கம்ப்யூட்டர் வேகமாக இயங்கிட உதவும் ஸ்டார்ட்அப் கன்ட்ரோலர் மென்பொருள்

கணினி தொடங்கும்போது கூடவே சில மென்பொருட்கள் தனது செயல்பாட்டை தொடங்கும். உதாரணமாக ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் கணினி தொடங்குகையில் தானாகவே அதுவும் இயங்குவதை குறிப்பிடலாம். சில மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்திடுகையில் தானாவே ஸ்டார்ட்அப்பில் சேர்ந்துவிடும். இதுபோன்ற மென்பொருட்கள் Startup Programs என்று குறிப்பிடப்படுகின்றன.

malwarebytes startuplite

கம்ப்யூட்டர் மெதுவாக தொடங்குகையில் இதுபோன்ற புரோகிராம்களும் சேர்ந்து கொள்வதால் அதன் தொடங்கிடும் வேகம் வெகுவாக குறைகிறது.  இதனால் சிக்கல்கள் தொடங்குகிறது. ஸ்டார்ட்அப் புரோகிராம்களை கன்ட்ரோல் செய்வதற்காகவே Startup Manager மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்த மென்பொருளாக Malware Bite - ன் Startuplite கருதலாம்.

சரி.. Startup Program பிரச்னையை எப்படி தீர்ப்பது?

  • Run விண்டோவில் MsConfig என டைப் செய்து என்டர் தட்டவும்.
  • தோன்றும் விண்டோவில் Startup கிளிக் செய்து பார்க்கவும்.
  • அதில் starup ல் எத்தனை புரோகிராம்கள் ரன் ஆகின்றன என்பதை தெரிந்துகொள்ளலாம்.
  • அவற்றில் மிக முக்கியமான புரோகிராம்களை தவிர, ஏனையவைகளை Disable செய்திடலாம்.

இதே வேலையை சுலபமாக செய்யக்கூடிய மென்பொருள்தான் Staruplite மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் மிக எளிதாக ஸ்டார்அப் புரோகிராம்களை Disable செய்ய  முடியும். தேவையில்லை என்றால் அவற்றை நீக்க முடியும். ஒரே கிளிக்கில் கம்ப்யூட்டர் வேகத்தை அதிகப்படுத்திட முடியும்.

தரவிறக்கச்சுட்டி: Download Startuplite Software

தொடர்புடைய பதிவு: கம்ப்யூட்டரை வேகப்படுத்திட சூப்பர் டிப்ஸ் 

Post a Comment

0 Comments