செம்பருத்தி ஜெனிபருக்கு திடீர் திருமணம். மாப்பிள்ளை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

தமிழகத்தில் அதிகம் பேரால் பார்ப்பட்டு வரும் தொலைக்காட்சி தொடர் "செம்பருத்தி" இத்தொடரில் வரும் நாயகன், நாயகியின் கெமிஸ்ட் 200% ஒத்துப் போவதால் உண்மையாகவே ஒரு காதல் நடப்பது போன்ற உணர்வை தோற்றுவித்ததுதான் இத்தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

500 எபிசோட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடரில் நடிப்பவர்களின் ஒவ்வொருவரின் பர்சனல் வாழ்க்கையும் சுவராஷ்யமிக்கதாக இருந்து வருகிறது. 

செம்பருத்தி நாயகன் ஆதியை ஒருதலையாக காதலித்து வரும் உமா கேரக்டரில் நடிப்பவர் ஜெனிபர். துறு துறு நடிப்பால்  இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் திடீரென ஜெனிபர் தனக்கு திருமணமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

கடந்த 25ந் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு மிக எளிமையாக நடைப்பெற்ற இத்திருமணத்தில் மாப்பிள்ளை யார் தெரியுமா? 

செம்பருத்தி தொடருக்கு முன்பே பொறியியல் பட்டதாரி சரவணன் என்பவரை ஜெனிபர் காதலித்து வந்தார். இருவீட்டார் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் சீரியல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்துள்ளனர். ஆனால் சீரியல் முடிவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வதை கணக்கில் கொண்டு சரவணன னை திடீரென திருமணம் செய்துகொள்ளார் ஜெனிபர்.

semparuthi jenifar

திருமண புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஜெனிபர் இந்த தகவலை உறுபடுத்தியுள்ளார். அதற்குள்ளாக திருமணம் செய்துகொண்டாரே என அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். எப்படி இருந்தாலும் திருமணத்தில் வாழ்த்துச் சொல்வதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். 

Post a Comment

0 Comments