்டர் இருக்கை" யின் அமைப்பு இப்படிதான் இருக்க வேண்டும். இந்த அளவுகளில் இருந்தால் "முதுகுவலி", "கழுத்துவலி" போன்ற பிரச்னைகளை குறைக்க முடியும்  (பார்க்க படம்).

back supported chair

Laptop / மடிக்கணினி பயன்படுத்துபவர்கள் சாதாரண மேசைகளை தாராளமாக பயன்படுத்தலாம்.  மடிக்கணினிக்கு என உள்ள Cooler Fan வசதியுடன் கூடிய இருக்கைகளை Laptop Stand வாங்கி பயன்படுத்தலாம். இதனால் மடிக்கணினி விரைவில் சூடேறுவதை தவிர்த்து, வெப்பத்தையும் குறைக்க முடியும்.

ஓய்வு:

தொடர்ந்து ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கு அதிகமாக கணினியில் பணிபுரிவர்கள், நிச்சயமாக 20-20-20 பார்முலாவை பயன்படுத்தியே ஆக வேண்டும். பணிக்கிடையில் தேவையான ஓய்வை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

20-20-20 formula
image credit: pinterest.com

கணினியில் பணி புரிபவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி, கண்கள் வலி ஏற்படுவது இயல்பானதுதான். அதை முடிந்தளவிற்கு தவிர்த்திட,

 • 20 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடத்தல்
 • 20 அடி தூரத்தில் இருக்கும் பொருட்களை பார்த்தல்
 • இயல்பாக கண்களை சிமிட்டல்
 •  நாற்காலியிலிருந்து எழுந்து கை கால்களை  அசைத்தல்

போன்ற சிறிய அசைவுகளை ஏற்படுத்தி உடலை இயல்பு நிலைக்கு திருப்பலாம்.image credit :kneelingchairhq.com
கண்களுக்கு ஓய்வு:

கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் கண்களை பாதிக்காமல் இருக்க Anti - Glare Glass பயன்படுத்தலாம்.

கண்களுக்கு ஓய்வு கொடுத்திட, கண்களுக்கான சிறிய பயிற்சிகளை மேற்கொள்ள உதவும் மென்பொருட்கள் சில உண்டு. அது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள,

"கம்ப்யூட்டர் திரை ஒளியின் பாதிப்பிலிருந்து கண்களை பாதுகாத்திடும் மென்பொருட்கள்"

என்ற பதிவை வாசிக்கவும்.

உட்கார்ந்த நிலையில் அதிக நேரம் பணிபுரிவதால், உடலில் இயல்பு தன்மை மாறி உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அதைத் தவிர்த்திட மேற்குறிப்பிட்டச் செயல்களை கட்டாயம் செய்திட வேண்டும்.

Too much Sitting Raises risk of death

இந்த தகவல் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் நடைமுறை உண்மை இதுதான்.

மிக அதிக நேரம் பணி புரிபவர்களுக்கு உடற்பயிற்சியே மேற்கொண்டால் கூட, ஆயுளை குறைத்து மரணத்தை நோக்கிச் செல்கிற கொடுமையான கேன்சர் போன்ற  சில நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடும் என ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கணினி முன்பு மிக அதிக நேரம் அமர்ந்து பணிபுரிவதை முடிந்தளவிற்கு தவிர்த்திட வேண்டும்.

Tags: Computer Room, Computer disease, Computer Chair, Computer Table.

இணையதளங்களின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள

- Wednesday, June 20, 2018 No Comments
இணையம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி ஆச்சர்யபட வைத்தாலும், இடையிடையே சில தகவல்களை படித்து அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது.

how to check if website is safe

திடீரென வித்தியாசமான பெயரில் வைரஸ் பரவி கம்ப்யூட்டரை முடக்குவது, நம்மை அறியாமலேயே நம்முடைய தகவல்களை அறிந்து வைத்துக்கொள்வது, வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை திருடுவது என்பது போன்ற தகவல்களால் "இன்டர்நெட்" ல் ஆபத்தும் அதிகம் என்பதை உணர முடிகிறது.

