தொலைந்துபோன பொருளை கண்டுபிடிக்க உதவிடும் சாதனம்

தொலைந்து போன பொருள் அல்லது எங்காவது மறந்து விட்டுச் சென்றுவிட்ட பொருளை அது இருக்கும் இடத்தினை வெகு இலகுவாக கண்டுபிடிக்க உதவுகிறது இந்தச் சாதனம். 


Anti Lost Wireless Tracker என்ற இச் சாதனத்தனை Digitex நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Anti Lost Wireless Tracker
இதற்கென கொடுக்கப்பட்டிருக்கும்  Digitek tracker செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும். இந்த சாதனம் இணைக்கப்பட்ட பொருள் எங்கிருந்தாலும், இந்த செயலின் மூலம் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்துவிடலாம்.

எப்படி பயன்படுத்துவது?

இந்த சாதனத்தை Laptop, Key chain, Waller போன்ற சாதனங்களில் இணைத்து வைத்துக்கொள்ளலாம்.

கார்களைக் கூட இந்தச் சாதனத்தை இணைத்துக்கொண்டு விடலாம்.


Anti Lost Wireless Tracker for car

Anti Lost Wireless Tracker சாதனத்தில் உள்ள In-Build அலாரம் குறிப்பிட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும். 30 மீட்டர் பரப்பளவு வரை அருமையாக வேலை செய்கிறது. அந்த எல்லைக்குள் பொருள் இருந்தால், உடனே ஸ்மார்ட் போனிலிருந்து அலாரம் அடிக்கும்.

இந்தச் சாதனத்தின் மூலம் Remote முறையில் வீடியோ, புகைப்படங்கள எடுக்க முடியும். இதற்காக ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.

Google Play Store - ல் இந்த Anti Lost Wireless Tracker சாதனத்திற்கான செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சுட்டி : Download Anti lost Wireless Tracker Android App For Free

Tags: Anti lost wireless tracker, Anti lost Wireless Tracker Android App, Anti lost Wireless Tracker for Car, Anti lost Wireless Tracker for Laptop.

Post a Comment

0 Comments