சாப்ட்வேர் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?

சாப்ட்வேர் என்பது தமிழில் மென்பொருள் என குறிக்கப்பெறுகிறது. கணினி, மொபைல் போன்ற சாதனங்களின் பகுதிப் பொருட்களை ஹார்ட்வேர் என்றும், அதை இயக்கிடச் செய்திடும் புரோகிராம்களை சாட்ப்வேர் என்றும் குறிப்பர். பொதுவான பெயர் அது என்றாலும், அது பயன்படுத்தும் இடம், சாதனத்தைப் பொருத்து அதனுடைய பெயர்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்களில் அவற்றை APP கணினி முதலான சாதனங்களில் சாப்ட்வேர் எனவும் அழைக்கப்படும்.

கணினிக்குப் பயன்படுத்தும் மென்பொருட்கள்;


இவற்றில் பல வகைகள் உண்டு. ஒரு கணினி இயங்குவதற்கே, அதற்கு உண்டான மென்பொருள் தேவைப்படும். அது இருந்தால்தான் கணினி அடிப்படை இயக்கமே நடைபெறும். கணினியில் உள்ள பகுதிப் பொருட்களை இணைத்து செயல்பட வைப்பதற்கென ஒரு மென்பொருள் தேவை. அதற்குப் பெயர்தான் "இயங்குதளம்-OPERATING SYSTEM" .

அதே போல கணினியில் பல்வேறு பணிகளைச் செய்திட என சில மென்பொருட்கள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி ஆபிஸ், டிசைனிங், கணக்குகள் போன்றவற்றைச் செய்திடலாம். குறிப்பிட்ட பணிகளுக்கென உள்ள சாப்ட்வேரைப் பயன்படுத்தினால் மட்டுமே. அந்த வேலைகளை அதில் செய்ய முடியும். உதாரணமாக உங்களிடத்தில் உள்ள போட்டோக்களை மேலும் மெருகேற்ற, வெட்டி, ஒட்ட, பேக்ரவுண்ட் மாற்ற வேண்டுமானால் அதற்குப் பயன்படுவது போட்டோ எடிட்டிங் மென்பொருள்.

உ.ம்; போட்டோஷாப்

நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், மற்றும் அதில் பணிபுரிவோரின் டேட்டாக்கள் போன்றவற்றை சேமித்திட பயன்படும் ஒரு புரோகிகிராம் Excel.

அதேபோல நிறுவனங்களின் கடிதங்கள், ப்ரோபசல்கள் போன்றவற்றை தட்டச்சிட்டு டாகுமெண்ட்டுகளாக மாற்றிட எம்எஸ்வேர்ட் என்ற பயன்பாடு பயன்படுகிறது.

பிள்ளைகள் ஓவியம், படங்கள் வரைந்து பழகிட அடிப்படையாக பயன்படுவது Pbrush எனப்படும் Paint பயன்பாடு.

பொழுதுபோக்க, விளையாட பயன்படுத்துவது கேம்ஸ் என்ற பயன்பாடு. சினிமா, வீடியோ போன்வற்றை பார்த்திட பயன்படும் பயன்பாடு PHOTO VIEWER, WINDOWS PLAYER. இப்படி தனிதனி செயல்பாடுகளை செய்திட தனித்தனி மென்பொருட்கள், புரோகிராம்கள் உண்டு.

சாப்ட்வேர் என்றால் என்ன?


சாப்ட்வேர் என்பது மெது மெதுவென இருக்கும் என நினைக்க வேண்டாம். அது கண்ணுக்குப் புலனாகதது. அவற்றை கணினி மொழிகொண்டு எழுதி, தொகுக்கலாம். அவ்வாறு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கென நிரல்களை எழுதி தொகுப்பட்ட தொகுப்பிற்குப் பெயர்தான் மென்பொருள். அந்த மென்பொருளானது, கணினியில் இருஇக்கும் Ram, Processor, mother board போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும்.

WHAT IS SOFTWARE IN TAMIL


வன் பொருள் என்றால் என்ன?


கணினியை கட்டமைக்க, நம் கண்ணிற்கு புலனாகும் பொருட்கள் அனைத்துமே வன்பொருட்கள் எனப்படும். ஆங்கிலத்தில் HAREDWARE என அழைப்பர். மென்பொருள், வன்பொருள் ஒன்றுக்கொன்று தொடர்பாடல் ஏற்படுத்திக்கொண்டு, அவைகள் நாம் கொடுக்கும் இன்புட்டை ஏற்றுக்கொண்டு, அதன் வழி செயலாற்றும்.

Post a Comment

0 Comments