Latest Posts
Browsing Category "Nokia"

நோக்கியாவின் பிலிப் மாடல் செல்போன்கள் மீண்டும் வருகை [Banana Type Phones]

- Wednesday, March 21, 2018 No Comments
nokia banana 4g flip mobile

ஒரு காலத்தில் (?) வாழைப்பழம் போன்ற தோற்றத்தில் வளைந்த வடிவில் இருந்த நோக்கியா செல்போன்கள்  பிரபலமாக இருந்தன.

அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால் பல விதமான வடிவங்களில் செல்போன்கள் வெளிவந்தன.

அதனால் அத்தகைய போன்கள் வெளிவருவது நின்று போயின.

தற்பொழுது மீண்டும் நோக்கியா பிலிப் மாடல் மொபைல் போன்கள் வெளிவரவுள்ளது.

8110 ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை மொபைல் போன்கள் ரூபாய் 6300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit : Nokia.com

இதில் இடம்பெற்றிருக்கும் உள்ளிருப்பு வசதிகள் :
 • Snapdragon 205 dual-core processor
 • 512 MB of LPDDR3 RAM
 • 4 GB Internal Storage
 • 1,500mAh battery 
 • 2.4-inch QVGA color display (320 x 240 pixels)

 மேலும் இதில் Facebook, Twitter, Google Assistant, Google Maps, and iconic Snake game போன்ற வசதிகள் அனைத்தையும் அனுபவிக்க முடியும். 

Tags: Nokia 8110 4G Phone, Nokia Flip Cellphone, New Nokia 4G Phone, Nokia Phone Specification.

Nokia 225 டூயல் சிம் பட்ஜெட் போன் - சிறப்பம்சங்கள்

- Thursday, April 17, 2014 No Comments
எல்லோரும் வாங்க கூடிய விலையில் டூயல் சிம் வசதியுடன் கூடிய Nokia 225 என்ற போனை நோக்கியா நிறுவனம் வெளியிட உள்ளது.

இதில் இணையப் பயன்பாட்டை மேற்கொள்ள முடியும். 2.8 அங்குல அகலம் உள்ள QVGA LCD திரையை கொண்டுள்ள இப்போனில் 2 மெகா பிக்சல் கொண்ட கேமரா உள்ளது.
Nokia-225-dual-SIM-Phone-Main-specifications
நோக்கியா எக்பிரஸ் பிரவுசர், எப்.எம். ரேடியோ, புளூடூத் வசதிகளும் உண்டு.

பேஸ்புக், ட்விட்டர் போன் சமூக தளங்களுக்கான இணைப்புகளும் இதில் தரப்பட்டுள்ளன.

மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 32 ஜி.பி. வரைக்கும் மெமரியை உயர்த்திக்கொள்ளும் வசதி, தொடர்ந்து 21 மணி நேரம் பேசப்போதுமான மின்சக்தியை வழங்கவல்ல 1200 mAh திறனுடைய பேட்டரி இதில் உண்டு.

கிடைக்கும் நிறங்கள்: சிகப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளிவர உள்ளது.

இதன் விலை ரூபாய் 3,500 க்குள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இணைய இணைப்பு, சமூக தளங்களைப் பயன்படுத்தும் வசதி,  போட்டோ-வீடியோ எடுக்கப் போதுமான கேமரா வசதி, கண்ணை கவரும் நிறம், கட்டுக்கோப்பான சீரான மின்சக்தி வழங்கும் பேட்டரி என இந்த போன் உண்மையிலேயே மிடில் கிளாஸ் பேமலிக்கு ஒரு வரப்பிரசாதம்தான்...

ஆங்கிலத்தில் சிறப்பம்சங்கள்:

Nokia 225 dual SIM Phone Main specifications:


 • 2.8 Inch LCD Display
 • Dual SIM
 • 2 MP Camera
 • FM Radio
 • Bluetooth 3.0
 • 32GB Expandable Memory
 • 1200 MAh Battery
Tags: Nokia 225, Nokia Budget Phone, Nokia Simple Phone, Specifications of Nokia 225.

