Wednesday, July 25, 2018

சிவப்பு நிறத்தில் மாறும் ஃபேஸ்புக் எழுத்துகள் | புரளிகள் | உண்மைகள்

பேஸ்புக் கமெண்ட் பாக்சில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் மட்டும் சிவப்பாக மாறும். ஏன் அப்படி மாறுகிறது? எதனால் அப்படி தோன்றுகிறது? அதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்வோம்.

fb delight keywords

பேஸ்புக் கமெண்ட் பாக்சில் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லும்பொழுது, வாழ்த்துகள், Congrats, அருமை போன்ற வார்த்தைகள் சிவப்பு நிறத்தில் மாறி பலூன்கள் பறப்பதை காணலாம்.

இது காண்பவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த பேஸ்புக் கொண்டு வந்துள்ள "Text Delight" என்ற வசதி ஆகும். இது போன்ற டிலைட் கீவேர்ஸ்ட்ஸ் பிறந்தநாள், பிரபல விழாக்கள் போன்ற சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு கொண்டு வரப்படுள்ளது.

டிலைட் கீவேர்ட்ஸ்கள் உலகின் முதன்மை மொழிகள் அனைத்திலும் FACEBOOK கொண்டுவந்துள்ளது. அந்த வார்த்தைகளை கமெண்ட்டில் டைப் செய்யும்பொழுது, அதற்கான அனிமேஷன் தோன்றும்.

fb delight keywords


FB Delight Keywords சில:



  • அருமையாக / அருமையான நேரம் /அருமையான
  • இனிமையாக / இனிமையான நேரம்
  • வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்
  • you’re the best
  • you’re the bestest
  • உன்னை அடிச்சிக்கவே முடியாது / உன்னை மிஞ்ச முடியாது/ உனக்கு நிகர் யாருமில்லை / உனக்கு நிகர் நீயேதான் / உன்னைத் தாண்ட ஆளில்லை
  • bff
  • bffs
  • best wishes
  • XOXO
  • உன்னால் பெற முடியும்
  • You got This


இதுபோன்று பல மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட FB Delight Keywords உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள  இங்கு செல்லவும்.

இதுபோன்ற வார்த்தைகளைத் தெரிந்துகொண்டுதான் முகநூலில் XoXo என டைப் செய்யுங்கள்.அது சிவப்பு நிறத்தில் மாறினால் உங்களை யாரோ காதலிக்கிறார்கள் என்றும், BFF என டைப் செய்யுங்கள். அது பச்சை நிறத்தில் மாறினால் உங்களுடையை Facebook Account பாதுகாப்பாக உள்ளது என அர்த்தம் என கற்பனைகளை பறக்கவிட்டு, புரளிகளை கிளப்பி விடுகின்றனர்.

இனி, யாரேனும் முகநூலில் அது போன்று பேனர் உருவாக்கி, அதை பகிர்ந்தால், அதைப் படித்துவிட்டு, நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, அடுத்த பதிவை படிக்க ஆரம்பித்து விடுங்கள். :)

Tags: Facebook, Delight Words, Animation

No comments:

Post a Comment

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.