Latest Posts
Browsing Category "android app"

தேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் ஆன்ட்ராய்ட் ஆப்

- Friday, August 17, 2018 No Comments
தொல்லை தரும் விளம்பர அழைப்புகளை தடுப்பதறகென கூகிள் புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. "போன்" என்ற அந்த அப்ளிகேஷன் உங்களுக்கு வரும் "SPAM" அழைப்புகளை ஃபில்டர் செய்து தடுக்கும் வசதியை கொண்டுள்ளது.

thevaiyatra alaipugalai thidukka

இதற்கு முன்பு பீட்டா வர்சனில் சோதிக்கப்பட்ட இந்த செயலி தற்பொழுது பயனர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு Called ID and Spam Protection என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்து தடுத்து விடலாம்.

இந்த சேவை ஆனில் இருக்கும் போது, ஒரு அழைப்பை உருவாக்கும் போதும், பெறும் போதும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது தொழில் சார்ந்த அழைப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

 இதுகுறித்து எச்சரிக்கை தகவல் நமக்கு கிடைக்கும். இதனை ஆக்டிவேட் செய்ய 3 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

செட்டிங்ஸ் சென்று, ’காலர் ஐடி மற்றும் ஸ்பாம்’ சேவையை ஆன் செய்ய வேண்டும். தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க பில்டரில் ஸ்பாம் கால்களை ஆன் செய்திருந்தால் போதும்.

இது தனி நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். தற்போது தேவையற்ற அழைப்புகளை எச்சரிக்கும் வகையில், ‘போன்’ ஆப்பின் முகப்பு பக்கம் சிவப்பு நிறத்தில் மாறுகிறது.

இருப்பினும் முழுமையாக செயல்பாட்டிற்கு வராததால், இதன் செயல்பாடு மற்றும் திறன் குறித்து தெரியவில்லை.

திருடுபோன வாகனங்களை மீட்க உதவும் கருவி !

- Monday, July 02, 2018 No Comments
தற்காலத்தில் முக்கிய பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன. அவ்வாறு திருடு போன வாகனங்களை மீட்பது கடினம். வண்டியை பறிகொடுத்தவர்கள், வண்டியை மீட்க முடியாமல், கடனையும் அடைக்க முடியாமல் திண்டாடுவர்.

காணாமல் போகும் வானகங்களை கண்டுபிடித்து மீட்பதற்கு தற்பொழுது புதிய கருவி [GPS Device] ஒன்று வெளிவந்துள்ளது. அதை வாகனங்களில் பொருத்திவிட்டால் போதும்.

GPS Tracker for Two Wheeler


அக்கருவியுடன் எளிதாக தொடர்புகொள்ள கூடிய ஆன்ட்ராய்ட் செயலி மூலம் திருடுபோன வண்டி எந்த இடத்தில் உள்ளது என்பதை மிக எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த கருவியை புதிய மற்றும் பழைய வாகனங்களில் கண்ணுக்குத் தெரியாத வகையில் சீட் அல்லது டேங்கிற்கு அடியில் பொருத்திக்கொள்ளலாம்.

திருடர்கள் சைட் லாக்கரை (Side Locker) உடைத்து, அல்லது சைட் லாக் ஓப்பன் செய்து எடுத்துச் செல்லும்போது, உடனடியாக இந்த டிவைஸ் செயல்பட்டு,  திருடர்கள் வண்டியை திருடிச் சென்று போய்க் கொண்டிருக்கும் இடம் எது என்ற தகவல் உரிமயாளருக்கு SMS மூலம் தகவல் போய் சேர்ந்துவிடும்.

டிவைசும் கைபேசியும், ஒரு, 'ஆப்' மூலமாக இணைக்கப்படுவதால், உரிமையாளருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதனால், திருடப்பட்ட வண்டி எங்கு இருக்கிறது, அது ஓடிக் கொண்டிருக்கிறதா, 'ஓவர் ஸ்பீடில்' போகிறதா, எந்த சிக்னலில் நின்று கொண்டிருக்கிறது என்பதை, ஜி.பி.எஸ்., வாயிலாக, தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

வலைதளம் தொடர்பில்லாமல் இருந்தாலும், சாதாரண மொபைல் போனில், குறுஞ்செய்தி அனுப்பப்படும் வசதியும் இருக்கிறது. இத்தகைய கண்காணிப்பை, மூன்று நாட்கள் வரையிலும், மொபைல் போனில் வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக, திருடர்கள் வண்டி சாவி இல்லாமலோ, தலைபூட்டை உடைத்தோ அல்லது வண்டியை இயக்காமல் உருட்டி சென்றாலோ, தொடர்ந்து மொபைல் போனில் அலாரம் அடித்துக் கொண்டிருக்கும்.

