Latest Posts
Browsing Category "google"

இண்டர்நெட் இல்லாமலேயே க்ரோம் பயன்படுத்தலாம்! எப்படி தெரியுமா?

- Friday, October 12, 2018 No Comments
இண்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய முறையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இண்டர்நெட் இல்லாத நேரங்களின்போது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

we can use chrome without internetதற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன், இண்டர்நெட் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்களின் வசதிக்கேற்ப பல நிறுவனங்களும், இணையம் மற்றும் போனில் சிறப்பு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதையும் படிக்கலாமே : இன்டர்நெட் வேகம் அதிகரிப்பது எப்படி?

அந்த வகையில், தற்போது கூகுள் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இண்டர்நெட் பயன்படுத்துவோர், நெட் இல்லாமலேயே க்ரோம் பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது.


பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான செய்தி மற்றும் தகவல்களை இண்டர்நெட், வைஃபை இருக்கும்போது டவுன்லோடு செய்து கொண்டு, அதன் பிறகு ஆஃப்லைனில் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பயண நேரங்களின்போதும், இண்டர்நெட் இல்லாதபோதும் மிகவும் வசதியாக அமையும்.

அதென்ன ஆன்லைன்? ஆஃப்லைன்?
இணைய இணைப்பு இல்லாதபோது கம்ப்யூட்டரில் பணிபுரிவதை ஆப்லைன் என்றும், இணைய இணைப்பை ஏற்படுத்தி, அதனூடே பணிபுரிவது ஆன்லைன் எனவும் வழங்கப்பெறுகிறது.

இதை பயன்படுத்திக் கொள்பவர்கள், தங்களுக்கு விருப்பமான செய்திகளை முதலில் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பயனர் இருக்கும் இடம் மற்றும்
விருப்பங்கள், செய்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து கூகுளே தானாக டவுன்லோடு செய்து தரும். தற்போது இந்த வசதி நைஜீரியா, பிரோசில், இந்தியா போன்ற 100 நாடுகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும் கூகிள் பற்றிய செய்திகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

source

Tags: Chrome, Google, Internet, Tamil Tech News.

இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகிள்

- Sunday, November 12, 2017 No Comments
இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகிள் என ஆய்வொன்றின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கை  சேர்ந்த Cohn & Wolfe என்ற நிறுவனம் "நம்பகமான பிராண்ட்" பற்றிய ஆய்வு நடத்தியது. இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டது.

google is best brand


உலகின் முதல் தர பிராண்டுகள் என கருதப்படும் 1400 பிராண்டுகளில் இந்தியாவின் முதன்மையான நம்பக பிராண்டாக "கூகிள்" தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த 15 ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கூகிள் சர்ச் என்ஜின் தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். கூகிளுக்கு அடுப்படியாக முறையே அமேசான், மாருதி சுசுகி, ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

67%  சதவிகித நபர்கள் பிராண்டின் நம்பகத்தனம்மை அடிப்படையில் பொருளை தேர்வு செய்கின்றனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Tags: best brand, google, amazon, Maruti Suzuki, apple.


கூகிள் கண்காணிப்பு கேமிரா

- Thursday, October 05, 2017 No Comments
google clips camera


கூகிள் அவ்வப்பொழுது எதையாவது புதியதாக முயற்சித்துக் கொண்டிருக்கும். அந்த வகையில் குழந்தைகள், செல்ல பிராணிகள் போன்றவற்றை கவனிக்க புதிய கேமிரா ஒன்றினை வெளியிடயுள்ளது.

Google Clips என்ற இந்த கேமிராவானது அளவில் சிறியதாகவும், மிகு குறைந்த எடையுடையதாகவும் இருக்கும். இந்தகேமிராவை, சிறப்பு அப்ளிகேஷன் மூலம் ஆன்ட்ராய்ட், ஆப்பிள் சாதனங்களுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் இந்த கேமிராவின் விலை 249 அமெரிக்க டாலர்கள். 

உள்ளங்கையில் உலகை காட்டும் Google Earth Pro

- Tuesday, July 11, 2017 No Comments
கூகிள் எர்த் ப்ரோ (Google Earth Pro)

எர்த் வியூவர் (earth viewer) என அழைக்கப்படும் கூகிள் எர்த் என்பது விர்ச்சுவல் குளோப் (virtual globe), வரைபடம் மற்றும் புவியியல் (geographic) தகவல்களை பயனர்களுக்கு அளிக்கும் சாஃப்ட்வேர் ஆகும்.

