வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்

நடிகர் வடிவேலு சமீபத்தில் நேசமணி என்ற டேக் மூலம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். அதன் பிறகு அவர் இயக்குனர் சிம்புதேவன் பற்றி அளித்த பேட்டியும் சர்ச்சையானது. மேலும் இயக்குனர் ஷங்கர் கிராபிக்ஸ் இயக்குனர் என கூறினார் வடிவேலு.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் T.சிவா அளித்துள்ள பேட்டியில் வடிவேலு செய்யும் பிரச்சனைகள் பற்றிபேசியுள்ளார் . தில்லாலங்கடி என்கிற படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேஷியா சென்றது படக்குழு. அங்கு பிளைட்டில் சென்று வந்ததற்காக 8 மணி நேரம் விமானபயண நேரம் ஆனது. அந்த 8 மணி நேரத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டும் என கூறி பிரச்சனை செய்தார்.


வடிவேலு திரைப்பயணத்தில் முக்கிய படம் வின்னர். அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் தெருவில் நிற்கிறார். அவரை வடிவேலு எங்காவது பார்த்தால் யாரென்றே தெரியாதவர் போல முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிடுவாராம். தன்னை தூக்கிவிட்டவருக்கு வடிவேலு கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான்.

24ம் புலிகேசி படத்தில் அவர் செய்த பிரச்சனை பற்றி 16 பக்க புகார் கடிதம் உள்ளது. அதை வெளியிட்டால் வடிவேலுவுக்கு மக்களிடம் உள்ள மரியாதை சுத்தமாக அழிந்துவிடும் என தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.

Post a comment

0 Comments