பிகில் டீசர் ரெடி ! இயக்குனர் அட்லி

சர்க்கார் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் "பிகில்". ஏக எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் "வேற லெவல்" படமாக இருக்கும் என அந்தப் படத்தின் இயக்குனர் அட்லி தெரிவித்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் "பிகில் ஆடியோ" வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் என் படங்களை கிழியுங்கள், என் பேனரை எப்படி வேண்டுமானாலும் கிழித்துவிட்டுப் போங்கள். ஆனால் என் ரசிகன் மீது கை வைக்காதீர்கள் என பேச ரசிகர்களை ஏக மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.


இயக்குனர் அட்லி பேசும்பொழுது, தன்னை சமூக வலைத்தளங்களில் "மீம்ஸ்" போட்டி கீழ்தரமாக உருவேற்றப்பட்டதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், "கருப்பு" என்பது ஒரு நிறம்தான். அறிவல்ல என்று த த்துவார்த்தமாக பேசி தன்னுடைய கருத்தை தெரிவித்தார். கருப்பு என்பது தோலின் நிறம் மட்டுமே.. என்னுடைய திறமையை திரையில் பாருங்கள் என்பது போல இருந்தது அவருடைய பேச்சு.

எத்தனை அட்டை கருப்பாக இருந்தாலும், திறமை, தன்னம்பிக்கை இருந்தால் என் மனைவி போல வெள்ளையாக இருக்கும் வெற்றி தானாகவே வந்து விடும் என்பது போல அவருடைய நடத்தை மேடையில் இருந்தது.

அத்தோடு விட்டாரா ? "அண்ணனுக்கு நான்தாண்டா படம் பண்ணுவேன்" வேற யாரு பண்ணுவாங்க. என விஜய் அண்ணனுக்காக உணர்ச்சிப் பெருக்கோடு பேசி முடித்தார். இதுவரைக்கும் அட்லியை மௌனமாக பார்த்த ரசிகரகள் அன்றைய இசை வெளியீட்டு விழாவில் அவர் கொந்தளித்துப் பேசியதை ரசித்து கொண்டாடினார்கள். அது மட்டுமல்லாமல் "விஜய் ஸ்டைல்" லில் அவரது உடல் மொழி இருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு "பிகில் பட டீசர்" வெளிவரவிருக்கும் மகிழ்ச்சியாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த டீசர் ரெடி ஆகிவிட்டதாகவும், அதற்கான சென்சார் அனுமதி கூட கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள்ளாக Bigil Teaser வெளியாவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகில் பட டீசர் "சர்கார்" பட டீசரை விட அதிக பார்வைகள் பெற வைப்பதற்கு ரசிகர்கள் இப்பொழுதே தயாராகிவிட்டனர் என  விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இசை வெளியீட்டு விழா, டீசர் என அடுத்த முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் "பிகில்" படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு சிறந்த "தீபாவளி" கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

bigil movie teaser released


Post a Comment

0 Comments