Latest Posts
Browsing Category "android game"

5 மிகச்சிறந்த ஆன்ட்ராய்ட் கேம்ஸ் - 2017

- Friday, December 15, 2017 No Comments
வருட கடைசி ஆகிவிட்டாலே இதுபோன்ற புள்ளி விபரங்கள் வெளியிடப்படுவது இயல்புதான். இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆன்ட்ராய் & டேப்ளட் கேம்ஸ்களாக இவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

best android games 2017


எப்படி சிறந்த கேம் என தேர்ந்தெடுக்கிறார்கள்?

அதிக எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ள அதிக நபர்களால் விளையாடப்பட்ட கணக்கின் அடிப்படையில் ஆண்டின் மிகச்சிறந்த கேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த வகையில் முதலில் இடம்பெற்றுள்ள கேம்

1 Cat Quest

$5 என்ட்ரி பீஸ் கட்டினால் போதும். பிறகு கேமில் புகுந்து விளையாடலாம்.

best android game cat quest


Download Link : Cat Quest


2. Caves (Roguelike)

இது ஒரு மர்ம்மான கேம். விளையாட விளையாட சுவராஷ்யம் கூடி கொண்டே போகும்.

Caves Roguelike best android game


Download Link : Caves (Roguelike)

3. Flipping Legend

இதில் ப்ரீ கேம் விளையாடினால் கண்டிப்பாக அதில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும். 4$ ஒரு முறை கொடுத்து பெற்றுவிட்டால் போதும். விளம்பர இடையூறின்றி விளையாடி மகிழலாம்.

Flipping Legend best android game


Download Link : Flipping Legend

4. Monument Valley 2

விறுவிறுப்பு மிகுந்த இந்த கேம் டவுன்லோட் செய்திட 5$ கொடுத்துப் பெற வேண்டும்.

Monument Valley 2


Download Link : Monument Valley 2


5. Stranger Things: The Game

இது ஒரு அட்வென்சர் கேம்.

stranger things best game


Download Link : Stranger Things: The Game

இந்த வரிசையில் மேலும் சில கேம்ஸ் & டவுன்லோட் லிங்ஸ்




மேலும் சிறந்த  கேம்ஸ் உண்டு. ஒவ்வொரு விளையாட்டும் ஆன்ட்ராய்ட் போனில் மட்டுமே டவுன்லோட் செய்து விளையாட முடியும்.

Tags: Best android phone & Tablet Games, Best android games in this year, 2017 best android games.

ஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் !

- Tuesday, October 24, 2017 No Comments
உலகத்தில் ஒரு திறமையான விளையாட்டு உண்டு என்றால் அது "FootBall" தான். அவ்வளவு எனர்ஜிட்டிக்கான விளையாட்டு அது. திறமைக்கு மட்டுமே அங்கு வேலை. சாதுர்யத்துடன் நல்ல திறமை இருந்தால் அந்த விளையாட்டில் ஜொலிக்கலாம். உலக பிரசித்திப் பெற்ற கால்பந்து விளையாட்டுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு.

கிரவுண்டுக்கு சென்று புட்பால் விளையாட முடியாத எத்தனையோ ரசிகர்கள் மொபைல் போனில் ஃபுட்பால் கேம் விளையாடி தீர்த்துக்கொள்கின்றனர்.

football game app free


நீங்கள் ஒரு புட்பால் பிளேயர் என்றால், உங்களுடைய விளையாட்டு ஆசையை தீர்த்துக்கொள்ள இந்த ஆப்கள் உங்களுக்கு பயன்படும். விதவிதமான டீம்கள், உங்களுக்கு பிடித்த வீர ர்களை தேர்வு செய்து நீங்கள் கேம் விளையாடலாம். அதற்கென பல ஆயிரக்கணக்கான "FootBall Game App" உருவாக்கப்பட்டு Google Play Store - ல் பதிவேற்றப்பட்டுள்ளன. விரும்பிய கேமை நீங்கள் உங்களுடைய போனில் டவுன்லோட் செய்து விளையாடலாம்.

உதாரணத்திற்காக இங்கு சில "ஃபுட்பால் கேம் ஆப்ஸ்" கொடுக்கப்பட்டுள்ளன.

