முதல் ஷோ பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத நடிகை !

தான் நடித்த படத்தின் முதல் ஷோ பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுதார் நடிகை ஒருவர்.

நேற்று தல அஜீத் நடித்த படம் நேர்கொண்ட பார்வை வெளியாகியது. அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க அவரது ஜெயன்ட் சைஸ் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.

தல அஜீத் நடித்து எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், ரிலீஸ் தேதிக்கு முன்னதாகவே தயாரான படம் இது. அதிகாலை 1 மணிக்கு இந்த படம் முதல் காட்சியாக ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. அதன் பிறகு மற்ற காட்சிகளில் திரையிடப்பட்டது. அமிதாப்பச்சன் நடித்து சூப்பர் ஹிட் அடித்த "பிங்க்" படத்தின் ரீமேக் இது.


முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கு என்று சிறப்புகாட்சி காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனமே கிடைத்தது. ரசிகர்கள் அனைவருமே இது குடும்ப படம். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பெண்களுக்காக படம் என்றெல்லாம் முதல் ஷோ, முதல் விமர்சனத்தில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக இருந்து சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதில், இப்படத்தில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார்.

அவருடன் சென்ற மீரா கிருஷ்ணன் இப்படத்தைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார் என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கண்ணீர் மல்க தியேட்டரை விட்டு வெளிவந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. 

Post a Comment

0 Comments