பிக்பாஸ் சேரனின் உண்மை முகம் இதுதானா? அதிர்ச்சியில் உறைந்து போன பார்வையாளர்கள் !

பிக்பாஸ் தொடக்கத்திலிருந்தே பிரச்னைகள் வந்து கொண்டே உள்ளது. பிஸ்பாஸ் வீட்டில் இருந்தவர்களை போலிஸ் தேடி வந்தது. அதன் பின்பு நடந்த அட்ராசிட்டிகள் அனைத்தையும் ரசிகர்கள் அறிந்ததே. சமீபத்தில் சேலம் சரணவனன் பெண்களை தவறாக சித்தரிக்கும்படி  தவறாக கருத்தை வெளியிட்டதால் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக சரவணன், சேரன் மோதல் பயங்கரமானதாக இருந்தது. மறைமுகமாக தொடங்கிய பனிப்போர், நேரடியாக முகத்துக்கு நேராக பேசும் அளவிற்குச் சென்றது. இதன் விளைவாக சரணவன ன் நீக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் வலுத்து வந்தது.

இதற்கிடையே சரவணன் சேலத்தில் கல்லூரிக்குச் செல்லும்பொழுது பெண்களை உரசிப் பார்ப்பதென்றே சென்றதாகவும், அவரது இளமைப் பருவம் அந்தளவிற்கு குறும்புத்தனம்மிக்கதாக இருந்தது என வெளிப்படையாக பேசியதற்கு , சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் விளைவாக அவர் உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சேரன் சொந்த வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவத்த்தவர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவரது உண்மை முகம் வெளிபட்டு வருகிறது.

பிக்பாஸ் போட்டியில் பொங்கல் டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது. அதில் இரு குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்தனர்.

அதன்படி லொஸ்லியா, சேரன், கஸ்தூரி, அபிராமி, சாக்‌ஷி ஒரு அணியாகவும், தர்ஷன், சாண்டி, ஷெரீன், கவீன், முகேன் ஒரு அணியாகவும் மற்றவர்கள் வேறொரு அணியாகவும் பிரிந்து பொங்கல் வைத்தனர்.

இந்த டாஸ்கில் மதுமிதா நடுவராக இருந்து, எந்த அணியின் பொங்கல் சுவையாக உள்ளது ருசித்துப் பார்த்துக் கூற வேண்டும். அதன்படி கஸ்தூரி அணியினர் வைத்த பொங்கல் சொதப்பிவிடவே, சாண்டி அணியினர் பொங்கல் அற்புதமாக செய்து அசத்தி விட்டனர். இறுதியில் சாண்டி அணியின் பொங்கல் தான் சுவையாக இருந்தது என்று மதுமிதா கூறினார்.

seran mathumitha


இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், சேரன், மதுமிதாவின் அருகில் சென்று பொங்கல் செய்து கொண்டிருந்த போது, எதிரணியினர்              அவர்களுக்கு டிப்ஸ் கொடுத்தீர்கள் என்று கூற, அதற்கு மதுமிதாவோ ஆமாம், ஆனால் நான் பொங்கலுக்கு மட்டும் சொல்லவில்லை என்றார்.

ஆனாலும் அதை ஏற்காத சேரன் நீ ஓரவஞ்சமாக நடந்து கொண்டாய், அவர்கள் அணி தான் ஜெயிக்க வேண்டும் என்று உன் நடவடிக்கை இருந்தது என குற்றம் சாட்டி கடுமையாக நடந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் உதாரணமாக இருக்க வேண்டிய சரவணன் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு மதுமிதாவிடம் விவாததித்தைப் பார்க்கும்போது, சேரனின் உண்மையான முகம் இதுதானா என பார்வையாளர்கள் பொறிந்து தள்ளி வருகின்றனர். 

Post a Comment

0 Comments