கூகுள் எர்த், பூமியில் உள்ள நகரங்கள், வீடுகள், காடுகள், மலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களின், செயற்கைக்கோள் புகைப்படங்களை மக்களுக்கு அளிக்கின்றது. பிரமிக்க வைக்கும் பல இடங்களை முப்பரிமாண (3D) புகைப்படங்களாக காணவும் வழி வகுக்கிறது.

தற்பொழுது கூகிள் எர்த் மேம்படுத்தப்பட்டு, கூகிள் ப்ரோ (Google Earth Pro) என்ற வகையில் இலவசமாக கிடைக்கிறது.

google pro softwareshops

400 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட கூகிள் எர்த் தற்பொழுது இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். இதன் மூலம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டே உலகத்தில் உள்ள இடங்களை பார்த்தறியலாம்.

இது வரை பார்த்திராத காட்சிகள், இடங்கள், மலைகள், பிரபலமான கட்டிடங்கள், வளைகுடா, பெருங்கடல்கள் என உலகின் எந்த ஒரு பகுதியையும்  பார்த்துக் கண்டுகளிக்கலாம்.

புதிய கூகிள் எர்த் ப்ரோவில் அசத்தும் இரண்டு புதிய  அம்சங்கள் : 

1. வாயேஜர் (Voyager)

2. விரிவு படுத்தப்பட்ட உலக வரைபட தொகுப்பு ( the Earth View image collection)

வியக்க வைக்கும் ’வாயேஜர்’:

’வாயேஜர்’ தற்போது, கூகுள் எர்த்தின் டெஸ்க்டாப் பதிப்பில் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதன் மூலமாக உலகில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களை உடனே அணுக முடியும்.

மேலும், ’வாயேஜர்’ சேவை, ஐந்து பகுதிகளில் கிடைக்கின்றது.

1. வீதிக் காட்சிகள் (Street View) - உலகின் முக்கிய நகரங்களின் வீதிகளின் தோற்றத்தை 360 டிகிரி கோணத்தில் கண்டு ரசிக்க முடியும்.

2. புவி வரைபடம் (Earth View)- விண்ணில் இருந்து பூமியைப் பார்க்கும் அனுபவத்தைப் பெற முடியும்.

3. 3D நகரங்கள் (3D cities) - முப்பரிமாண நோக்கில் பார்க்கப்படக் கூடிய நகரங்களின் பட்டியலை தருகிறது

4. அன்றாட செயற்கைக் கோள் வரைபடம் (Satellite imagery updates) : பல்வேறு பகுதிகளின் அப்போதைய வானிலையை அறிய உதவும்.

5. உலகின் முக்கிய இடங்களின் சிறப்புப் பார்வை (Highlight tour)

1,500 பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளின் தொகுப்பு :

கூகுள் எர்த்தின் மற்றொரு புதிய அம்சமான ’உலக வரைபட தொகுப்பு’, உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள 1,500 பிரம்மாண்ட நிலப்பரப்புகளின் புகைப்பட தொகுப்பை அளிக்கின்றது. இதை மக்கள் வெப் கேலரி (web gallery) அல்லது குரோம் எக்ஸ்டன்ஷன் (Chrome extension) மூலம் காணலாம்.

மேலும் இதுவரை பணம் செலுத்தி பெறும் சேவையாக இருந்த 'கூகுள் புரோ' எனப்படும் அம்சம் தற்போது இலவசமாக்கப்பட்டுள்ளது. கூகுள் எர்த்தின் இந்த புதிய அம்சங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கூகிள் எர்த் ப்ரோ டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Google Pro Earth for Free

கூகிள் எர்த் ப்ரோ பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்.

கூகிள் எர்த் பற்றிய சுவராஷ்ய தகவல்கள்: 

கூகிள் எர்த் பார்த்திருப்போம். அதில் எர்த் லைவ் கூட தற்பொழுது உண்டு. கூகிள் எர்த்திற்கான படங்களை எடுத்துத் தள்ளும் சாட்டிலைட் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

கூகிள் எர்த் மூலம் நாம் பார்க்கும் படங்களை அந்த சாட்டிலைட்கள் எடுத்து அனுப்புகின்றன.

