மென்பொருள் டவுன்லோட் செய்வது எப்படி?

மென்பொருள் என்பதை ஆங்கிலத்தில் SOFTWARE என்கிறோம். அது கணினியில் தொழிற்படும் கணினி மொழி கட்டளைகளின் தொகுப்பு ஆகும். அதைப் பயன்படுத்தி பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். உதாரணம் போட்டோஷாப் என்பது ஒரு மென்பொருள். அதைப் பயன்படுத்தி போட்டோகளை எடிட் செய்து மாற்றி அமைத்திடலாம். புதியதாக படங்களை அதன் வழியாக உருவாக்கலாம். தொழில் ரீதியாக போட்டோகளை டிசைன் செய்து ஆல்பம் உருவாக்கும் வகையில் மாற்றிடலாம். இன்னும் எத்தனையோ உண்டு.

இணைய இணைப்பு பெற்று இயங்கும் அனைத்து சாதனங்களிலும் மென்பொருள் தரவிறக்கம் மேற்கொள்ளலாம். அதற்கான இணையத்தளம் சென்று தேவையான மென்பொருளை தரவிறக்கம் செய்திடலாம். உதாரணமாக மைக்ரோசாப்ட் வேர்ட் DOWNLOAD செய்திட வேண்டுமெனில் அந்த இணையதளத்திற்குச்சென்று, அங்கு கொடுக்குப்பட்டிருக்கும் தரவிறக்க இணைப்பினைச் சுட்டுவதன் மூலம் பெற்றிடலாம்.

மென்பொருள் டவுன்லோட் செய்திட 4 வழிகள்

1. கணினி வழியே மேற்கொள்ளல்.
2. மொபைல் போன் வழியே டவுன்லோட் செய்திடல்
3. ஸ்மார்ட்போன் வழியே டவுன்லோட் செய்திடல்
4. லேப்டாப் வழியாக தறவிறக்கம் செய்திடல்
5. டேப்லட் வழியாக பதிவிறக்கம் மேற்கொள்ளல்.

1. கணினி வழியே மேற்கொள்ளல்.

உங்களுடைய மேசை கணினி / DESKTOP வழியாக உங்களுக்குத் தேவையானதை GOOGLE சர்ச் என்ஜின் வழியாக தேடி, தேடல் முடிவுகளில் காட்டப்படும் இணையத்தளங்களைச் சுட்டி, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் DOWNLOAD பட்டனை தட்டி டவுன்லோட் செய்திடலாம். மென்பொருளை பொருத்தவரை மேசைக் கணினிதான் டவுன்லோட்செய்திட ஏற்றது. அதிலிருந்து தரவிறக்கியதை பாவிப்பது மிக எளிமையானதாக இருக்கும்.

2. மொபைல் போன் (BUTTON PHONE) வழியாக

சாதாரணமாக நாம் உபயோகிக்கும் பட்டன் போன் வழியாக கூட மென்பொருள் டவுன்லோட் செய்திட முடியும். இணைய இணைப்பு மட்டும் இருந்தால், அதில் storage அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த செயலைச் செய்வது எளிதானது. அல்லது அதில் External Storage வசதி கொடுக்கப்பட்டிருந்தால் SD CARD இணைத்து அதில் பதிவிறக்கம் செய்து சேமித்திடலாம்.

3. ஸ்மார்ட் போன் வழியாக டவுன்லோட் செய்திடல்

இது அனைவரும் பாவிக்கும் ஒரு அருமையான சாதனம். இதில் அந்த போனுக்குத் தேவையான android app களை மிக சுலபமாக தரவிறக்கம் செய்திட முடியும். கணினிக்குத் தேவையான மென்பொருள் என்றாலும், மேற்கூறிய வகையில் தரவிறக்கம் செய்து சேமித்திடலாம். இப்பொழுது எல்லாம் ஸ்மார்ட்போனில் அதிக storage தருகிறார்கள். அல்லது “மெமரி கார்டு” மூலம் பதிவிறக்கம் செய்து, அதை கணினியில் பாவிக்கலாம்.

