Latest Posts
Browsing Category "apple"

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் OS மாற்றத்தால் பயனர்கள் அதிர்ச்சி

- Friday, April 13, 2018 No Comments

ஸ்மார்ட்போன் தயாரித்து வழங்கி வந்த Apple நிறுவனம், அதே போன்று  Smart Watch களையும்  தயாரித்து வழங்கியது.

அது இயங்குவதற்கென தனி OS இருந்தது. WatchOS எனப்படும் அந்த இயங்குதளத்தின் புதிய பதிப்பு தற்பொழுது வெளிவந்துள்ளது.

அதில் சில முக்கியமான செயலிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனால் ஏற்கனவே அந்த Application களை பயன்படுத்தி வந்த பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அதற்குத் தீர்வாக, புதிய WatchOS 5 - ல் பழைய செயலிகள் இயங்காது எனினும் அச்செயலிகளின் புதிய பதிப்புகள் அனைத்தும் இதில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வாட்சில் பயன்படுத்திய அப்ளிகேஷன்களின் புதிய பதிப்புகளை அப்டேட் செய்துகொள்வதன் மூலம்  அச் செயலிகளை புதிய வாட்ச் ஓஸ் 5-ல் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: apple, smart watch, watch os.

ஸ்மார்போனை கைபடாமல் இயக்கும் தொழில்நுட்பம் [Touchless Gesture Technology]

- Friday, April 06, 2018 No Comments
தொட்டு தொட்டு இயக்கியதால் ஸ்மார்ட் போனை "டச் போன்" என்று அழைத்து வந்தனர். இனி, தொடமாலே அதை இயக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாக உள்ளது.

Touchless Gesture Controls எனும் புதிய தொழில்நுட்பம் தான் அது.

iphone touchless technology


ஐபோன்களில் இருக்கும் 3D Touch தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது போல இந்த Touchless Gesture தொழில்நுட்பம் அதிக பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் அவ்வப்பொழுது புதிய தொழில்நுட்ப முறைகளை சோதித்து வருகிறது. இதற்கு முன்பு, கண்ணுக்குத் தெரியாத வளைந்த திரை கொண்ட Display தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருந்தது.

இனி, எதிர்வரும் காலத்தில் ஆப்பிள் போன்கள் டச்லெஸ் கெஸ்ட்சர் தொழில்நுட்பம், சாம்சங் ஸ்மார்ட்போன் போன்று வளைந்த அம்சம் கொண்ட திரைகள் என பல புதிய அம்சங்களுடன் தான் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.


Tags: iPhone, touchless gesture controls, curved screens, New Technology.

Apple shows what's coming in iOS 11.3: battery control and more Animojis

- Wednesday, January 24, 2018 No Comments
Apple gave a sneak peek at its next iPhone operating system update and it features more Animojis (for owners of iPhone X) -- and for almost everyone, a much-discussed option to turn off a slowdown feature for older batteries. 

Version 11.3 of the iOS software that Apple previewed Wednesday introduces a dragon, bear, skull and lion, as four additional Animoji characters -- the animated emojis that take over your voice and mirror your facial expressions -- bringing the grand total to 16.

Apple shows what's coming in iOS 11.3


But iOS 11.3 addresses a very different, and for many users, more important consideration, by adding a power management tool that clues you in when the iPhone’s battery is about to poop out. It also gives you the ability to turn off a feature that slows down the phone when the battery reaches critical status, which Apple put in place to prevent the device from unexpectedly shutting down.

Continue reading

ஆப்பிள் வாட்ச் ரூபாய் 13000 வரை தள்ளுபடி !

- Saturday, October 14, 2017 No Comments
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் "ஐபோன் 8" , 'ஐபோன் 8 ப்ளஸ்' போன்களை வெளியிட்டு அதகளப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஆப்பிள் 3 சீரிஸ் வாட்சுகளை வெளியிட்டு அசத்தியது.