1. World Football League


world football league android app


கூகிள் ப்ளே ஸ்டோரில் 562,628 பேர் இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். 4.5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள இந்த "ஃபுட்பால் ஆப்" சிறந்த கால்பந்து விளையாட்டு அனுபவத்தை கொடுப்பதாக இதைப் பயன்படுத்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Download World Football League

2.  Real Football

real football match app

4 ஸ்டார்கள் பெற்றுள்ள இந்த புட்பால் ஆப் உண்மையிலேயே கால்பந்து விளையாடுவது போன்ற அனுபவத்தை கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Editors' Choice

3. Score! Hero

score hero football app

4.6 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள அருமையான ஃபுட்பால் கேம் ஆப் இது. 540 challenging level இதில் இடம்பெற்றுள்ளது. Pass & Shoot & Goal த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும்.

Download Score! Hero

4. FIFA Mobile Football

FIFA Mobile android Football

இதில் புட்பால் டீமை உருவாக்கி மேனேஜ் செய்து கலக்கலாம். 100 MB அளவே உடைய ஃபிஃபா மொபைல் புட்பால் கேம் ஆப் டவுன்லொட் செய்திட

Download FIFA Mobile Football


5. Dream League Soccer

dream league android app

எல்லாவிதமான டிவைஸ்களுக்கும் பொருத்தமான ஆப் இது. மற்ற கேம்களைவிட சிறந்தது.

Download Dream League Soccer

இது மட்டுமல்லாமல், தற்பொழுது 2018 உலக கோப்பை கால்பந்தாட்டத்தை முன்னிட்டு பல்வேறு விதமான புதிய கேம்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. Google -ல் FootBall Games for Android Phones என தேடினால் ஆயிரக்கணக்கான கேம்கள் டவுன்லோட் செய்து விளையாட கிடைக்கின்றன. அவற்றையும் அதனுடைய Rating, மற்றும் யூசர் கமெண்ட்ஸ் பார்த்து டவுன்லோட் செய்து விளையாடி மகிழுங்கள்.

தொடர்புடைய பதிவு:  "இலவச ஃபுட்பால் கேம்ஸ் டவுன்லோன் செய்ய"

Tags: FootBall, Worldcup Football 218, Football Games for android, Soccer Game for Smartphone.

Stop the Bug: சவாலான புதிய ஆண்டுராய்டு விளையாட்டு

- No Comments
மிகப் பிரபலமான Flappy Bird, Swing copter, விளையாட்டுகளின் வரிசையில் இந்திய கேம் டெவெலப்பர்களின் தயாரிப்பு இந்த “Stop the Bug” விளையாட்டு. இதுவும் முன் கூறிய Flappy Bird விளையாட்டை போலவே சவாலான விளையாட்டு தான் என்று தன்னை நிரூபித்துக் கொள்கிறது.

விளையாட்டு விதி என்வென்றால், ஒரு பூச்சியை உங்கள் மொபைலில் இருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்கும் இங்கும் ஓடும் பூச்சிக்கு முன்னதாக ஒரு கோட்டை வரைகையில், அது வேறு திசை நோக்கி நகர்கிறது. இவ்வளவு தான் விளையாட்டு விதி.

இந்த எளிமையான விளையாட்டில் சவால் என்ன இருக்க முடியும் என்றும் நினைத்தால் ஸ்கோரில் 10 த்தை தாண்டுவது பெரும் பாடாக இருக்கிறது. விளையாட்டில் அவ்வப்போது கிடைக்கும் முட்டைகளை சேகரத்திதால் PowerUp கிடைக்கும். அதனை பயன்படுத்தியே அதிக ஸ்கோர் எடுக்க முடிகிறது.

குறைந்த ஸ்கோர் எடுத்து விளையாட்டில் தோற்றால் அந்த பூச்சி நம்மை பார்த்து சிரிப்பது கடுப்பேற்றுகிறது.

எவ்வளவு நேரம் அந்த பூச்சியை நாம் தொந்தரவு செய்கிறோமோ, அதாவது எவ்வளவு அதிக ஸ்கோர் செய்கிறோமோ அதற்கேற்றார் போல அந்த பூச்சியின் செயல்களும் மாறுவது சுவாரசியமாக உள்ளது.

மற்றபடி பெரிய அளவிலான ஸ்டேஜ்கள் எதுவும் இல்லாமல் பொழுது போக்க சவாலான விளையாட்டு இந்த “Stop the Bug”. தற்போது ஆண்டுராய்டு போன்களுக்கு மட்டுமேயான இந்த விளையாட்டை Google Play Store இன் search bar இல் “stopthebug” என்று இடைவிடாமல் டைப் செய்து தேடினால் கிடைக்கும்.
அல்லது இந்த லிங்க் சென்று இலகுவாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டரில் ஆன்ட்ராய்ட் கேம்ஸ் விளையாட