முதன் முதலில் கூகிள் எர்த் படங்கள் இந்த சாட்டிலைட் (Quick Bird) மூலம்தான் பெறப்பட்டது.

satellite for google earth
Quick Bird Satellite (Image credit @DigitalGlobe)
கூயிக் பேர்ட் (Quick Bird) விண்ணில் ஏவப்பட்ட நாள் அக்டோபர் 18, 2001
இதற்கு அடுத்து அனுப்பட்ட சாட்டிலைட் WorldView I.
இது புதிய தொழில்நுட்படதுடன் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. ஏவப்பட்ட நாள் செப்டம்பர் 18, 2007.
இதற்கு அடுத்து ஏவப்பட்ட செயற்கைகோள் WorldView II.

கூகிள் எர்த் படங்களை கீழுள்ள நிறுவனங்கள் - இமேஜரி சப்ளையர்ஸ் - Imagery suppliers மூலம் வாங்குகிறது.

http://www.spatialenergy.com/
http://www.digitalglobe.com/
http://www.geoeye.com/CorpSite/
http://www.satimagingcorp.com/gallery.html
http://www.usgs.gov/pubprod/aerial.html


கூகிள் எர்த்தில் மறைக்கப்பட்ட பகுதிகள்:

உலகத்தின் மூலை முடுக்கை கூட கூகிள் எர்த் வழி பார்க்கலாம் என்று தான் இத்தனை நாட்களாக நினைத்திருப்பீர்கள். ஆனால் உலகின் குறிப்பிட்ட பகுதிகளை பார்க்க முடியாதவாறு கூகிள் எர்த் மறைத்து வைத்துள்ளது. உதாரணமாக வடகொரியா. ஈராக்கில் உள்ள பாபிலோன் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேலும்,

 • Baker Lake, NU, the Inuit nation in northern Canada
 • Ramstein Air Force Base, Germany
 • Pacific Northwest, USA
 • Szazhalombatta Oil Refinery, Hungary
 • Huis Ten Bosch Palace, Netherlands
 • Unknown area, Russia
 • Mobil Oil Corporation, Buffalo, NY, USA
 • North Korea
 • Reims Airbase, France
 • Indian Point Power Plant, New York, USA
 • Volkel Airbase, Netherlands
 • HAARP Site, Gakona, Alaska, USA
 • Babylon, Iraq
 • Tantauco National Park in Chile
 • "The Hill" aka Elmira Correctional Facility
கூகிள் எர்த்தில் மறைக்கப்பட்ட பேக்கர் ஏரி - வட கனடா. 

hiding part of northern Canada
Baker Lake - வட கனடா

போன்ற பகுதிகள் கூகிள் எர்த்திலிருந்து மறைகப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய கூகிள் எர்த்தில் குறிப்பிட்ட பகுதியின் பெயரை காப்பி பேஸ்ட் செய்து சர்ச் செய்து பார்த்தால் அந்த பகுதி மறைக்கப்பட்டிருப்பது (Hide) தெரியும்.

கூகிள் எர்த்திற்கு படங்கள் எடுக்க செயற்கை சுற்றும் முறையை பாருங்கள்.

வீடியோ :மேலும் சில கூகிள் எர்த் பற்றிய தகவல்கள் பதிவில் எதிர்காலத்தில் சேர்க்கப்படும். உங்களுக்கும் கூகிள் எர்த் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்தால் கமெண்ட் வழியாக தெரிவிக்கவும்.

கூகிள் தரிசனம் கோடி புண்ணியம்

- Wednesday, September 25, 2013 1 Comment
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்...

தற்காலத் தொழில்நுட்ப இணைய உலகில் கூகிள் தரிசனமும் கோடி புண்ணியம் என்பேன். 

காரணம் அந்தளவிற்கு பயன்மிக்க சேவைகளை கூகிள் வழங்கி வருவதுதான். கூகிள் தளத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் தேவையான தகவல்களை, சேவைகளை இலவசமாக கொடுக்கிறது கூகிள்...

கூகிளைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது தரும் இலவச சேவைகளைப் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். பொதுவாக நாம் பயன்படுத்தும் ஜிமெயில், கூகிள் ப்ளஸ், பிளாக்கர் தளங்களைச் சொல்லலாம். 

தமிழில் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமே இந்த கூகிள் பிளாக்கர் தளம் தான். இலவசம் மற்றும் யூசர் ப்ரண்ட்லியாக இருப்பதே இதனுடைய வெற்றிக்கு அடிப்படைக் காரணம். 
google-now-apps-for-android-smartphone-for-free
இப்படிப்பட்ட கூகிள் சேவைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள இப்பொழுது ஒரு புதிய அம்சங்கள் கொண்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்  கொண்டுவந்துள்ளது கூகிள்.

