கற்றாழை நன்மை மற்றும் தீமைகள் !
ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளரும் கற்றாழை, ஆப்பிரிக்கா நாட்டினை தாயகமாக கொண்டுள்ளது. இந்தியாவில் கற்றாழை மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் சாகுபடி ஆகிறது. சேலம் மற்றும் தூத்துக்குடியில் கற்றாழை அதிகம் பயிரிடப்படுகிறது. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு, கன்னி, குமரி போன்று பல பெயர்களும் உண்டு. 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் கொண்ட கற்றாழையில், ஏ, ஈ மற்றும் சி வைட்டமின்களும், கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியமும் நிறைந்துள்ள கற்றாழைகளில் பல வகை உண்டு. அதில் சிறந்தது சோற்றுக்கற்றாழை தான்.
7 முறை கழுவியப்பின்னரே கற்றாழை ஜூஸ் தயாரிக்க வேண்டும்
கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜுஸ்களில் பெரும்பாலானவை ஆரோக்கியமானதில்லை. ஏனெனில், கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால், கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் முற்றிய இலைகளில் தான் அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது.
how to make aloe vera juice
கற்றாழை ஜுஸ் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்
கற்றாழை சாற்றினை எந்த விதத்தில் தயார் செய்து குடித்தாலும், அரை மணி நேரத்திற்குள் குடித்து விட வேண்டும். இல்லையெனில் பலன் தராது. மேலும் இந்த ஜுஸினை குடித்த ஒரு மணி நேரம் வரை வேறு எந்த உணவும் உண்ணாமல் இருப்பது நல்லது. கற்றாழை ஜூஸை மாலை நேரங்களிலும் குடிக்கலாம்.
கற்றாழை சாற்றினை வெறும் வயிற்றில் சிறிது வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது நன்மை.
இந்த சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால், வறட்டு இருமல் நீங்கும்.
நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் நீங்கும். மோர் கலந்து குடிப்பதன் மூலம் உடல் சூடு தணியும்.
இந்த சாற்றினை ஒரு டீஸ் பூன் இஞ்சு சாறோடு கலந்து குடித்தால் உடலில் உள்ள மலச்சிக்கல் நீங்கி, கொழுப்பு கரைவதோடு, பித்தமும் குறையும்.
மாதவிடாய் வயிறு வலியை குறைக்கும் கற்றாழை
கற்றாழை ஜெல் ஒரு ஆறு டீஸ் பூன் அளவு எடுத்து, அதில் ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம், பனைவெல்லம் தேவையான அளவு ஆகியவற்றை இடித்து வைத்து கொள்ளவும். அந்த பொடியினை தினமும் இருமுறை சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வர, மாதவிடாய் பொழுது ஏற்படும் வயிற்று வலி குறையும்.
தாம்பத்ய உறவை மேம்படுத்தும் கற்றாழை
சோற்றுக்கற்றாழை வேர்களை சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு சுத்தம் செய்து இட்லி சட்டி தட்டுகளில் வைத்து, அந்த இட்லி பானையில் பாலை ஊற்றி, பாலின் ஆவியில் அந்த வேரினை வேகவைத்து கொள்ள வேண்டும். வேகவைத்த பின்னர், அதனை எடுத்து நன்கு வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். அந்த பொடியினை தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து குடித்து வர, தாம்பத்ய உறவிற்கான சக்தி மேம்படுத்தும்.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் வெயிலிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை பாதுகாக்கிறது. வெப்பத்தினால் ஏற்படும் எரிச்சலை, கற்றாழை ஜெல்’லினை நேரடியாக சருமத்தின் மேல் பூசுவதன் மூலம் நற்பயன்களை அடையலாம். கற்றாழை ஜெல்லில் அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளதால் சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
பல்வேறு பயன்கள் தரும் கற்றாழை
இரசாயனம் அதிகமான சேம்புகளைக் காட்டிலும் கற்றாழை ஜெல்லானது தலையில் உள்ள பொடுகுத்தொல்லைகளை எளிதில் நீக்க உதவுகிறது.
தலையில் ஏற்படும் அமிலத் தன்மையின் காரணமாக உச்சந்தலையில் முடிகொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு கற்றாழை சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
தலையில் ஏற்படும் புழுவெட்டு, முடியின் வேரில் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்டவைகளுக்கு கற்றாழை பரிந்துரைக்கப்படுகிறது.
கற்றாழை சாறானது நெஞ்செரிச்சல், அசிடிட்டி, நெஞ்சு வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
மூலப் பிரச்சனைகளுக்கு கற்றாழை அருமருந்தாகப் பயன்படுகிறது. கற்றாழை சாறினை பருகுவதன் மூலம் உடலில் ஏற்படும் அழற்சி நீங்குகிறது.
கற்றாழை ஜெல்லானது கொழுப்பு சம்பந்தமான பிரச்சனைகளை ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்த பயன்படுகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கும் இது பெரும் மருந்தாக செயல்படுவது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பற்பசையானது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இந்த பற்பசையின் மூலம் பல் துலக்கினால் பற்கள் வலுப்பெறுவதோடு, ஈறு பிரச்சனைகள் நீங்குவதோடு, வாயில் ஏற்படும் துர்நாற்றத்திலிலிருந்து விடுபடலாம்.
கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது நேரடியாக புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
aloe vera detox side effects
கற்றாழையின் பக்க விளைவுகள்
கற்றாழையால் பல நன்மைகள் ஏற்படும் என்பதை பார்த்தோம். இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் அடங்கியுள்ளது. எனினும், அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, இதனை உபயோகிப்பதால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகிறது.
கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கற்றாழையில் உள்ள எரிச்சலூட்டும் குணங்களால் அதை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது கர்ப்பிணி பெண்களின் கருப்பை சுருக்கங்களை அதிகரிக்க கூடும் என்பதால் பிரசவ சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
கற்றாழை உடலில் உள்ள போட்டாசியம் அளவை குறைத்து, மேலும் சீரற்ற இதயத் துடிப்பு, பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்த கூடும் என்பதால் முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் இதனை சாப்பிட வேண்டாம்.
கற்றாழையில் உள்ள லேடெக்ஸ் வயிற்றில் அதிகமான பிடிப்புகள் மற்றும் வலிகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று பிரச்சனைகள் உள்ளோர் தவிர்ப்பது நல்லது.
இதன் ஜெல்லானது கண்களில் சிவத்தல், தோல் தடிப்புகள், எரிச்சல் மற்றும் எரியும் உணர்வு போன்றவைகள் பெரும்பாலானோருக்கு ஏற்படுத்துகிறது.
கற்றாழை குறித்து பல தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்த்தோம். வெயில் காலம் துவங்கியுள்ள இத்தருணத்தில் இந்த தகவல்கள் நிச்சயம் உங்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகிறோம். இதே போன்று நல்ல தகவலோடு உங்களை விரைவில் சந்திக்கிறோம்.., நன்றி.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.