தற்பொழுது ஐபோன் 8 உடன் அசத்தல் தொழில்நுட்பத்துடன் வெளிவந்திருக்கும் "ஆப்பிள் வாட்சு" களை அதிரடி சலுகை விலையில் பெறலாம்.

apple watch 3 series offer


இந்த வாட்சுகளில் "Call" செய்யும் வசதி உண்டு.

31,900 ரூபாய்க்கு விற்படும் ஆப்பிள் 3 சீரிஸ் வாட்சுகள் ஐபோன் 8 அல்லது ஐபோன் 8 ப்ளசுடன் வாங்கும்போது 13,000 ரூபாய் தள்ளுபடி விலையில் பெறலாம்.

இதை ஐ-வேர்ல்டு ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் பெற முடியும். இந்த ஆஃபர்கள் சிட்டி பேங்க டெபிட் அல்லது கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பெற முடியும்.

இதே வாட்சுகளை iPhone 7 அல்லது iPhone 7 ப்ளஸ் உடன் சேர்த்து வாங்கும்போது ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் ரூபாய் 8000 முதல் 10000 வரை சலுகை விலையில் பெற முடியும்.

iPhone 6S அல்லது iPhone 6S plus உடன் வாங்கும்போது சலுகை விலை ரூபாய் 3500 ரூபாய் முதல் சுமார் 4500 வரை கிடைக்கும்.


Apple iPhone 5C விலை குறைப்பு

- Thursday, February 27, 2014 No Comments
Apple iPhone-கள் மிக பிரபலமானவை. அதிக வசதிகள், அதிக தரம், அதற்கேற்ற விலையில் கிடைப்பவை. தற்பொழுது Apple iPhone 5C மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் Original Rate 41,900 லிருந்து 36,899 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

பிரபல Amazon Online Store - ல் இதுகுறித்த தகவல்கள் உள்ளன. Apple iPhone 5C ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. White Color Phone ரூபாய் 39,250 ம், மஞ்சள் நிற போன் ரூபாய் 37,149 க்கும் கிடைக்கிறது.
Apple-iPhone-5C-with-A6-Processor-and-Nano-SIM
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிலிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் (Flipkart, Snapdeal, Amazon) விற்பனை இணையதளங்களில் கிடைக்கிறது.

இதையும் வாசிக்கலாமே..!: ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு பயனுள்ள குறிப்புகள்

ஐபேட் ஏர் - புதிய டேப்ளட் பிசி !

- Saturday, December 07, 2013 No Comments
உலக மக்கள் அனைவருமே அறிவர் "ஆப்பிள் என்றால் ஐபாட்.." "ஐபாட் என்றால் ஆப்பிள்தான்" என்று. மிகப் பிரபலமான இந்நிறுவனம் தனது புதிய படைப்புகள் இரண்டினை வெளியிட்டுள்ளது.

1. iPad Air
2. iPad Mini

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த இரண்டு ஐபாட்களிலும் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றின் பயன் என்ன என்பதை   கீழே பார்ப்போம்.

apple-ipad-air-ipad-mini-with-retina-display-available-in-indiaஆப்பிள் iPhone 7 பயன்படுத்திட டிப்ஸ் !

- Monday, November 11, 2013 No Comments
ஆப்பிள் ஐபோன் விலை அதிகம். தரம் உயர்தரம். அதிக விலை கொடுத்து வாங்கிய iPhone 7 பயன்படுத்துவதில் கூட சில சிக்கல் உண்டு. சில செட்டிங்ஸ்களை செய்வதன் மூலம் அந்த பிரச்னைகளை சுலபமாக தீர்த்திடலாம். "ஆப்பிள் ஐபோன் 7" பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பின்பற்றினால் Apple iPhone 7 பயன்படுத்துவது எளிது.

apple iPhone settings


1. டெக்ஸ் மெனுவை போல்டாக்குல் (Make the menu text bolder)

புதிய iOS இயக்க முறைத் தோற்றமானது பார்ப்பதற்கு ஓரளவிற்கு சுமாராக இருக்கும். அதை சூப்பராக மாற்ற கீழ்கண்ட செட்டிங்ஸ் செய்திடுங்கள். அப்படி செய்வதன் மூலம் System Menu மற்றும் Features களை பெரியதாக மாற்றிடலாம்.

