சிறு வயதிலேயே வீட்டை விட்டு துரத்தப்பட்ட திருநங்கை ஸ்நேகா. ஜீவா என்ற பெயர் கொண்ட இவர் தர்மதுரை விஜய் சேதுபதி படத்தில் நடித்திருந்தார். இவருக்கு எப்படி சினிமா வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி கேட்ட கேள்விக்கு மீடியா முன் தன்னுடைய கண்ணீர் கதையை சொன்னார்.
என்ன்னுடைய சொந்த ஊர் சிவகாசி. நான் திரு நங்கை என்று தெரிந்ததும் என்னை ஒதுக்கினர். ஒரு கட்டத்தில் வெறுத்து அடித்து துவைத்தனர். அவர்களது கொடுமையை தாங்காமல் 13-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன்.
கோயம்பேடு வந்து ஒரு டீ கடையில் வேலை செய்தேன். அப்பொழுதுதான் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாய்ப்புகள் கேட்டு சென்று வந்தேன். சில சினிமா கம்பெனிகளில் என்னை உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை.
சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். சினிமாவிற்கு எப்படி போட்டோ எடுத்து கொடுப்பது என்பது கூட அப்போது இருந்தேன்.அதனால் என்னுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை கொடுத்து வந்துவிடுவேன்.
அப்பொழுது சினிமாவின் மீது அதிக ஆசையால் வடபழனியில் உள்ள புதிய பூமி எனும் நடனப்பள்ளியில் நடனம் கற்றுகொண்டேன். அங்குள்ள சுவீட் கடையில் அப்பொழுது வேலை பார்த்து வந்தேன்.
சிறுவயதிலேயே எனக்கு நடனம் என்றால் உயிர். அதனால் நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதன் பிறகு மேடை நடன கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் நிறைய பேரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானேன். ஆனால் அதையெல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை.
அதன் பிறக எனக்கு கிடைத்த ஒப்பனை கலைஞர் பணியை சினிமாவில் தொடங்கினேன். பிரபல நடிகைகள் அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தேன்.
அந்த சமயத்தில் ‘தர்மதுரை’ படத்திற்கு விசாலினி அவர்களுக்கு ஒப்பனை கலைஞராக பணியாற்ற சென்றிருந்தேன். ஆனால் அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. திடீரென இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் என்னை அழைத்து நடிக்கிறாயா எனக் கேட்டார். உடனே எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. சும்மா கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு சந்தேகமாக பார்த்தேன். அவர் உண்மையிலேயே கேட்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதித்தேன்.
அப்பொழுதும் எனக்கு சினிமாவில் நடிக்க தயக்கமாக இருந்தது. என்னுடைய தயக்கத்தை போக்கி, நல்ல நண்பராக, ஒரு சகோதராக அண்ணன் விஜய் சேதுபதி என்னை மதித்து தன்னம்பிக்கை கொடுத்து நடிக்க ஊக்கப்படுத்தினார்.
அதன் காரணமாக படம் வெளியான பிறகு, என்னுடைய சொந்தங்கள் எனக்கு அலைபேசி வழியாக பேசினர். என்னுடைய குடும்பத்தினர் இப்பொழுது என்னை ஏற்றுக்கொண்டனர். தர்மதுரை படத்திற்கு பிறகு மேலும் சில தமிழ் சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் மலையாளர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்துள்ளது.
என்னுடைய குடும்பத்தாருடன் சேர்த்து வைக்க உதவிய விஜய் சேதுபதி அண்ணா, மற்றும் சீனு சார் மற்றும் சினிமாவிற்கு என்னுடைய நன்றி.

0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.