குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்

kulanthaigalukku kodukka vendiaya unavugal

 குழந்தைகள் வளர அவசிய தேவை சத்தான உணவுகள். அவற்றை தரம் பார்த்து சரியான முறையில் கொடுத்து வர, போதிய ஊட்டச்சத்துப் பெற்று நோய் நொடிகள் இன்றி விரைவில் வளருவர். சிறு வயது முதல் போதுமான சத்தான உணவுகளை உண்டு வரும் குழந்தைகள் வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இன்றி, ஆரோக்யமாக வளருவர். படிப்பில் சுட்டியாக திகழுவர். 

உங்கள் குழந்தைகளும் சுட்டியாக, ஆரோக்கியமாக இருக்க என்னென்ன அடிப்படை உணவுகள் கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முட்டை, பால், மாமிசம், முழுதானிய உணவுகள், சிக்கன், சோயா பீன்ஸ், காற்கறிகள், பழங்கள், மற்றும் நீர். 

முட்டை:

 இதில் அதிக புரத ச்த்து உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது. சிறு வயது முதல் தினம் ஒரு முட்டை கொடுத்து வர குழந்தைகள் எந்த ஒரு குறைபாடின்று வளருவர். இதை பொறியல் செய்து கொடுப்பதைவிட நீரில் வேக வைத்து அவித்து கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதுவே நல்லது. இது செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. எனவே பெற்றோர்கள் தவறாமல் பிள்ளைகளுக்கு ஒரு முட்டை கொடுத்து வளர்க்கவும். 

muttai kulanthai unavu

முழு தானியங்கள் - உணவுகள்: 

கம்பு, சோளம், கோதுமை என முழு தானியங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவுகள் ஏராளம். கூடவே பருப்பு வகைகளையும் கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் மெட்டாபாலிசம் சீராக வேலை செய்து, அதிக தொந்தரவு இல்லாத ஆரோக்கிய உடலை பெறுவர். உடல் வளர்ச்சியை துரிதப்படுத்தும். அன்றாட உணவில் முழு தானியங்களை வேக வைத்தோ, பச்சையாகவோ அல்லது முளைக்கட்டிய தானியங்களாக மாற்றியோ அவர்களுக்கு கொடுத்து வரலாம். 

muttai kulanthai unavu

பால்: 

குழந்தை பிறந்தது முதலே முதல் உணவு பால் தான். தாய்ப்பால் அதிக ஊட்டச்சத்து மிக்க பானம். உலகிலேயே அதற்கு நிகரான உணவு எதுவும் கிடையாது. அடுத்து பசும்பால், இது கால்சியம் சத்தைக் கொண்டுள்ளதால் குழந்தைகளின் எழும்புகளின் வளர்ச்சியை அதிகபடுத்தி, அதை உறுதியாக்குகிறது. விட்டமின் டி, புரத சத்து மிகுந்திருப்பதால் பால் ஒரு முழுமையான உணவு பொருள். அன்றாடம் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியமான உடலமைப்பைப் பெறுகின்றனர். 

pall unavugal


சிக்கன்:

 நாட்டுக்கோழி மிகவும் நல்லது. அது கிடைக்காதவர்கள் பிராய்லர் கோழி கறியை கொடுக்கலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது சிக்கன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதுவும் அவர்களின் வளர்ச்சிக்கு அதிக பங்காற்றுகிறது. இதில் உள்ள அதிகபடியான புரதம் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. 


chicken food for child


சோயாபீன்ஸ்:

 சிக்கன் , முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு அதற்கு நிகரான சத்துக்கள் கொண்ட சோயா பீன்சை கொடுக்கலாம். இதில் அதிக புரதச் சத்து நிறைந்துள்ளது. 

soya beans for child

soya beans child food

பழங்கள்:

 இது ஒரு நல்ல முழுமையான உணவு. எந்த வித த்திலும் தீங்கு செய்யாத உணவுவகைகளில் முதன்மையானது. சீசனுக்கு கிடைக்கும் எந்த ஒரு பழ வகைகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். விரைவில் ஜீரணமாகும். உடலில் எதிர்பாற்றலை (நோய் எதிர்ப்பு சக்தியை) அதிகப்படுத்தும். உடனடி சக்தியை கொடுக்கபதால் தான் மருதுதவர்கள் நோய்வாய் பட்டவர்களுக்கு அதிக கீரைகள், பழங்களை உண்ண பரிந்துரைக்கின்றனர். 

Best-Foods-for-a-Baby-or-Toddler


காய்கறிகள்: 

கேரட், பீன்ஸ், பிராக்கோலி, கீரை வகைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல உணவுகள். இதில் விட்டமின் கே, பி, ஏ முக்கியமான சத்துக்கள் அடங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு தவறாமல் உணவில் சேர்த்து கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து, மெக்னீசியம் சத்து போன்றவை கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக நல்லது. 

vegetable for child food

இதுபோன்ற சத்தான உணவுகளை குழந்தைகளுகு கொடுப்பதன் மூலம் அவர்களின் உடல் வளர்ச்சி மட்டுமல்லாது, மூளை வளர்ச்சியும் அபரிதமாக இருக்கும். மேலும் எந்த ஒரு நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்வை பெறுவர். நீண்ட நெடிய ஆயுள் கிடைக்கும். 

Post a Comment

0 Comments