4 அங்குல திரையுடன் Nokia Lumia 525

- Thursday, December 12, 2013
Nokia Lumia 525 5 inch smartphone launched

விண்டோஸ் மொபைல் என்றாலே நோக்கியா லூமியா போன்கள்தான் Nokia Lumia windows 8 phones நினைவுக்கு வரும். இன்று பயன்பாட்டில் இருக்கும் என்பது சதவிகித விண்டோஸ் மொபைல்கள் நோக்கியா நிறுவன மொபைல்கள்தான்.

பிரபல அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, புதிய நோக்கியா லூமியா 525 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. 

இதில் 4 அங்குல திரை, 5 Mega pixel திரை ஆகியன அமைந்துள்ளது. 

அவற்றில் 13 சதவிகித மொபைல்போன்கள் Nokia 520 ஆகும். அந்த வகையில் புதிய நோக்கியா லூமியா 525 மொபைலும் தற்பொழுது நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கீரல் விழாத நோக்கியா ஸ்மார்ட்போன் !

- Saturday, October 26, 2013 No Comments
நோக்கியா. இந்த வார்த்தையே உலக மக்களிடம் மிக பிரபலமானது. 
செல்போனைக் கண்டுப்பிடித்து பயன்பாட்டு வந்த காலம் முதல் இப்பொழுது வரை நோக்கியாவின் தயாரிப்புகள் என்றுமே சோடை போனதில்லை.

ஆனால் சமீப காலத்தில் போட்டி நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க சற்றுத் திணறிதான் போனது நோக்கியா. சரியான நிர்வாகத்திறன் இல்லாததால் போட்டியில் பின்னடவை சந்தித்துது நோக்கியா.

நோக்கியாவை மீண்டும் முன்னேற்றவும், தன்னுடைய விண்டோஸ் 8 இயங்குதளத்தை நோக்கியா தயாரிப்புகளில் புகுத்தி மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும், மைக்ரோசாப்ட் நிறுவனமே அதை வாங்கிக்கொண்டது.

New Nokia 1320 Tablet PC with Gorilla Glass touch screen

அதன் பிறகு நோக்கியா நிறுவனம் தற்பொழுது மீண்டும் வெற்றிநடை போட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்துள்ள நோக்கியா லூமியா டேப்ளட் சாதனங்களின் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதால் நோக்கியா நிறுவனம் புது உத்வேகத்துடன் தனது பயணத்தை தொடங்கி உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த Nokia 2025 tablet pc விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. 

New Nokia 1320 Tablet PC

அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு புதிய டேப்ளட் பிசியை வெளியிட்டுள்ளது நோக்கியா. Nokia 1320 Tablet PC என்ற பெயருடைய இதில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

இதில் ஸ்கிரீனில் கீரல் விழாமல் இருப்பதற்கான கொரில்லா கிளாஸ் (Gorilla Glass Technology), டேப்ளட் பிசியை அற்புதமாக, விரைவாக செயல்படுத்தக்கூடிய திறன்மிக்க 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor, 1ஜிபி ரேம், படங்கள் மற்றும் வீடியோக்கள் துல்லியமான தரத்துடன் எடுக்க 5 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது.

8GB உள்ளக நினைவகம், 32 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டில் சேமிக்கும் வசதி, ஆகியனவும் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த டேப்ளட்டுடன் 7GB கொள்ளவிற்கு தகவல்களை Cloud Storage வசதியின் மூலம் சேமித்துக்கொள்ளலாம்.

Microsoft நிறுவனத்தின் MS-Office ஐயும் இந்த டேப்ளட்டில் பயன்படுத்த முடியும். இதில் word, Excel, Powerpoint போன்ற அப்ளிகேஷன்கள் அனைத்தையும் பயன்படுத்தும் வசதி உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை வாங்கிய பிறகு வெளியிடப்படும் முதல் டேப்ளட் பிசி இதுவாகும்.

