வீட்டை விட்டு ஓடி வந்து பஸ்ஸ்டாண்டில் படுத்து உறங்கிய இளைஞரை இன்று உலகமே திரும்பி பார்க்கும் அதிசயம் !

முயற்சியை மட்டுமே தனது மூலதனமாக கொண்டு தன் இசை பயணத்தின் வெற்றிக்காக போராடும் அருள்பிரகாசம் என்ற இளைஞரின் வாழ்க்கை பின்னணி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

அவரின் குடும்பம் ஒரு விவசாய குடும்பமாகும். தந்தை விவசாயம் செய்து அவரை படிக்க வைத்தாலும் அவரின் கவனம் எல்லாம் இசை மீதே இருந்துள்ளது.


அருள்பிரகாசம் தனது இலட்சியத்திற்காக பல மேடைகள் ஏறி தோல்வியை கண்டுள்ளார். எனினும், அவருக்கு கொஞ்சம் கூட இசை மீது கொண்ட ஆர்வம் குறைய வில்லை. இறுதியாக சரிகமபா மேடை அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

குறித்த இளைஞர் அவரின் முதல் வெற்றியை தற்போது சரிகமபா மேடையில் பதிவு செய்துள்ளார். இது குறித்து கண்ணீருடன் உருக்கமாக அவரின் சகோதரி பேசியுள்ளார். பல சோதனைகளை கடந்து இனி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a comment

0 Comments