அப்போது, குறுஞ்செய்தி மூலம் மொபைல் போனிலிருந்து வண்டியில் இருக்கும் டிவைசிற்கு கட்டளை அனுப்பி, இயக்கத்தில் இருக்கும் வண்டியை நிறுத்தலாம். இதற்கான செலவு, முதலில், 3,000 - 4,000 ரூபாய்.

அதைத் தவிர மாதம், 600 ரூபாய் செலவில், மொபைல் போனில் உள்ள செயலியை புதுப்பித்துக் கொள்ளலாம்.

Tags: GPS Tracker for Two Wheeler, Car GPS Tracker, GPS android app for CAR and Two Wheeler


Source:Dinamalar.com

மாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app

- Sunday, June 24, 2018 No Comments
கல்வி என்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்க கூடாது. அதை விரும்பி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த கல்வி அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். தற்பொழுது உள்ள கல்விமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகதான் இருக்கிறதேயன்றி, அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இல்லை.

இந்நிலையை தவிர்க்க "இன்ட்ராக்ட்டிவ்" கல்விமுறையை செயல்படுத்த வேண்டும் என்பது கல்வியலாளர்களின் கருத்து.

tn schools live 3d app


அப்பொழுதுதான் ஈடுபாட்டுடன் மாணவர்கள் கற்றலை மேற்கொள்வார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை மெல்ல மெல்லதான் கல்வித்துறையில் சிற்சில மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கல்வியை மாணவர்கள் சிரமின்றி கற்றுத்தேற புதிய ஆன்ட்ராய்ட் 3D ஆப் வெளியிட்டுள்ளனர்.

இது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வியை எளிதாக பரிந்து படிக்க உதவுகிறது.

புரிந்து படிக்கும்பொழுது, படித்தவைகள் அப்படியே மனதில் நிற்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

அதற்கு தகுந்தாற் போல பாடப்புத்தகங்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்திடும்பொழுது, 3D வடிவத்தில் படங்கள் விளக்கத்துடன் காட்சி அளிக்கின்றன.

எப்படி பயன்படுத்துவது?

  • ஆன்ட்ராய்ட் போன் மூலம் Google Play Store சென்று அங்கு "TN SCHOOLS LIVE" என்ற ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
  • ஆப்பைத் திறந்தவுடன் பத்தாம் வகுப்பா, பன்னிரெண்டாம் வகுப்பா எனத் தெரிவு செய்துவிட்டு, புத்தகத்தில் உள்ள படத்திற்கு நேராக போன் கேமிராவை காண்பிக்கவும்.
  • உடனே அந்த ஆப் புத்தகத்தில் உள்ள தகவல்களை உணர்ந்து, அதற்குரிய 3 படங்களை காட்டும்.
10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ’டிஎன்ஸ்கூல்லைவ்" ஆப் வெளியிடப்பட்டுள்ளது. வெகு விரைவில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆப் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Android App, Tn Schools Live, 10, +2 Students.

தொலைந்துபோன பொருளை கண்டுபிடிக்க உதவிடும் சாதனம்

- Thursday, June 07, 2018 No Comments
தொலைந்து போன பொருள் அல்லது எங்காவது மறந்து விட்டுச் சென்றுவிட்ட பொருளை அது இருக்கும் இடத்தினை வெகு இலகுவாக கண்டுபிடிக்க உதவுகிறது இந்தச் சாதனம். 


Anti Lost Wireless Tracker என்ற இச் சாதனத்தனை Digitex நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Anti Lost Wireless Tracker
இதற்கென கொடுக்கப்பட்டிருக்கும்  Digitek tracker செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும். இந்த சாதனம் இணைக்கப்பட்ட பொருள் எங்கிருந்தாலும், இந்த செயலின் மூலம் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்துவிடலாம்.

எப்படி பயன்படுத்துவது?

இந்த சாதனத்தை Laptop, Key chain, Waller போன்ற சாதனங்களில் இணைத்து வைத்துக்கொள்ளலாம்.

கார்களைக் கூட இந்தச் சாதனத்தை இணைத்துக்கொண்டு விடலாம்.