4. லேப்டாப் மூலம் டவுன்லோட் செய்தல்

கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளி சிறார்கள் வரை லேப்டாப் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதுவும் அரசு வழங்கும் “இலவச லேப்டாப்” மிகச் சிறந்த வசதிகளைக் கொண்டதாக இருப்பதால் இணையத்தை பாவித்து, அதன் மூலம் மென்பொருள் டவுன்லோட் என்பது சாதாரண விடயமாகிவிட்டது. எனவே “லேப்டாப் மூலம் மென்பொருள் டவுன்லோட்” செய்தல் மிக சுலபம்.

5. டேப்லட் மூலம் பதிவிறக்கம் மேற்கொள்ளல்.

டேப்லட்/மடிக்கணினி என்பதெல்லாம் பெயர்களில் மட்டுமே சற்று வேறுபாடாக இருக்கும். மற்றபடி அனைத்து சாதனங்களும் தொழில்படுவதென்பது அடிப்படைகளில் ஒன்றானவைதான். டேப்லட் டில் இன்டர்நெட் கனெக்சனை ஏற்படுத்தி, அதன் மூலம் மென்பொருள் தரவிறக்கம் செய்வது என்பது மிக சுலபம்தான். கூகிள் சென்று தேவையான மென்பொருள் பெயரை இட்டு டவுன்லோட் செய்து கொள்ளலாம். உதாரணமாக “PHOTOSHOP DOWNLOAD LATEST VERSION” எனக்கொடுத்தால், புதிய பதிப்பு “போட்டோஷாப்” மென்பொருள் டவுன்லோட் செய்யக்கூடிய இணைப்பு உள்ள இணைய பக்கத்தினை கூகிள் நமக்கு பட்டியலிட்டு தேடல் முடிவுகளில் காட்டும். அதிலிருந்து நம்பகமான இணையதளத்தினை தேர்ந்தெடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மென்பொருள் டவுன்லோட் செய்வது எப்படி?

1. கூகிள் சர்ச் என்ஜின் செல்லவும்.
2. அங்கு வேண்டிய மென்பொருள் பெயரை டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
3. தேடல் முடிவுகள் காட்டப்படும்.
4. அதிலிருந்து தேவையான இணைப்பை சொடுக்கவும்.
5. அங்கு செல்லும் இணையப்பக்கத்தில் நீங்கள் தேடிய மென்பொருள்
டவுன்லோட் செய்திட கிடைக்கும்.
6. அங்குள்ள DOWNLOAD பட்டனை கிளிக் செய்வதன் மூலம்
அந்த மென்பொருள் உங்கள் கணினி, மடிக்கணினி, டேப்லட், ஸ்மார்ட்போன் ல் தரவிறங்கும்.
7. அதை கணினி அல்லது நீங்கள் பாவிக்கும் சாதனத்தில் “இன்ஸ்டால்” செய்துகொள்ளலாம்.

இதையும் வாசியுங்கள்: சாப்ட்வேர் டவுன்லோட் செய்திட சிறந்த இணையதளங்கள் 

CONCLUSION: இதன்படி உங்களுக்குத் தேவையான சாப்ட்வேரை, நீங்கள் பாவிக்கும் எந்த ஒரு சாதனத்திலிருந்தும் “டவுன்லோட்” செய்து கொள்ளலாம். அதற்கு அடிப்படைத் தேவை இணைய இணைப்புடன் கூடிய ஒரு கணினி, டேப்லட், மடிக்கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் பட்டன் போன் என ஏதாவது ஒன்று மட்டுமே. ஏதேனும்சந்தேகம் இருந்தால் இங்கு உள்ள கமெண்ட் பாக்சில் தெரிவிக்கவும்.

 நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யவும். கீழே அதற்கான பட்டன்கள் (SHARING BUTTONS) கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment