அம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா? எழுந்தது புதிய சர்ச்சை !

உலக கோப்பையை வெல்லும் என்ற நினைத்திருந்த இந்திய அணி அரையிறுதியோடு நடையை கட்டியது. அதற்கு இயற்கையோடு நடுவர்களின் தவறான தீர்ப்பும் காரணம் என இப்பொழுது தெரிய வந்துள்ளது. உண்மையில் இந்தியாவிற்கு எதிராக பல சதிகள் நடந்துள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. நம்பர் ஒன் அணியாக விளங்கிய இந்திய அணியில் சில பல குழப்பங்கள் ஏற்படினும், இறுதியில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று வந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாத நேரங்களில் இந்திய அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால் பௌலிங் மூலம் அதை சரிக்கட்டி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். இந்திய அணிக்கு எதிராக இயற்கை இரு முறை சதி செய்தது. இந்திய அணிக்கு எதிராக நடுவர்கள் கொடுத்த சில தவறான தீர்ப்புகளால் இந்திய அணியின் உலக கோப்பை கனவு தகந்தது என கிரிக்கெட் ரசிகர்ள் ஆதங்கபடுகின்றனர்.

உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன்அவுட் ஆன பந்து, 'நாட் பால்' ஆகி இருக்க வேண்டியது. அதனை அம்பயர்கள் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலக கோப்பை கனவு அரையிறுதியோடு முடிவுக்கு வந்தது என்று பலரும் கருத்துகளை குறி வருகின்றனர்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை தொடரின் அரையிறுதியில், நியூசி., இலக்காக நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, நங்கூரமாக நிலைத்து நின்று ஆடி படுதோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியை ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக கட்டமைத்து கொண்டு சென்றனர்.

சிக்சர், பவுண்டரிகளாக ஜடேஜா விளாச, தோனி அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்து வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றார்.


no ball sarchai
முக்கிய தருணத்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட  ஜடேஜாவும் அவுட் ஆக, தனி ஆளாக போராட தோனி தயாரானார். அதற்கு அடியெடுத்து வைப்பது போல , 49வது ஓவரின் முதல் பந்தில் சூப்பர் சிக்சர் ஒன்றை விளாசி நம்பிக்கை ஊட்டினார்.

ரன்கள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தோனி அந்த ஓவரின் 3வது பந்தில் 2 ரன்னுக்கு ஓட , ரன் அவுட் ஆகி பெருத்த ஏமாற்றத்துடன் வெளியேறினார். ரசிகர்களின் நம்பிக்கையும் அதோடு தகர்ந்தது.

இந்நிலையில், தோனி ரன் அவுட் ஆன பந்து குறித்து ஆய்வு செய்த போது அந்த பந்து 'நாட் பால்' என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 3வது பவர் பிளே ஓவர்களான, 40- 50 ஓவர்களில் '30 மீட்டர்' வட்டத்திற்கு வெளியே, 5 பீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும் ஆனால், தோனி அவுட் ஆன பந்தில் உள்வட்டத்திற்கு வெளியே 6 பில்டர்களை நியூசி., கேப்டன் வில்லிம்சன் நிறுத்தியிருந்தார்.

ஐசிசி விதியின் படி, அந்த பந்து நாட் பால் என அம்பயர்கள் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதனை அம்பயர்கள் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. 'நோ - பால்' சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் இந்திய ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களை கொட்டி தீர்க்கின்றனர்.

Post a comment

0 Comments