நடிகர் ரஜினிகாந்த் காயம் ! ரசிகர்கள் கவலை ! Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் !

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது புதிய படமொன்றில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் நிலையில்,  இன்று ரஜினிகாந்த்  பியர் க்ரில்ஸ் உடன் பிரபல நிகழ்ச்சியாக 'மேன் vs வைல்டு' என்ற ஷோவில் பங்கேற்றிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ரஜிகாந்திற்கு சிறிய அளவு காயம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அந்த மேன்-வைல்டு ஷோ ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. முன்னதாக இந்த ஷூட்டிங்க கர்நாடாகவின் பந்திப்பூர் காப்பகத்தில் நடைப்பெற்றது.

thalaivar rajinikanth


இதன்போது ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட காயம் மிக பெரியதாக இல்லை என்றும், அவர் இப்பொழுது நலமாக இருக்கிறார் என்று ஷூட்டிங் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

rajinikanth shooting


இது குறித்து ANI தனது ட்விட்டர் பக்கத்தில் "படபிடிப்பின்போது ரஜினி காந்திற்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் ட்விட் செய்துள்ளனர்.

மேலும் அந்த விலங்குகள் காப்பாகத்தில் நாளை ஷூட்டிங் நடத்த அனுமதி இல்லை என்றும், 28 மற்றும் 30ம் தேதி ஆறு மணி நேரம் ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இன்று ரஜினிகாந்துடன் ஷூட்டிங் நடத்திவிட்டு, பிறகு 30ம் தேதி நடிகர் அக்ஷய் குமார் உடன் ஷூட்டிங் நடத்த மேன்vs வைல்ட் குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ரஜினி காயம் காரணமாக அந்த திட்டமிடலில் சிறு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஷூட்டிங்கின்போது விதியை மீறி drone Camera பயன்படுத்தியதாக குழுவினரிடம் விளக்கம் கேட்டு விசாரித்துள்ளது பந்திப்பூர் காப்பக நிர்வாகம்.
ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். புரளியை ஏதும் கிளப்ப வேண்டாம் என ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதை வீடியோ பதிவு செய்து ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

#ரஜினிகாந்த் #சினிமா #ஷூட்டிங் #விபத்து #காயம்

Post a Comment

0 Comments