பிரபல நடிகையின் தந்தை அதிர்ச்சி மரணம்! குலுங்கி அழுத நடிகை! எதனால் இறந்தார் தெரியுமா? அதிர்ச்சி தகவல் உள்ளே !

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமலாபால். மைனா படத்தின் தமிழுக்கு அறிமுகமானதிலிருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இதற்கிடையில் டைரக்டர் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆறு மாதங்கள் கூட நீடிக்காத அந்த காதல் கல்யாணம், ஒரு வருடத்திற்குள் மண முறிவு வரை சென்றது. தொடர்ந்து படத்தில் வாய்ப்புகள் வருவதால் திருமணம் அதற்கு ஒரு தடையாக இருக்க கூடாது என நினைத்து அவர் விவாகரத்துப் பெற்றார்.

actress amala paul father pass away

தற்பொழுது மும்பையில் தனியாக வசித்து வரும் அமலாபால் தொடர்ந்து தனுஷ் படங்களில் இரண்டு படங்கள் நடித்து பரபரப்பை ஏறபடுத்தினார். பிரபல நடிகர் ஒருவருக்கும் அவருக்கும் இடையே காதல் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசு கிசுக்கப் பட்ட நிலையில், அது வெறும் கிசு கிசுதான். உண்மையில்லை என்பதை அவர்கள் இருவரும் வெளிப்படையாக தெரிவித்து பேட்டியளித்திருந்தார்கள்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் கமிட் ஆன அமலாபால் "ஆடை" படத்தில் நடித்து, இந்திய உலகையே திரும்பி பார்க்க வைத்தார். படத்திற்கு ஏற்றவாறு, ஒரு காட்சியில் ஆடையில்லாமல் நடித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தார். எதற்கும் துணிந்த பெண் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் அவருடைய தந்தை "மாரடைப்பு" ஆல் இறந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது பற்றி அம்பால் கூறுகையில் எனது தந்தைக்கு 4ம் நிலை புற்று நோய் இருந்தது. இது எங்களது குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை எங்களால் கணித்து கூற முடியாத நிலமையில் இருந்தோம். நான் மும்பையில் இருந்தபோது எனக்கு வரும் போன்களில், அம்மா பேசினால் அது அப்பாவின் இறப்பு குறித்து இருக்கும் என அவ்வப்போது கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.

இரவு நேரத்தில் என் அம்மாவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தால் அது அப்பாவின் இறந்த செய்தாக இருக்குமோ என அச்சப்பட்டேன். அம்மாவைவிட அப்பா எனக்கு அதிக சுதந்திரம் கொடுத்திருந்தார். நான் எது செய்தாலும் அது சரியானதாக இருக்கும் என நம்பினார். "ஆடை" பட டீசரை காட்டியபோது அவள் எது செய்தாலும் சரியாக இருக்கும் என கூறி பாராட்டினார். அம்மாதான் சற்று இது போல நடிக்க வேண்டுமா என வருத்தப்பட்டார்.

AMALA PAUL DHANUSH


என் அப்பா எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்து சென்றுள்ளார். அவரின் மறைவு என்னை வெகுவாக பாதித்துள்ளது. என் சினிமா வாழ்க்கையில் எந்த சிதைவு ஏற்பட்டாலும் நான் அது பற்றி கவலைப்பட போவதில்லை. ஆனால் சொந்த வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் என்னை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கி, என்னை அன்றாட பணிகளிலிருந்து விலகி, செயல்பாடு இல்லாமல் இருக்கச் செய்கிறது. நான் மிகவும் கவலையடைந்திருக்கிறேன் என்றார்.

என் அப்பாவின் இறப்பு மாரடைப்பு வந்த்தால் நடந்தது என வெளியுலகிற்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மருத்துவர் எங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டார். நிச்சயம் அவர் புற்றுநோய் பாதிப்பால்தான் தினம் தினம் இறந்து கொண்டிருந்தார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

#அமலாபால் #நடிகை #அப்பா #மரணம் | #AMALAPAUL #FATHER #PASSESAWAY #ACTRESSPost a Comment

0 Comments