எனவேதான் நாம் அணுகவிருக்கும் இணையதளத்தின் நம்பகத்தன்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.  சரி, இணையத்தை அணுகி ஒரு வலைத்தளத்தை பார்வையிடும்பொழுது அது நம்பகமானதுதானா என்பதை எப்படி அறிந்து கொள்வது?


1. ஒரு இணையதளம் நம்பகமானதுதானா என்பதை அட்ரஸ் பாரில் https: என பச்சை நிறத்தில் இருந்தால் நம்பகமானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.


2. VriSign, TRUSTe, McAfee Secure போன்ற அங்கீகார வழங்குநர்களால் வழங்கப்பட்ட நம்பிக்கை முத்திரை (Trust Seal) இருந்தால், அவ்விணையத்தளம் பாதுகாப்பானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

3. நீங்கள் பார்வையிடும் வலைத்தளத்தின் உள்ளடக்கம், அந்த இணையதளத்தின் தரத்தை பறைசாற்றும். நம்பிக்கையான இணையதளம் என்றால், அதன் வடிவமைப்பு, அதில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள், வாசகர்களின் கருத்துகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதில் அமைந்திருக்கும் கட்டுரைகள் பிழையின்றி இருக்கும். அதே சமயம் அதில் இடம்பெற்றிருக்கும் About US, Contact Us, Privacy Policy போன்ற பக்கங்களை பார்வையிட்டாலே அந்த தளத்தைப் பற்றி நம்பக்தன்மையை அறிந்துகொள்ளலாம்.

4. ஒரு இணையதளத்தின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்வதற்கு, WOT, Webutation, Trustpilot போன்ற பிரபலமான Browser Extensions உள்ளன. அவற்றை வலை உலவியில் இணைப்பதன் மூலம், நீங்கள் எந்த ஒரு இணையத்தளத்தை திறந்திடும்பொழுதும், அவ்விணையதளத்தின் "நம்பகத்தன்மை" குறித்த தகவல்களைக் காட்டும்.

அதேபோல, AVG Link Scanner , McAfee SiteAdvisor மற்றும் Dr.Web LinkChecker போன்ற ஆன்ட்டி-வைரஸ் புரோகிராம்களும் வலைத்தளங்களின் நம்பகத்தன்மை மற்றும் வைரஸ் போன்ற புரோகிராம்களின் ஆபத்து குறித்த தகவல்களை உடனடியாக காட்டிவிடும்.

Tags: Internet Tips, How To, Trusted Website, Useful Tips.

பவர் பாய்ண்ட்டினை வீடியோவாக மாற்றுவது எப்படி?

- 3 Comments
Update: PowerPoint To Video மாற்றுவது மிக சுலமாகிவிட்டது. பவர்பாய்ண்டிலேயே அந்த வசதி வந்துவிட்டது.

PowerPoint 2010  நீங்கள் பயன்படுத்தினால், பவர் பாய்ண்ட் ப்ரசண்ட்டேசன் உருவாக்கிவிட்டு, அதை அப்படியே சேமித்து விடவும். அதன் பிறகு ஃபைல் சென்று  Save & Send கிளிக் செய்து Create a Video என்ற வசதியை செயல்படுத்துவதன் மூலம் வீடியோவாக சேமித்து விடலாம்.

இந்த வீடியோ இன்னும் உங்களுக்கு சுலபமாக பவர்பாய்ண்ட்டை எப்படி வீடியோவாக மாற்றுவது என கற்றுக்கொடுக்கும் என நம்புகின்றேன்.


எப்படி பவர்பாய்ண்ட் டூ வீடியோ கன்வர்ட் செய்வது?

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்(MS Office) தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன்பாடுகள் ஏராளமானவை.

ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர்பாய்ண்ட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வகுப்புகளில், கருத்தருங்குகளில் என எல்லாவற்றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனைப் பயன்படுத்திதான் தங்களுது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேஷன் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.

powerpoint to video convertor


இவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர்பாய்ன்ட்(Powerpoint application) அல்லது பவர்பாய்ன்ட் வியுவர்(Powerpoint viewer) இருந்தால்தான் பவர்பாய்ண்ட் கோப்புகளை(power point presentation)  காண முடியும்.

இவற்றையே வீடியோ கோப்புகளாக மாற்றிவிட்டால் உங்கள் வீட்டு டி.வியில் கூட பவர்பாய்ண்ட்டில் உருவாக்கிய கோப்புகளை காண முடியும். அதாவது டிவிடி பிளேயர், CD Player போன்ற பிளேயர்களில் உள்ளிட்டு அவற்றை டிவியில் பார்க்கலாம்.

பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக(Video files) மாற்ற பவர்பாய்ண்ட்டில் வசதி தரப்படவில்லை. எனவே பவர்பாயிண்ட்டில் வீடியோவாக மாற்றுவது என்பது இயலாத காரியம். இதற்காகவே இந்த மென்பொருள் பயன்படுகிறது. மென்பொருளின் பெயர்

Leawo PowerPoint to Video Free.

இந்த இலவச மென்பொருள் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும். உங்கள் பவர்பாய்ன்ட் கோப்புகளை 3PG, 3G2, ASF, WMV, ஆகிய பார்மட்களில் வீடியோ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.


இந்த மென்பொருளைத் தரவிறக்க சுட்டி:Download Leawo PowerPoint to Video Free.

 இந்தமென்பொருளானது பவர்பாய்ண்ட்டின் அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது(Support). PPT, POT, PPTX, PPS போன்ற பவர்பாய்ண்டின் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் இம்மென்பொருள் மூலம் வீடியோவாக மாற்ற முடியும்.

மேலும் பவர்பாய்ண்டில் நாம் உருவாக்கிய அனைத்து அனிமேஷன்களும், வீடியோவாக மாற்றம் செய்தபிறகு அப்படியே வேலை செய்யும் என்பது இம்மென்பொருளின் கூடுதல் சிறப்பு.

என்ன நண்பர்களே... இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற தயாராகிவிட்டீர்களா?...

உங்கள் பவர்பாய்ண்ட் ஆக்கங்களை இனி உங்கள் வீட்டு  டிவியிலும் போட்டுக் காண்பித்து பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான PowerPoint Presentation நீங்களே உருவாக்கி வீடியோவாக மாற்றி CD பதிவேற்றிக்கொடுங்கள். அவர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி நண்பர்களே..! தொடர்ந்து நீங்கள் அளித்துவரும் ஆதரவில் உளம் மகிழ்கிறேன்...!!!

Tags: Free software, இலவச மென்பொருள், power-point, video conversion, 

முன்னணி பிரௌசர் Maxthon Browser Specs and Features

- Monday, June 18, 2018 No Comments
கம்ப்யூட்டரிலிருந்து இணையத்தை அணுக உருவாக்கப்பட்ட ஒப்பற்ற ஒரு புரோகிராம் தான் BROWSER. பிரௌசர்கள் பல வகை உண்டு.

அவற்றில் சிறந்தாக கருதபடுபவை Chrome மற்றும் Firefox.  ஆனால் பிரௌசர்களில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பியல்களைப் (Features) பெற்றுள்ளன.

அந்த வகையில் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அரிய வசதிகளை கொண்ட ஒரு முதன்மையான வலை உலவி Maxthon Browser. இதன் தாரக மந்திரமாக இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

Super-Fast
Dual Rendering Engines,
Displaying pages in no time
Smart switch between Webkit & Trident,
balance both read speed and multi-element page content

Super-Clean
Web with no ads,
no more annoying disturbing.
Kill floating window, banner, and pop-up ads.
Give you a smooth browsing experience

Super-Clean
Web with no ads,
no more annoying disturbing.
Kill floating window, banner, and pop-up ads.
Give you a smooth browsing experience


மேக்ஸ்தான் பிரௌசரில் அப்படி என்ன சிறப்பு வசதிகள் உள்ளன? எந்த வகையில் இது சிறந்த பிரௌசராக உள்ளது என்பது போன்ற தகவல்களை இங்கு விரிவாக தெரிந்துகொள்வோம்.