இதன் விலை ரூபாய் 20,900. 2014 புத்தாண்டில் இந்த டேப்ளட் பிசி விற்பனைக்கு கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

நோக்கியா லூமியா டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்:

Nokia Lumia 1320 Tablet Pc Specifications:

 • Windows Phone 8 Operating System
 • 6-inch HD LCD IPS Super sensitive display and Gorilla Glass 3 protection (1280 x 720 pixels) 
 • 1.7 GHz dual-core Qualcomm Snapdragon 400 processor
 • 5MP Auto Focus camera with LED flash
 • 1080p HD recording at 30 fps
 • VGA front-facing camera
 • 1GB RAM
 • 8GB internal memory
 • micro SD card support up to 64GB
 • 3.5mm audio jack 
 • FM Radio
 • HD Voice,HAAC mic
 • 4G LTE/ 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0 + LE, GPS / aGPS, NFC
 • Dimensions - 164.25 x 85.9 x 9.79 mm  Weight - 220 grams
 • 3400 mAh (integrated) Battery

Tags: Nokia Lumia 1320, Nokia Lumai 2025, Nokia Lumia new tablet pc, Nokia Lumia 1320 windows 8 tablet pc, Nokia Lumia tablet pc with 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor, Nokia Lumia 1320 tablet pc with Cloud Storage, Nokia Lumia 1320 tablet pc with 5 MP camera, Nokia Lumia 1320 tablet pc with 32GB micro SDcard, Nokia Lumia 1320 tablet pc with Gorilla Glass touch Screen, Nokia Lumia 1320 tablet pc with 8GB internal memory, Nokia Lumia 1320 tablet pc with 1GB RAM.

நோக்கியாவின் புதிய பெட்ஜெட் போன்

- Wednesday, October 02, 2013 No Comments

நோக்கியாவின் புதிய போன் நோக்கியா 208DS. கடந்த மாதம் இந்த போனைப் பற்றிய அறிவிப்பை நோக்கியா வெளியிட்டது. 

2.4 இன்ச் அகலம், 240x320 பிக்செல் அகலம் கொண்ட திரையுடன் வெளிவந்துள்ளது.  இதில் நோக்கியா சீரிஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டுள்ளது. சமூக தளங்களை அணுகும் விதத்தில் இதனுடன் பேஸ்புக், வாட்ஸ் மற்றும் டிவிட்டர் அப்ளிகேஷன்களும் பதியப்பட்டுள்ளது. இப்போனில் தடிமன் 12.8 மி.மீ. எடை 90.6 கிராம். 

1.3 MP திறன்கொண்ட கேமரா படங்கள் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள சிறப்பம்சம் போன் இயக்கத்தை நிறுத்தாமலேயே சிம்கார்டினை மாற்றக்கூடிய வசதியைக் கூறலாம். மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், மைக்ரோ சிம் பயன்பாடு, புளூடூத் 3.0, மைக்ரோ எஸ் கார்ட் உதவியுடன் 32 ஜிபி வரைக்கும் மெமரியை அதிகரிக்கும் திறன் மற்றும் பாடல்கள் கேட்க 3.5 ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, ரேடியோ ரெக்கார்டிங் , ஜிபிஎஸ் போன்ற மேலதிக வசதிகளைப் பெற்றுள்ளது. 

nokia-208-budget-smartphone-for-rs-4500

480 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் நோக்கியா போன்

- Saturday, September 28, 2013 No Comments
நோக்கியா நிறுவனம் பட்ஜெட் போன் வரிசையில் 480 மணி நேரம் பேட்டரி நிற்கும் போனை வெளியிட்டுள்ளது. இந்த போன் 2G அலைவரிசையை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நோக்கியா எஸ் 40 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் உள்ள சிறப்பம்சங்களாவன: 

குவரெட்டி கீபோர்ட் அமைந்துள்ளது. இது SMS டைப்செய்ய எளிதாக இருக்கும். 2.4 அங்குல வண்ணத்திரை கொண்டது. நெட் வொர்க் இணைப்பிற்குப் பயன்படும் GPRS, EDGE, A2DP ஆகியவைகள் இணைந்த புளூடூத் தொழில்நுட்பம் கொண்டது.

