Latest Posts
Browsing Category "antivirus software"

IObit - மால்வேர் ஃபைட்டர் மென்பொருள்

- Monday, January 08, 2018 No Comments
IObit Malware fighter protects  computer from malware programming attacks. it is useful program for every PC users and mobile users.

மல்வேர் ஃபைட்டர் மென்பொருள் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு இதை தெரிந்துகொள்வோம். இயற்கையில் ஒரு சீற்றம் ஏற்பட்டால், அது குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு பெரிய விபத்து போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் இயற்கையாகவே அது பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.

மலேசிய விமானம் காணமல் போனபோது, அதை வைத்து ஹேக்கர்கள் சில சதி செய்தார்கள். அது என்ன தெரியுமா? காணாமல் போன மலேசிய விமானம் பெர்முடா முக்கோணப் பகுதியில் விழுந்ததுள்ளதாகவும், அதில் பயணித்த அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர் எனவும் ஒரு வீடியோ லிங்கை அனுப்பி இருந்தார்கள்.

அதை கிளிக் செய்தவுடன் உங்களைப் பற்றிய விபரங்களை பதிவிடுங்கள், அதன் பிறகே வீடியோ ப்ளே ஆகும் என கண்டிசன் போட்டிருந்தார்கள். பல ஆயிரக்கணக்கோர் வீடியோவை பார்க்கும் ஆர்வத்தில் விபரங்களை கொடுத்துவிட்டனர். அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா?

அவர்கள் இணையத்தில் பதிவு செய்யும் அனைத்து தகவல்களும் திருடப்பட்டன. விபரம் புரியாமல் ஆர்வ கோளாறில் சொந்த தகவல்களை பகிர்ந்தவர்களின் நிலை பரிதாபமாகிவிட்டது.

இப்படி ஆர்வத்தை தூண்டும் வகையில் ஹேக்கர்கள் சில தகவல்களை பரப்பி அதனூடாக தவறான வெப்சைட்டுகளுக்கு விசிட்டர்களை வர வழைப்பது, அவர்களிடம் தகவல்களை திருடுவது, அந்த இணைப்பின் வழியாக மால்வேர் போன்ற புரோகிராம்களை கம்ப்யூட்டரில் இறக்கிவிடுவது என பல ஜிகினா வேலைகள் எல்லாம் செய்துவிடுவார்கள்.

கடைசியில் அனைத்து பாதிப்புகளும் பயனர்களை வந்து சேரும். எனவேதான் ஒரு கம்ப்யூட்டர் அல்லது ஆன்ட்ராய்ட் போன் எப்பொழுதும் பாதுகாப்பு கருதி கண்டிப்பாக ஒரு ஆன்ட்டி வைரஸ் / மால்வேர் தடுப்பு மென்பொருள் ஒன்றினை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

அதுபோன்றதொரு மென்பொருள்தான் IObit Malware Fighter.

கணினி பயனர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் ஆன்லைன் அட்டாக்கிலிருந்து காத்திட பயன்படும் செக்யூரிட்டி இரகசிய காப்பு மென்பொருள்  ஆக இது செயல்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டருக்கு Petya  மற்றும் oldenEye போன்ற ரேன்சம்  மால்வேர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளில் அடிப்படை வசதிகள் உண்டு. கட்டணம் செலுத்தி பெறப்படும் மென்பொருளில் மேலதிக வசதிகள் இடம்பெற்றுள்ளன.


டவுன்லோட் செய்ய சுட்டி:


IObit Malware Fighter is a security & privacy software package that is designed to protect casual web users and corporations from online attacks. Use it to prevent malware such as Petya and GoldenEye from ransoming the use of your PC.

கணினி, மொபைல் போனை பாதுகாத்திடும் Avast Antivirus software !

- Friday, February 14, 2014 No Comments
Avast is the best security software for computer and mobile phone to protect from virus Attack.

வைரஸ் தாக்குதல்களிலிருந்து கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்றவற்றை பாதுகாத்திட பயன்படும் ஆன்டி- வைரஸ் மென்பொருள் Avast Antivirus.

வைரஸ்களை கண்டறிவதற்காக இதன் கட்டமைப்பு  சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு Anti virus மட்டுமின்றி Anti-Malware புரோகிராமாகவும் செயல்படுகிறது.

இம் மென்பொருளின் டேட்டாபேஸ் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது. இதனால் இணையத்தில் எந்த ஒரு புதிய வைரஸ் பரவினாலும், அதை தடுத்தி நிறுத்தி கணினி/மொபைல் போன்களை பாதுகாக்கிறது.

Avast Antivirus software 2014 for all devices

வைரஸ், மால்வேர் புரோகிராம்களை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, Trojan மற்றும் root-kit detector தாக்குதல்களிலிருந்தும் கணினியைப் பாதுகாக்கிறது.

வாசியுங்கள் இன்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் Avast Pro 6

நீங்கள் பிரௌஸ் செய்திடும்பொழுது links களை செயலாக்கத்துடன் ஸ்கேன் செய்து வைரஸ் மற்றும் தீங்கிழைக்கும் புரோகிராம்களிலிருந்து கணணியை பாதுகாக்கிறது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள்.

1. User Friendly
2. Anti-spyware built-in
3. anti-rootkit built -in
4. Strong self-protection
5. Antivirus kernel
6. Simple User Interface
7. Enhanced User Interface
8. Resident protection
9. Script Blocker
10. P2P and IM Shields
11. Web Shield
12. Automatic updates
13. PUSH updates
14. Virus Chest
15. System integration
16. Command-line scanner
17. Integrated avast! Virus Cleaner
18. Support for 64-bit Windows


Tablet PC, Android Mobile, Laptop, Desktop போன்ற அனைத்துவித சாதனங்களுக்கும்  Avast Antivirus Software கிடைக்கிறது. கட்டண மென்பொருளும் உண்டு.

Avast Pro antivirus Free Trail Download செய்ய சுட்டி கீழே:

Start download Here : http://www.avast.com/en-in/index

Tags: Avast Antivirus, Free software, Avast Free Trial Software.

கம்ப்யூட்டர் அக்கவுண்டிங் மென்பொருட்கள் !

- Saturday, July 06, 2013 2 Comments
மென்பொருள் தகவல்கள்.. ( Useful Software information and download links)

இந்த பதிவில் ஒரு மென்பொருள்கள் பற்றிய தகவல்களைக் காண்போம். 

1. உங்கள் கணினியைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள (Computer Data Details Software )


உங்கள் கணினியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இம்மென்பொருள் பயன்படும். அதாவது கணினியில் உள்ள புரோகிராம்கள், நிரல்கள் (codes), துணை நிரல்கள் (Supporting programs), இயக்கிகள் (Drivers), இணைப்புகள்(links), நீக்கிகள்(Uninstaller) ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை துல்லியமாக கண்டறிய பயன்படும்.

இம்மென்பொருள் சி.நெட் தளத்தில் தரவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

தரவிறக்கச் சுட்டி: http://download.cnet.com/System-Explorer/3000-2094_4-10784281.html

2. கணக்குப் பார்க்க உதவும் Accounting Software:

இந்த மென்பொருள் சிறிய அளவிலான தொழில் செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆரம்ப கட்ட தொழில் செய்யும் சிறிய நிறுவனங்களுக்கு (Small Company) மிகப் பொருத்தமானகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்கும். 

இணையத்தின் மூலம் இந்த அக்கவுண்டிங் மென்பொருளைப் பயன்படுத்த முடிவதால், நீங்க எந்த இடத்தில் இருந்தாலும் இதன் மூலம் உங்களுடைய நிறுவனத்தின் கணக்குகளை செய்ய முடியும். 

தளத்தின் முகவரி: http://www.numia.biz

இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்துகொண்டவுடன் நீங்கள் உங்களுடைய நிறுவனத்திற்கான கணக்குகளை செய்ய முடியும். மேலதிக விபரங்களுக்கும், புதியவர்களுக்கும் இத்தளத்தில் உள்ள வீடியோ டுடோரியல் உதவும். 

3. கிளவுட் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Cloud Software): 


பெருகிவரும் கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே வைரஸ்களையும் அதி விரைவாக பரப்பி வருகின்றனர். எதிர்காலத்தில் கிளவுட் தொழில்நுட்பமே (Cloud Technology) நிலைக்கும் என்ற நிலையில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வைரஸ்கள் பரவாமல் தடுக்க ஏற்கனவே நிறைய ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவனங்கள் அதற்கான மென்பொருளை தயாரித்து வெளியிட ஆரம்பித்துவிட்டன. 

அதுபோன்றதொரு ஒரு மென்பொருளை பாண்டா நிறுவனமும் தயாரித்து, பரிசோதித்து வெளியிட்டிருக்கிறது. பாண்டா நிறுவனத்தின் மூலம் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இது முற்றிலும் இலவசமே..!

கிளவுட் ஆண்டிவைரஸ் மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: http://acs.pandasoftware.com/cloud/PandaCloudAntivirus.exe

4. உங்களுடைய கோப்புகளை எவரும் அணுக முடியாமல் பாதுகாக்கும் மென்பொருள் (Document Protection Software): 


இந்த மென்பொருள் உங்களுடைய கோப்புகளை உங்களைத்தவிர வேறு யாருமே பயன்படுத்த முடியாதபடி செய்கிறது. உங்களுடைய கோப்புகள், கணியில் இருந்தாலும் சரி... பென்டிரைவில் இருந்தாலும் சரி.. அல்லது சிடி, டிவிடி யில் இருந்தாலும் சரி.. எதில் நீங்கள் வைத்துக்கொண்டாலும், அந்தக் கோப்புகளை உங்களைத் தவிர வேறு யாராலும் பயன்படுத்த முடியாதபடி மென்பொருளின் ஒரு டிரைவை உருவாக்கி "பாஸ்வேர்ட்" கொடுத்து பாதுகாக்கலாம். 

மென்பொருள் தரவிறக்கம் செய்ய சுட்டி: http://www.truecrypt.org/downloads

இந்த இணைப்பில் சென்று உங்கள் கணினிக்கான மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். மென்பொருளைப் பயன்படுத்துவது குறித்த சந்தேகங்களுக்கு தளத்தில் இடம்பெற்ற Screen shot, FAQ  பகுதிகளை நாடலாம். மேலதிக தகவல்கள் தேவைப்படின் கருத்துரை வாயிலாக தொடர்புகொள்ளுங்கள். 

நன்றி. 

- சுப்புடு

Hi, friends, in this post, I give details about very important free trial software for basic computer users. It is free to download.  Some Software is paid software. You should pay money to get that Original software through online using your credit card or any method of online transaction.