மேக்ஸ்தான் பிரௌசர் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் (Specs & Features)

 • உலகில் 6 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த பிரௌசரை தங்களது கணினியில் இயல்பிருப்பு உலவியாக (Default) வைத்து பயன்படுத்துகின்றனர்.
 • Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது.
 • Auto -completes நினைவகத்தை கொண்ட Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது.
 • Magic Fill Manager எனும் வசதியால் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை சேமித்துகொள்ள முடியும்.
 • Popup ads மற்றும் சில தேவையற்ற windows களை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வைக்க முடியும்.
 • Ad Hunter எனும் சேவையின் வழியாக எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்ட வேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.
 • Mouse Gesture எனப்படும் புதிய வசதியின் மூலம் நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எந்தவித refresh பட்டன் அல்லது shortcutபடடன்களை பயன்படுத்தாமலேயே Mouse​ஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடுகிறது.
 • 6. மற்றுமொரு சிறப்பு என்னவெனில் Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute இப்படிப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளதுதான்.
 • Drag and Drop Search எனும் வசதியைப் பயன்படுத்தி , வலைப்பக்கத்திலுள்ள சொற்கள் அல்லது வரிகளை தேர்வு செய்து நகர்த்தி Search box ல் விட்டால் போதும். ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்து நமக்கு கொடுக்கும்.
 • வலைப்பக்கங்களை எளிதாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது. மேலும் Redo Page, Home, Recently viewed pages, back போன்ற பட்டன்கள் கண்ணைக் கவரும் விதம் இருக்கிறது.
 • Maxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonus களை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது. இவற்றை வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். 
 • மேலும் Opera மற்றும் Chrome களில் இருப்பதைப் போன்றே உங்கள் விருப்பதளங்களை புக்மார் செய்து கொள்ளவும், சேமித்துக்கொள்ளவும் முடியும். மேலும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 • இதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons வசதியையும் தருகிறது.

கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்புகள்:

 • வீடியோ டவுன்லோட் செய்யும் வசதி..
 • எந்த ஒரு விளம்பர தொந்தவும் இல்லாமல் இருப்பது
 • ஆன்ட்ராய்ட், ஆப்பிள் போன்களுக்கென பிரத்யேகமான பிரௌசர் (Special Browser)

கூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ் போன்ற முதன்மை வரிசையில் இருக்க கூடிய தரமான பிரௌசர் இது என்பதால் இதை தராளமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம்.

மேக்ஸ்தான் பிரௌசர் தரவிறக்கச் சுட்டி: Download Maxthon Browser for Free

 தொடர்புடைய பதிவு: குரோம் பிரௌசர் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்

Tags: free browser, Free software, Free software, new browser, new Maxthon browser, Useful sites.

அனைவரும் தெரிந்துகொள்ள இதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திடுங்கள்.

தொலைந்துபோன பொருளை கண்டுபிடிக்க உதவிடும் சாதனம்

- Thursday, June 07, 2018 No Comments
தொலைந்து போன பொருள் அல்லது எங்காவது மறந்து விட்டுச் சென்றுவிட்ட பொருளை அது இருக்கும் இடத்தினை வெகு இலகுவாக கண்டுபிடிக்க உதவுகிறது இந்தச் சாதனம். 


Anti Lost Wireless Tracker என்ற இச் சாதனத்தனை Digitex நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Anti Lost Wireless Tracker
இதற்கென கொடுக்கப்பட்டிருக்கும்  Digitek tracker செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும். இந்த சாதனம் இணைக்கப்பட்ட பொருள் எங்கிருந்தாலும், இந்த செயலின் மூலம் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்துவிடலாம்.

