இந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா

இப்பொழுதெல்லாம் இந்திப் படங்களைக் காட்டிலும், தென்னிந்திய திரைப்படங்கள் வசூலிலும், தரத்திலும் காட்டடி அடிக்கிறது.

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாத்துறை, தரத்திலும், வசூல் சாதனையிலும் இந்தி படங்களை விட, தரமான படங்களை தந்து நிமிர்ந்து நிற்கிறது.

குறிப்பாக பிரபாஸ் நடித்த பாகுபலி, சாஹோ போன்ற தெலுங்கு படங்களும், தமிழில் ரஜினிகாந்த் நடித்த `பேட்ட', விஜய் நடித்த `பிகில்,' அஜித் நடித்த `விஸ்வாசம்,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களும், இந்தி படங்களுக்கு நிகராகவும், அதைவிட கூடுதலாகவும் வசூல் சாதனை புரிந்து, தென்னிந்திய சினிமாவுக்கு புகழை தேடி தந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா ஸ்டார்களும் உலக அளவில் அதிக புகழ்பெற்று வருகின்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரம் மற்றும் கதைகள் உலகத் தரத்தில் உள்ளதால், உலக அளவில் தென்னிந்திய திரைப்படங்கள் திரும்பி பார்க்கப்படுகின்றனர்.

bigilu


புதிய கதைகள், புதிய தொழில்நுட்பங்கள், அற்புதமான நடிப்பு ஆற்றல் ஆகியைகளை ஒருங்கே பெற்றிருப்பதன் மூலம் தென்னிந்திய சினிமா உலக அளவில் தலை நிமிரந்து கொடுக்கிறது. 

Post a Comment

0 Comments