இது ஒரு விநாடிக்கு 15 பிரேம் வேகத்தில் செயல்படும் வீடியோ VGA Camera வைக் கொண்டிருக்கிறது. 


செய்திகள் மற்றும் பாடல்கள் கேட்க எப்.எம். ரேடியோ உள்ளது. மேலும் MP4, MP3 மியூசிக் பிளேயர், 64 எம்.பி நினைவகம், 8ஜிபி வரைக்கும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரியை அதிகப்படுத்திக்கொள்ளும் வசதி, ஸ்பீக்கர் போன். 3.5 மிமீ ஆடியோ ஜாக், லித்தியம் அயன் 1,020 mAh Battery ஆகியவையும் உள்ளன.

தலைப்பில் கூறியபடி இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 480 மணிநேரம் பேட்டரியில்  போனுக்குத் தேவையான மின்சக்தி இருக்கும். இதில் ஒரு முறை சார்ஜ் ஃபுல் செய்துவிட்டு தொடர்ந்து 4.5 மணி நேரம் பேச முடியும். 107.5 கிராம் எடை கொண்ட இந்த போனின் பரிமாண அளவு 119.4x59.8x14.3 ஆகும். 

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போனில் விலை ரூபாய்: 

இது எல்லா இந்திய ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. 

ஆங்கிலத்தில் இந்த போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். 

Nokia Asha 210 Key Specifications:
 • SIM: Single SIM and Dual SIM variants
 • Platform: Series 40
 • Display: 2.4 inches QVGA LCD
 • Camera: 2 Megapixels
 • Micro SD: Yes
 • Connectivity: Bluetooth, WiFi, 2G
 • Battery: 1200 mAh
Tags: Nokia asha phones, long life battery phones, Nokia's life long battery phones, Nokia lowest price phone, Nokia budget phone, Nokia qwerty keyboard phone, Nokia, Nokia ordinary phone, simple phone from Nokia

நோக்கியா அல்ட்ரா ஸ்டைல் கேமிரா போன் !

- Thursday, September 26, 2013 2 Comments
Nokia-108-ultra-style-camera-phone-for-rs.1817-in-india-orange Nokia 108 ultra style camera phone for rs. 1999

சைசுல சின்னது.. பார்க்கிற வேலையோ ரொம்ப பெரிசு...அப்படிங்கிற இந்த தலைப்பை மட்டும் வாசிச்சி வந்த உங்களுக்கு வணக்கம். இதுல தலைப்புக்கு பொருந்தற மாதிரியான விஷயம்தான் சொல்லப்பேறேன்.. ஆனால்... நீங்க நினைக்கிற மாதிரி இல்லீங்க..

நோக்கியா சமீபத்துல ஒரு போன் ரிலீஸ் பண்ணியிருக்கு.. நோக்கியா நூத்தி எட்டுன்னு பேரு...ஆனால் பாருங்க..."சைசுல சின்னது.. பார்க்கிற வேலையோ ரொம்ப பெரிசு...!"

2000 ரூபாய்ல கேமரா போன்...அதுவும் நோக்கியா கம்பெனி போன்....!!!

(முறையா பார்த்தால் மேல இருக்கிறதுதான்  பதிவோட தலைப்பு. ஆனா பாருங்க... ஒரு கவர்ச்சி இருக்கட்டுமேன்னு அப்படி வச்சிட்டேன். என்னை அடிக்க வர்றவங்க..காதை பிடிச்சு திருக வர்றவங்க.. துவைக்க வர்றவங்க எல்லாரும் கமெண்ட்ல துவச்சு தொங்க போடுங்க... பிடிச்சிருந்தா மேற்கொண்டு படிங்க...ப்ளீஸ்..)