எப்படி பயன்படுத்துவது?

இந்த சாதனத்தை Laptop, Key chain, Waller போன்ற சாதனங்களில் இணைத்து வைத்துக்கொள்ளலாம்.

கார்களைக் கூட இந்தச் சாதனத்தை இணைத்துக்கொண்டு விடலாம்.


Anti Lost Wireless Tracker for car

Anti Lost Wireless Tracker சாதனத்தில் உள்ள In-Build அலாரம் குறிப்பிட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும். 30 மீட்டர் பரப்பளவு வரை அருமையாக வேலை செய்கிறது. அந்த எல்லைக்குள் பொருள் இருந்தால், உடனே ஸ்மார்ட் போனிலிருந்து அலாரம் அடிக்கும்.

இந்தச் சாதனத்தின் மூலம் Remote முறையில் வீடியோ, புகைப்படங்கள எடுக்க முடியும். இதற்காக ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.

Google Play Store - ல் இந்த Anti Lost Wireless Tracker சாதனத்திற்கான செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சுட்டி : Download Anti lost Wireless Tracker Android App For Free

Tags: Anti lost wireless tracker, Anti lost Wireless Tracker Android App, Anti lost Wireless Tracker for Car, Anti lost Wireless Tracker for Laptop.

சாம்சங் கேலக்சி எஸ்7 சிறப்பம்சங்கள்

- No Comments
சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய போன் Samsung Galaxy S7 Edge. இந்த ஸ்மார்ட் போனில் இடம்பெற்றுள்ள சிறப்பு வசதிகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.

Samsung Galaxy S7 Features


கேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ்​ போன்களில் டூயல் பிக்ஸல் தொழில்நுட்பம் உள்ளதால் , டிஎஸ்எல்ஆர் கேமராவில் புகைப்படம் எடுப்பது போல் , மிகவும் குறைந்த வெளிச்சத்தில் துள்ளியமாக புகைப்படம் எடுக்கலாம். இந்த வசதி, ஐ போன்கள் உட்பட எந்த ஸ்மார்ட்போன்களிலும் இல்லை.மேலும் கேலக்ஸி எஸ் 7 போன்கள் , 1 மீட்டர் ஆழத்தில், 30 நிமிடம் வரை தண்ணீரீல் நனைத்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது.

Samsung Galaxy S7 Edge specs | சாம்சங் கேலக்சி எஸ்7 சிறப்பம்சங்கள்

Samsung Galaxy S7 Edge full specifications

GENERAL

Release date February 2016
Form factor Touchscreen
Dimensions (mm) 150.90 x 72.60 x 7.70
Weight (g) 157.00
Battery capacity (mAh) 3600
Removable battery No

DISPLAY

Screen size (inches) 5.50
Touchscreen Yes
Resolution 1440x2560 pixels
Pixels per inch (PPI) 534

HARDWARE

Processor 1.6GHz octa-core
RAM 4GB
Internal storage 32GB
Expandable storage Yes
Expandable storage type microSD
Expandable storage up to (GB) 200

CAMERA

Rear camera 12-megapixel
Rear Flash Yes
Front camera 5-megapixel

SOFTWARE

Operating System Android 6.0

CONNECTIVITY

Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 a/b/g/n/ac
GPS Yes
Bluetooth Yes, v 4.20
NFC Yes
Infrared No
USB OTG Yes
Headphones 3.5mm
FM No
Number of SIMs 2
SIM 1
GSM/CDMA GSM
3G Yes
4G/ LTE Yes
Supports 4G in India (Band 40) Yes
SIM 2
GSM/CDMA GSM
3G Yes
4G/ LTE Yes
Supports 4G in India (Band 40) Yes

SENSORS

Compass/ Magnetometer Yes
Proximity sensor Yes
Accelerometer Yes
Ambient light sensor Yes
Gyroscope Yes
Barometer Yes
Temperature sensor No