ஐபோனில், 

 • Settings என்பதை தட்டுங்கள்..
 • General என்பதை தட்டுங்கள்...
 • Accessibility என்பதை தட்டுங்கள்..
 • Bold Text என்பதை உயிர்ப்பியுங்கள்...
அவ்வளவுதான். இப்பொழுது உங்களது ஆப்பிள் சாதனம் Restart ஆகும். பிறகு உங்களது ஆப்பிள் போனில் features மற்றும் text மெனுக்கள் நன்றாக தெளிவாக காட்சியளிக்கும்.

2. வேண்டாத எண்களை பிளாக் செய்வது (Block phone calls frm idividual numbers)

குறிப்பிட்ட போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளை நீங்கள் தடை செய்ய முடியும். இந்த வசதியை செயல்படுத்த,
 • Phone app திறக்கவும்.
 • திரையில் கீழுள்ள Recents டேபை தட்டவும்.
 • சிறிய "i" என்பதை தட்டி உங்களுக்கு வந்த அழைப்பு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்...
 • அந்த பக்கத்தை Scroll down செய்யவும்.
 • இறுதியில் Block this Caller என்பதை தட்டவும்.

3. வேண்டாத அப்ளிகேஷனை பிளாக் செய்வது.. (Black unnecessary Apps cellular data)

உங்கள் ஆப்பிள் ஐபோன் அல்லது ஐபேட்டில் உள்ள வேண்டாத அப்ளிகேஷனை நீக்க புதிய Apple iOS 7 System வழிவகுக்கிறது. உங்களுடைய இண்டர்நெட் பில்லை எகிற செய்யும் வேண்டாத அப்ளிகேஷனை கண்டறியும் வகையில் இதில் வசதிகள் உள்ளது. ஒவ்வொரு அப்ளிகேஷனும் எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறது என இந்த புதிய சிஸ்டம் வரிசைப்படுத்திக் காட்டும். 

அதிலிருந்து உங்களுக்கு வேண்டாத அல்லது அதிகம் பயன்படுத்தாத, அல்லது பயனில்லாத அப்ளிகேஷனை நீக்க முடியும். 

அதற்கு, 

settings என்பதை தட்டவும்.
 • Cellular என்பதை தட்டவும்.
 • Scroll Down செய்யவும்.
 • Use Cellular Data For என்ற தலைப்பின் கீழாக...
 • நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை ஒவ்வொன்றும் எவ்வளவு டேட்டாக்களைப் பயன்படுத்துகின்றன என்பதை வரிசைப்டுத்தி காட்டும். 
 • வேண்டாத அப்ளிகேஷனை "Off" கொடுத்துவிடுங்கள்..
 • இனி ஆப் செய்த அந்த அப்ளிகேஷன் இன்டர்நெட் அணுகலை மேற்கொள்ளாது. 
Tags: apple, ios, ios7, apple ios7, smartphone tips, smartphone, tips and tricks, tips for apple ios7 users, basic tips for apple ios7 system users.

ஆப்பிளின் புதிய ஐவாட்ச் - சிறப்புத் தகவல்கள்

- Tuesday, July 02, 2013 2 Comments
ஆப்பிளின் அடுத்த படைப்பு Apple i Watch. 

