கம்ப்யூட்டர் டிப்ஸ் - எளிய தமிழில்

computer tips in tamil 2020

கம்ப்யூட்டரில் சில நேரங்களில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படும். அதை நாமே சரிசெய்து கொள்ளலாம். அப்படி என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? அவற்றை எவ்வாறு சரி செய்வது குறித்து இந்த பதிவில் Computer Tips in Tamil ல் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். 


கம்ப்யூட்டரில் ஏற்படும் பீப் ஒலி நிறுத்த என்ன செய்ய வேண்டும்? 


கம்ப்யூட்டர் வன்பொருளில் ஏற்படும் பிரச்னைகளால் Beep Sound உருவாகும். அவ்வாறு ஏற்படும் ஒலிகளை வைத்து, என்ன பிரச்னை என்று கண்டறியலாம். சில நேரங்களில் அந்த சப்தம் அசௌகரியமாக இருப்பதால், பயனர்கள் அதை நிறுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். அப்படி "பீப்" சவுண்ட்டை நிறுத்த இப்படி செய்ய வேண்டும். 


  1. முதலில் Run command window open செய்து அதனுள் Regedit என type செய்து Regedit window open செய்ய வேண்டும்.
  2. அடுத்து தோன்றும் window-வில் HKEY_CURRENT_USER Control Pannel Sound எனக் காணப்படும் போல்டரை திறக்க வேண்டும். 
  3. அதன் பிறகு அதனுள் காணப்படும் Beep என்பதில் இரட்டைக் click செய்து தோன்றும் window-வில் value-ஐ No என மாற்றி OK செய்யவும். 

அவ்வளவுதான். அதன் பிறகு கணிணியில் ஏற்படும் Beep Sound நின்றுவிடும்.

உங்கள் கணினி பூட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா?

உங்கம் கம்ப்யூட்டர் boot ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அதை உடனே சரி செய்யலாம். அதற்கு 

  • Windows Key+R அழுத்தி, Msconfig டைப் செய்து, 
  • எண்டர் அழுத்தினால் System Configuration விண்டோ தோன்றும். 
  • அதில் Boot டேபை கிளிக் செய்து, 
  • அதில் ஓடிக்கொண்டிருக்கும் தேவையில்லாத புரோகிராம்களை 
  • செலக்ட் செய்து Disable செய்து விடலாம். 

அதன் பிறகு கணினி தொடங்கும்போது அதிக விரைவாக தொடங்கும். பூட் நேரம் குறையும். 


Post a Comment

0 Comments