கூகிள் நவ் என்ற இந்த புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மொபைல் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அப்ளிகேஷன் மூலம் பல்வேறு பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ள முடியும். 

உதாரணமாக சொல்வதெனில் அருகில் உள்ள ரெஸ்டாரெண்ட், பிளைட் டிக்கெட் ரிசர்வேஷன், அருகிலுள்ள நண்பர்களின் வீடுகளை கண்டறிய இப்படி நிறைய பயனுள்ள வசதிகளை, தகவல்களை கண்டுபிடிக்கலாம். 

கூகிள் நவப் அப்ளிகேஷனின் முக்கியமான பயன்கள்:


1. நீங்கள் கூகிள் தேடலில் ஏதாவது சினிமாவைப் பற்றியோ அல்லது நடிகை-நடிகர்கள் பற்றியோ அல்லது  மியூசிக் ஷோ, டிவி ஷோ போன்றவைகளைத் தேடும்போது அதைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். 

கிடைக்கும் அந்த தகவல்கள் பற்றி புதியதாக ஏதேனும் அப்டேட் செய்தால், அப்டேட் செய்யப்பட்ட புதிய தகவல்களை உங்களுக்கு நினைவுப்படுத்தும் வசதியை இந்த அப்ளிகேஷன் மூலம் பெற முடியும். 

அதற்கு நீங்கள்  அந்த வசதியில் enable கொடுத்துவிட்டால் போதும். 

படத்தைப் பார்த்தால் தெளிவாக புரியும். 

கூகிள் நவ் அப்ளிகேஷனில் உள்ள commute Sharing வசதி மூலம் நீங்கள் இருக்கும் லொக்கேசனை உங்கள் நண்பர்கள் அல்லது வீட்டிற்குத் தெரியப்படுத்தலாம். 

இக்கட்டான சூழலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கும்பொழுது (உ.ம் டிராபிக்ஜாம், கலவரப் பகுதிகள்) உடனடியாக நீங்கள் இருக்கும் லொகேசனை உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்த பயன்படுகிறது இந்த வசதி.  

விமானம் அல்லது தொடர்வண்டி பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய ஜிமெயிலைப் பயன்படுத்தி இருந்தால் அதை பற்றிய உறுதிசெய்யும் மின்னஞ்சல்கள் உங்களுக்கு வரும். 

அதுபோன்ற மின்னஞ்சல்களை கூகிள் நவ் மூலம் ஜிமெயில் கார்ட்டை அணுகினால் அவற்றை முக்கியமான மின்னஞ்சல்களாக பதிந்துகொள்ளும்.

வாய்ஸ் ஸ்பீச் வசதி: 

கூகில் நவ் அப்ளிகேஷனின் மெனுவில் செட்டிங்ஸ=>வாய்ஸ் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் Voice Speech வசதியை உயிர்பித்துக்கொள்ளலாம். 

கூகிள் நவ் அப்ளிகேஷன் மூலம் ஏற்கனவே நீங்கள் கூகிள் ப்ளசில் பகிர்ந்த தேடிப் பெற முடியும்.

உங்களிடம் ஸ்மார்ட் டிவி இருந்ததெனில் அந்த ஸ்மார்ட் டிவி கனெக்ட் செய்யபட்ட வை-பை (Wi-Fi) கனெக்சனுடன் கூகிள் நவ் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் சாதனத்தையும் இணைக்க முடியும். 

அவ்வாறு இணைப்பதால் ஸ்மார்ட் டிவியில் ஓடும் நிகழ்ச்சிப் பற்றிய தகவல்களை உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்திலும் பெற முடியும். இதற்கு உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தை வை-பையில் இணைத்து லிசன் டூ டிவி (Listen to TV)  என கூற வேண்டும். 

கூகிள் நவ் அப்ளிகேஷனை உங்களுடைய கணினியில் உள்ள கூகிள் குரோம் பிரௌசர் மூலம் இணைத்து  பயன்படுத்த முடியும். 

இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துகொள்ள : Google.com ல் Download Google Now Apk for Android Smartphone என தேடி.. நம்பகமான தளத்திலிருந்து அப்ளகேஷனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். 

Google Now apk is a powerful and intuitive assistant app developed for Google’s Android OS. 
Tags: google now apk, google now apps for free, google now apps specification, feature of google now apps,