இந்த ஆண்டில் இறுதியில் இப்புதிய படைப்பு வெளியிடப்பட்டுவிடும் என ஆப்பிள் நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஆப்பிள் ஐ வாட்சில் ஐபெட் நானோ GF2 Touch Technology , Application Processor ஆகியவைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

apple iWatch will release soon

ஆப்பிள் ஐவாட்சில் 1.5/2  inch touch screen இடம்பெறும். இதனுடைய அமைப்புகள் ஐபெட் நானோ ஸ்மார்ட் போனின் வடிவத்தை ஒத்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஆப்பிள் அல்ட்ரா ஸ்லிம் ஐபாட் - சிறப்பம்சங்கள்

- Saturday, June 01, 2013 No Comments
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய பதிப்பு ஐபாட் டச் 16 ஜிபி ( iPod touch 16gb ultra slim ) கடந்த வியாழன் அன்று விற்பனைக்கு கொண்டு வந்தது. இது ஆப்பிளின் முந்தைய ஐபோட் டச் (32/64)விட விலையில் குறைந்தும், உருவத்தில் மெலிந்தும், எடை குறைந்தும் காணப்படுகிறது.

$ 229 டாலர் விலையுள்ள இந்த புதிய ஐந்தாம் தலைமுறை ஐபாட் டச் 16 ஜிபி  4-Inch Retina டிஸ்பிளேயுடன் dual-core A5 processor உடன் வெளிவந்திருக்கிறது. இதில் முகப்பு கேமரா (Front) இல்லை என்பது மட்டுமே சிறிய குறை என்றாலும், மற்ற ஐபோட் டச் களை ஒப்பிடும்பொழுது, விலையிலும் சரி.. பயன்பாட்டிலும் சரி.. அதிக வசதிகளைக் கொண்டுள்ளது. 

 iPod touch 16gb ultra slim specifications
Image credit: Apple.

அதாவது மிகக் குறைந்த எடையுடன் மிகவும் மெலிதாக (Ultra Slim) வடிவமைக்கப்பட்டுள்ளது. மியூசிக், மெசேஜஸ், வெப்சைட் மற்றும் கேம்ஸ் ஆகியவற்றிற்கு அசத்தலான காட்சியமைப்பை கொடுக்கும் 4-இன்ச் ரெட்டினா டிஸ்பிளேயை கொண்டுள்ளது.


8 மணி நேரம் வீடியோ பார்க்ககூடிய வசதி , 40 மணிநேரம் தொடர்ந்து மியூசிக் பிளேபேக் வசதியுடன் கூடிய  பவுர்புல் Dual-core A5 chip கொண்டுள்ளது.

இப்புதிய ஐபாட் டச் 16 GB வாங்குபவர்களுக்கு 90 நாட்களுக்கான தொலைபேசி வழி டெக்னிகள் சப்போர்ட்டும், ஒரு வருடத்திற்கான நிபந்தனையுடன்  கூடிய வாரண்டியும் உள்ளது.

ஆப்பிளின் புதிய iPod touch 16GB ($229) சிறப்பம்பசங்கள் ஆங்கிலத்தில் கீழே.

 iPod touch 16GB ($229) Specifications:


 • Ultra-slim design
 • 4-inch retina display
 • Dual-core A5 chip (Processor)
 • Apple Earpods
 • Lightning to USB Cable
 • Quick Start guide
 • 16 GB capacity
 • Bluetooth 4.0
 • 1.2 MP Face Time HD camera
 • Face detection
 • lightning connector
 • 3.5-mm stereo headphone jack
 • microphone
 • External Buttons and Controls

மேலும் மதிப்பு மிக்க வசதிகளுடன் வெளிவந்துள்ள இப்புதிய ஐபாட் ஆப்பிள் ஸ்டோர் தளத்தில்ஆன்லைனில் கிடைக்கிறது.

நம்மை விட்டுப் பிரிந்தார் ஆப்பிளின் Steve Jobs..!!

- Thursday, October 06, 2011 No Comments

இந்த செய்தியை இங்கே பகருவதில் பொருத்தமாகவே இருக்கும்.. இன்று ஒரு கறுப்பு தினமாகவே கடைப்படிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு.. ஆம். நண்பர்களே.. நமது இளவட்டங்கள் முதல் பெரியவர்களின் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் ஐபாட், ipad player -ஐ உருவாக்கியவரும், பிரபல தொழில்நுட்ப வல்லுநருமான ஸ்டீவ் ஜாப்(Steve Jobs) மறைந்தார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது நமக்கு.

steve job-apple ipod