சிங்கப்பெண்ணே பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து அர்ச்சனா கல்பாத்தி போட்ட டுவிட்- ரசிகர்கள் உற்சாகம் !

சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பாடல் "சிங்கப் பெண்ணே" .பெண்களை கௌரவிக்கும் வண்ணம் அண்மையில் வந்த இப்பாடல் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்றறுள்ளது. இந்த பாடல் வெளிவந்த முதல் யூடியூபில் செம டிரண்டிங்கில் உள்ளது. ரசிகர்களை தாண்டி,  பிரபலங்களும் இப்பாடல் குறித்து தங்களது கருத்தை நல்லவிதமாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்தளவிற்கு பாடல் வரிகள், அதனுடன் ஏ.ஆர். ரஹ்மானின் இசை சேர்ந்து பாடலுக்கு ஒரு உயிர்ப்பை அளித்துள்ளது. பாடலை கேட்டாலே பெண்கள் பரவசமடைந்து உற்சாகம் கொண்டு பொங்கும் வகையில் அந்த பாடல் அமைந்துள்ளது.

singa penne archana kalpathi


இதனை அடுத்த பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்கள் ட்விட்டரில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாம் எல்லோரும் ஒரு பெண்ணை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்திருப்போம், அவர்களை பற்றி பதிவிடுங்கள், ஒரு வீடியோ வருகிறது என பதிவிட்டுள்ளார்.ரசிகர்களும் அவர் சொன்ன விஷயத்தை உற்சாகமாக செய்ய இப்பொழுது ட்விட்டரில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.


Post a comment

0 Comments