Anti Lost Wireless Tracker for car

Anti Lost Wireless Tracker சாதனத்தில் உள்ள In-Build அலாரம் குறிப்பிட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும். 30 மீட்டர் பரப்பளவு வரை அருமையாக வேலை செய்கிறது. அந்த எல்லைக்குள் பொருள் இருந்தால், உடனே ஸ்மார்ட் போனிலிருந்து அலாரம் அடிக்கும்.

இந்தச் சாதனத்தின் மூலம் Remote முறையில் வீடியோ, புகைப்படங்கள எடுக்க முடியும். இதற்காக ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.

Google Play Store - ல் இந்த Anti Lost Wireless Tracker சாதனத்திற்கான செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சுட்டி : Download Anti lost Wireless Tracker Android App For Free

Tags: Anti lost wireless tracker, Anti lost Wireless Tracker Android App, Anti lost Wireless Tracker for Car, Anti lost Wireless Tracker for Laptop.

மய்யம் விசில் என்ற பொது சேவை செயலியை அறிமுகப்படுத்தினார் கமல்

- Monday, April 30, 2018 No Comments
kamal-haasan-launches-maiam-whistle-app

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 'மய்யம் விசில்' என்ற புதிய செயலியை அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இந்த செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், இந்த செயலி மூலம் சமுதாய குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், மக்கள் தெரிவிக்கும் புகார்களின் உண்மை தன்மையை ஆராய 3 பேர் கொண்ட குழு செயல்படும் எனவும், அதன் மீதான நடவடிக்கைகளை எடுக்க அட்மினுக்கு பரிந்துரைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் நடக்கும் தவறுகளை வெளிகொண்டு வரும் ஏஜென்டாக மக்கள் நீதி மய்யத்தின் செயலி இருக்கும் என குறிப்பிட்ட அவர், குற்றங்களை கண்டறிய காவல்துறைக்கும் முக்கிய பங்காக இந்த செயலி இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: Mayyam Android App, Kamal, Mayyam whistle App.

ஆப்பிள், ஆன்ட்ராய்ட் போன்களில் தினமலர் செய்திகள் படித்திட - மொபைல் ஆப்

- Sunday, April 29, 2018 No Comments
தினமலர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுகிறது Dinamalar News App. உங்களிடம் எந்த வகை போன் இருந்தாலும், அதில் Dinamalar app டவுன்லோட் செய்து அதில் செய்தித் தகவல்களை பார்த்திடலாம்.

ஆப்பிள் ஐபோன், ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன், விண்டோஸ் போன் என எந்த வகை போனிலும் இயங்கும் வகையில் இந்த ஆப் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள், நேரம் மற்றும் அன்றாட குறிப்புகள், எதிர்கால நினைவுறுத்தல் மேற்கொள்ள "தினமலர் காலண்டர்" ஆப் உதவுகிறது. இரண்டு ஆப்களையும் கீழே உள்ள  சுட்டியை அழுத்துவதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

dinamalar news app download

Dinamalar is the only Tamil newspaper to have exclusive apps for iPhone & iPod Touch, Android Mobile and Android Tab, which has more than 24.45 million page views through 9.46 million visits every month.


iPhone + iPod Touch App

More than 1.40 million downloads
More than 4.37 million visits per month
More than 14.73 million page views per monthiPad App

More than 40,000 downloads
More than 1,66,453 visits per month
More than 1.12 million page views per month


Android Mobile App

More than 3,20,399 downloads
More than 4.75 million visits per month
More than 6.58 million page views per month


Android Tablet App

More than 59,168 downloads
More than 1,71,359 visits per month
More than 2.02 million page views per month


Recently Launched

Windows7, BlackBerry & Windows8

Download Dinamalar Mobile App

தினகரன் செய்திகளை படித்திட ஆன்ட்ராய்ட் ஆப்

தினகரன் செய்திகளை படித்திட ஆப்


 'தினகரன்', இப்போது iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. 

தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும். 

பதிவிறக்கம் செய்ய :
நீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone மற்றும் Androidன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம். தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

iPad அப்ளிகேஷன் என்றால் என்ன?
உங்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.

தினகரன் அப்ளிகேஷனின் அம்சங்கள்
நொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம்.

அப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்
பழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்றும் iPad - 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.

இணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா?

நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை 'Offline reading' மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Tags: Dinamalar News App, Dinamalar Mobile App, Dinamalar app, Dinakaran Mobile app, Dinakaran Android App.