மய்யம் விசில் என்ற பொது சேவை செயலியை அறிமுகப்படுத்தினார் கமல்

kamal-haasan-launches-maiam-whistle-app

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 'மய்யம் விசில்' என்ற புதிய செயலியை அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இந்த செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், இந்த செயலி மூலம் சமுதாய குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், மக்கள் தெரிவிக்கும் புகார்களின் உண்மை தன்மையை ஆராய 3 பேர் கொண்ட குழு செயல்படும் எனவும், அதன் மீதான நடவடிக்கைகளை எடுக்க அட்மினுக்கு பரிந்துரைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் நடக்கும் தவறுகளை வெளிகொண்டு வரும் ஏஜென்டாக மக்கள் நீதி மய்யத்தின் செயலி இருக்கும் என குறிப்பிட்ட அவர், குற்றங்களை கண்டறிய காவல்துறைக்கும் முக்கிய பங்காக இந்த செயலி இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: Mayyam Android App, Kamal, Mayyam whistle App.

Post a Comment

0 Comments