நேர்கொண்ட பார்வை | கட் அவுட் வைத்து தெறிக்க விடும் அஜீத் ரசிகர்கள் !

கடந்த வருடம் வெளிவந்து சக்கை போடு போட்ட விசுவாசம் திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பு ரசிகர்கள் ராட்சஷ கட்டவுட்களை வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர். அதில் ஒரு கட்டவுட் சரிந்து அஜீத் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். அது அப்போது பெரிய விவாதப் பொருளாக மாறியது. அதுபோன்ற இந்த படத்தின்போதும் எதுவும் அசம்பாவிதம் நிகழக்கூடாது என ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

nerkonda parvai | ajith

இந்நிலையில் காசிமேடு தியேட்டரில் அஜீத் வக்கீலாக இருக்கும் பெரிய கட்டவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர். இன்று ரீலிசாக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்திற்காக கடந்த சில நாட்களாக அஜீத் ரசிகர்கள் தூக்கம் கெட்டு வேலை செய்கின்றனர். விசுவாசம் படத்தைப் போன்றே இந்த படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டு போல ரசிகர்கள் அஜீத்தின் படம் வெற்றிப்படமாக வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கின்றனர். சென்னையில் வைக்கப்பட்ட வக்கீல் அஜித் மாபெரும் கட்டவுட் வைத்ததை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments