அடி வாங்கும் ஆர்யா ! கண்ணீர் விடும் சாயிஷா ! அப்படி என்னதான் நடந்தது? நீங்களே பாருங்க (வீடியோ)

தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதையம்சங்கள் கொண்டதாக இருக்கும். சினிமா படத்திற்க்காக தன் உடல் வருத்தி, உடற்பயிற்சி செய்து தனக்கென ஒரு பாணியை வைத்து நடித்துக் கொண்டிருப்பவர். இவர் நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் சூப்பர் டூப்பர் ஹீட் படங்களில் ஒன்று. நகைச்சுவை படமான இதில் படித்து அரியர் வைத்து, அதை முடிக்காத ஒரு சாதாரண வீட்டின் அம்மாவிற்கு பிள்ளையாக நடித்து இருப்பார். அதில் அவருடைய அண்ணன் "வெட்னரி" டாக்டராக அதிக பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றும் நபராக நடித்திருப்பார். இந்தப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா நடித்திருப்பார்.

கலகலப்பாக சென்று ரசிகர்களை சிரிக்க வைத்தப்படம் இது. அந்த படத்திற்கு நேரெரிதாக அவர் அகோரியாக ஒரு படத்தில் நடித்திருப்பார். இப்படி வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்யா கில்லாடி. நிற்க. 

சமீபத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் "சல்பேட்டா". பிரபல சர்ச்சை இயக்குனர் பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். வட சென்னை குத்து சண்டை வீர ர்களை மையப்படுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் இந்த படத்திற்காக ஆர்யா ஜிம்மில் கூடுதலாக "ஒர்க்அவுட்" செய்து கொண்டிருக்கிறார்.

arya exercise


குத்து சண்டை வீர்ராக நடிப்பதால், அதற்காக கூடுதல் நேரம் செலவழித்து கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி பயற்சி எடுக்கும்பொழுது, பயிற்சியாளர் அவரை அடி வயிற்றில் ஒரு ரப்பர் போன்ற பொருளைப் பயன்படுத்தி அடிக்கிறார். அந்த வீடியோ பதிவை ட்விட் செய்திருக்கும் ஆர்யா, "பெரிய்ய பலன் கிடைக்க, அதிக கஷ்டபட வேண்டியதிருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். 


அதுகுறித்து அவரது ரசிகர்கள் ஆர்யாவை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு மனைவியாக சாயிஷா, "உன்னை இந்த நிலையில் பார்ப்பதற்கு மிக கஷ்டமாக உள்ளது" என ட்வீட் செய்துள்ளார் இதோ அந்த வீடியோ உங்களுக்காக. Post a Comment

0 Comments