- Saturday, October 19, 2013 4 Comments
ஆன்ட்ராய்ட் போனில் விளையாட எண்ணற்ற கேம்ஸ்கள் உள்ளன. அவற்றை  கம்ப்யூட்டரில் விளையாட முடியுமா? முடியும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விளக்கங்களை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

கம்ப்யூட்டரில்  ஆன்ட்ராய்ட் போனில் விளையாடக்கூடிய கேம்ஸ் ஆப்களை பயன்படுத்திட ஒரு மென்பொருள் உதவுகிறது Blue Stacks என்ற மென்பொருள். 

how-to-play-android-mobile-games-on-computer-step-by-step-guide
இதன் மூலம் ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தப்படும் வீசாட் அப்ளிகேஷன் மற்றும் வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்களையும் (WeChat and WhatsUp apps) கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். 

எப்படி பயன்படுத்துவது?

1. புளூ ஸ்டாக் அப்ளிகேஷனை டவுன்லோட் - இன்ஸ்டால் செய்யவும்.


2. இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்யவும். 
புளூஸ்டாக் மென்பொருளை நிறுவிய பிறகு, முதலில் புளூஸ்டாக் மென்பொருளை திறக்கும்பொழுது அதனுடைய டேட்டாபேஸ், மற்றும் பகுதி கூறுகள் (Database and Components )லோட் ஆகி வர ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அதுவரைக்கும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். உங்களுடைய இணைய இணைப்பின் வேகத்திற்கேற்ப இந்த நேரம் மாறுபடும். )
3. திறந்த பிறகு அதில் உள்ள My Apps என்பதை கிளிக் செய்யவும். பிறகு அதன் கீழ் இருக்கும் app search என்பதை செலக்ட் செய்யுவும்.


4. செலக்ட் செய்த பிறகு ஒன்டைம் செட்டப் (One time setup) தோன்றும். அதில் கன்டினியூ கிளிக் செய்யுங்கள். 


5. அடுத்து உங்களுடைய கூகிள் அக்கவுண்ட்டில் லாகின் செய்யச்சொல்லிக் கேட்கும். உங்களுடைய கூகிள் அக்கவுண்டின் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்துகொள்ளுங்கள். 


6. பிறகு தோன்றும் சர்ச் பாக்சில் உங்களுக்கு வேண்டிய ஆண்டார்ய்ட் அப்ளிகேஷனின் பெயரைக் கொடுத்து தேடி Download செய்து இன்ஸ்டால் செய்யவும். 


7. இன்ஸ்டால் செய்த பிறகு, அந்த அப்ளிகேஷனை திறக்க, புளூஸ்டாக்ஸில் My apps பட்டனை கிளிக் செய்யவும்.


8. நீங்கள் இன்ஸ்டால் செய்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் அங்கு இருக்கும். அதை கிளிக் செய்து திறந்து பயன்படுத்தலாம். 



இந்த முறையில் கேம் ஆப் டவுன்லோட் செய்து விளையாடலாம். மெசேஜிக் ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக் கூடிய அனைத்து ஆன்ட்ராய்ட் ஆப்களையும் "ப்ளூ ஸ்டாக்" வழியாக பயன்படுத்த முடியும்.

BlueStack குறித்த சில தகவல்கள்

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது BlueStack . உங்களது வசதிக்கேற்ப இதில் உள்ள செட்டிங்ஸ்களை மாற்றி அமைக்கத்துக்கொள்ளலாம். மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய இடைமுகம் (Easy User Interface) கொண்டது. 

ஒரு சில ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும்பொழுது அப்ளிகேஷன் கிராஸ் ஆகிவிட வாய்ப்பும் உள்ளது. காரணம் இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா வெர்சனில் இருப்பதால் இதுபோன்ற வழுக்கள் (Errors) தோன்றுவதும் இயல்புதான்.

முழுமையான புளூஸ்டாக் மென்பொருள் உருவாகும் வரை இதுபோன்ற பிழைகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். 

அதேபோல இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவும்பொழுது, உங்களுடைய கிராபிக்ஸ்கார்டு புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்க வேண்டும் (New Updated Graphics card). மேம்படுத்தல் இல்லாத கிராபிக்ஸ் கார்ட் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய முடியாது.

அதற்கு உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ்கார்ட் மாடலின் பெயரைத் தெரிந்துகொண்டு அதை அப்டேட் செய்துகொண்ட பிறகு, மீண்டும் புளூஸ்டாக் மென்பொருளை நிறுவிக் கொள்ள முடியும்.

Tags: bluestacks, android, smartphone, games software, android games in pc, play android games in computer, how to use android apps in computer, games apps in pc, graphics card, download android games in pc, play android games in pc.