பாகனிடம் அன்பை வெளிப்படுத்த தடுப்பு வேலியை தாண்டும் குட்டி யானை ! பார்ப்பவர் மனதை கவர்ந்த காணொளி இதோ !

செல்லப் பிராணிகள் சில நேரம் அன்பை வெளிப்படுத்த எது வேண்டுமானாலும் செய்யும். குறிப்பிட்ட இடைவெளியில் அதை சந்திக்காமல் இருந்துவிட்டு, திடீரென முன்னே போய் நின்றால் அது அடையும் குதூகலத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். தன் அன்பை வெளிப்படுத்த சுற்றி வந்து முட்டி மோதி தள்ளி மேலே விழுந்து புரளும். நாய் போன்ற நன்றியுள்ள பிராணி என்றால் நாக்கால் நக்கி , வாலாட்டி , அது ஒரு தனி பாசையில் பேசும்.

அந்த வகையில் தாய்லாந்தின் யானைகள் சரணாலயம் ஒன்றில் வசிக்கும் 20 வயது குட்டி யானை ஒன்று, தன்னுடைய பாகனை அன்பால் ஆர தழுவ முயற்சிக்கும் காட்சி ஒன்றினை ட்விட்டர் பக்கத்தில் ஜார்கண்ட் மாநில ராஜ்ய சபா எம்பி நாத்வானி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

yanai kutti anbuஅதில்தான் மேற்குறிப்பிட்ட பாசப்போராட்டம் பதிவாக்கப்பட்டுள்ளது. அதில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் யானைப் பாகனை தன்னுடைய துதிக்கையை தோள்பட்டையில் ஒரு தோழனை ப்போன்று போட்டு அந்த குட்டியானை பகிரும் அன்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

அவர் யானை குட்டியின் அன்பை ஏற்றவாறு பெயிண்ட் செய்ய, மீண்டும் அது தன்னுடன் அரவணைத்துக்கொள்ள, அங்கிருக்கும் தடுப்பு வேலியின் மீது, ஒரு மனிதனைப் போன்று முன்னங்காலை அதன் மீது வைத்து, அருகே யானை பாகனை அழைத்து அரவணைக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது.

இந்த பாச மழை மொழியும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த காணொளி உங்களுக்குகாக


 #குட்டியானை #பாகன் #பாசம் #வீடியோ #ட்விட்டர்

Post a Comment

0 Comments