ட்விட்டரில் முதல் மூன்று இடங்களை பிடித்த நேர்கொண்ட பார்வை ஹாஷ்டாக்

அஜீத் நடிப்பில் உருவாகி, வெளிந்துள்ள நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி வெளியிடிப்பட்ட நிலையில் அஜீத் ரசிகர்களை அதை பட்டாசு வெடித்து, பால் அபிசேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

nerkonda parvai cinema ajith

இந்த படத்தில் அஜீத் வழக்கறிஞராக நடித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப்படம்  அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீனியாக அமைந்திருப்பதை காண முடிந்தது. அஜீத்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், வெளியான அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது.


திரையரங்கு சுற்றிலும் பேனர்களால் நிரம்பி வழிந்தது. பார்ப்பது அது ஒரு மிகப்பெரிய திருவிழாக்கூட்டம் போல காட்சி அளித்தது. திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், மேளம் கொட்டி ஆட்டம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் படத்தை கண்டு களித்தார்.


இந்தியா முழுவதிலும் ட்விட்டரில் ரசிகர்கள் #nerkondaparvaifromtoday என்ற ஹேஷ்டாகை பிரபலப்படுத்தி வருகின்றனர். #NKPFestivalBegins என்ற ஹாஸ்டேகும் பிரபலமாகி வருகிறது. இந்திய அளவில இந்த இரண்டு ஹாஸ்டாகும் ட்ரெண்டாகி முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. 

Post a Comment

0 Comments