விஜய் பிறந்த நாளுக்கு தெறிக்க விடும் திரையரங்கம்..! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து! விவரம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் முதன்மை கதாநாயகன் அந்தஸ்தை பெற்றிருப்பவர் நடிகவர் விஜய். தளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவிருப்பதை ஒட்டி, விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாட கோலாகல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இரத்த தானம், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது என வழக்கமான பணிகளை மேற்கொள்வதோடு சில வித்தியாசமான நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

அந்த வகையில் பல்வேறு திரையரங்குகள் விஜய் பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்த படத்தை அன்றைய நாளில் திரையிடுகின்றன. அதனையொட்டி நெல்லை ராம் சினிமாஸ்ம் தங்கள் பங்கிற்கு விஜய் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.அன்று அட்லீ இயக்கத்தில் வெளியாக பயங்கர ஹிட் அடித்த தெறி படத்தை இலவசமாக ரகிசர்களுக்கு திரையிட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ, விஜய் பிறந்தநாள் என்றால் ரசிகர்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம்தான்.

Post a Comment

0 Comments