ஆண்ட்ராய்ட் போன்கள்தான் பிரபலமாகிட்டு வருதுன்னு நாம நெனச்சா அதுதான் தப்பு.. அதுகூடவே சத்தமில்லாமல் சாதாரண போன்களும் மார்க்கெட்ல தூள் கிளப்பிட்டு இருக்குங்க... ஆண்ட்ராய்ட் போன்கள்ன்னா அதிகமான பாதுகாப்பு இருக்கணும்.. அதே சமயம்...அதை தொடர்ந்து பராமரிக்கணும்.. தொலைஞ்சு போச்சுன்னா.. அய்யய்யோன்னு அலறி துடிக்கணும்...
Nokia-108-ultra-style-camera-phone-for-rs-1817

நோக்கியா பட்ஜெட் மொபைல் போன்கள் !

- Thursday, September 05, 2013 1 Comment
பிரபல போன் கம்பெனியான நோக்கியா இன்றைய இளைஞர்களின் தேவையை, ரசனையை மனதிற்கொண்டு அடுத்தடுத்து புதிய மொபைல்களை தயாரித்து வெளியிடுகிறது. வாடிக்கையாளர்களுக்குத் தகுந்தாற்போல் மொபைல்களைத் தயாரித்து வழங்குவதில் நோக்கிவிற்கு நிகர் நோக்கியா தான். 

உதாரணமாக இந்நிறுவனத்தின்  பட்ஜெட் போன்களை கூறலாம். நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து, அவர்களின் பொருளாதார வசதிகளை உத்தேசித்து சிறப்பான போன்களை உருவாக்கி வெளியிட்டுக்கொண்டுள்ளது.

Nokias-new-budget-phones-for-rs-1500


Nokia 106 மற்றும் Nokia 107 என்ற புதிய போன்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இப்போன்களின் விலை ரூபாய் 1501. குறைந்த விலை போன்களின் ராஜாவான நோக்கியாவின் இந்த மொபைல்கள் பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றன.

புதிய Nokia 106 பட்ஜெட் போன்களின் சிறப்பம்சங்கள்:
 • நோக்கியா 106 கையடக்க அலைபேசியின் திரை அளவு 1.8 இன்ச்
 • TFT Display
 • FM Radio
 • Flashlight
 • Speaking clock
 • multiple alarms
 • 800 mAh battery
 • Images, gallery, photos, pictures
 புதிய Nokia 107 பட்ஜெட் போன்களின் சிறப்பம்சங்கள்:

இதில் Dual SIM, 1.8 inch TFT Display, 34.8 மணிநேரம் மியூசிக் பிளேபேக் டைம் கொண்ட MP3 player, 1020 mAh பேட்டரி, படங்கள், போட்டோக்கள், கேலரி (Gallery) போன்ற பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

நோக்கியாவின் மலிவு விலை போன்கள்

- Friday, June 07, 2013 No Comments
Cheap price of Nokia phones

நடுத்தர வர்க்கம் விரும்பும் எளிய வகை மொபைல் போன்களை மிக குறைந்த விலையில் அளித்து வருகிறது நோக்கியா.. மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் புத்தம் புதிய மலிவு விலை நோக்கியா  போன்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன்..

மலிவு விலை என்றாலும் தரத்திற்கு குறைவேயில்லை.. ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலையில் கிடைக்கும் அற்புதமான வசதிகளைக் கொண்ட செல்போன்கள் இவை. கண்ணைக் கவரும் நிறம், வடிவமைப்பு என இவை ஆண்டாட்ராய், ஸ்மார்ட் போன்களையே மிஞ்சிவிடும் கவர்ச்சியைப் பெற்றுள்ளது.

நோக்கியாவின் மலிவுவிலை போன்கள் இவை. குறைந்த பட்ஜெட்டில் நாமும் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கியா மொபைல் போன் அணிவரிசை பயன்படும் என நினைக்கிறேன்.

1. Nokia Asha 200