Latest Posts
Browsing Category "tbox effect"

பிளாக்கரின் Lightbox Image Effect நீக்க ஓர் எளிய வழி!!

- Thursday, October 06, 2011 No Comments

பிளாக்கரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகளில் பல வசதிகள் பயனுடையதாக இருந்தாலும், சிறிது பின்னடைவை ஏற்படுத்திய புதிய அறிமுகம் ஒன்று தான் பிளாக்கரின் லைட்பாக்ஸ்(light box effect) எபக்ட். இதன்மூலம் நமது வலைப்பூவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து படங்களையும் ஒரே விண்டோவில் காணமுடியும். இது ஒருபக்கம் பிளஸ் ஆக இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இதை விரும்பாததற்கு முக்கிய  காரணம்  அனைத்துப் பதிவுகளின் படங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதியால் - பதிவுகளை வாசகர்கள் படிக்க முடியாமல் வெறும் படங்களை மட்டுமே பார்த்து சென்று விடும் அபாயம் உள்ளது.

இதனால் பலரும் இந்த லைட்பாக்ஸ் வசதியை விரும்பத்தகாத ஒன்றாகவே கருதுகிறார்கள்.  நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த லைட்பாக்ஸ் வசதியை எப்படி செயலிழக்க வைப்பது என்பதைப் பார்ப்போம்.