மொபைல் பவர் பட்டன் உடைந்துவிட்டால் எப்படி ஆன் செய்வது?

fix mobile power button broken


பல ஆயிரங்கள் செலவழித்து ஒரு ஸ்மார்ட்போன் (SmartPhone) வாங்குவது கூட பெரிதில்லை. ஆனால் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதில் அதிக சிக்கலே இருக்கிறது.

கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டால், மனது பதறிதான் போகிறது. என்னதான் Flip cover அது இது என்று செல்போன் உறைகளை பயன்படுத்தினால் கூட சில சமயங்களில் நம்மையும் மீறி அதுபோன்ற தற்செயல்கள் நடந்துவிடச் செய்கிறது.

அப்படி கீழே விழும்போது அதிகம் பாதிக்கப்படுவது Display/Screen தான். அப்படி உடைந்துவிட்டால் கண்டிப்பாக அதை மாற்றியே ஆக வேண்டும்.

சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் Screen Mirror தான் உடைந்துவிட்டது... Touch வேலை செய்கிறது என்று உடைந்த display உடன் பயன்படுத்துகிறார்கள்.

நிச்சயம் அது ஒரு ஆபத்தான செயல்தான். அதில் உள்ள கண்ணுக்குத் தெரியான கண்ணாடி துகள்கள் - Glass particles நமக்குத் தெரியாமலேயே வயிற்றுக்கு போய்விடும் அபாயம் உண்டு.

உடனே சிறிது பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை என்று மாற்றிவிடுவது நல்லது.

அதே போல பவர் பட்டன், Volume Button அடிக்கடி பயன்படுத்த நேரிடும். வால்யூம் பட்டன் உடைந்தால் கூட போனில் டச் மூலம் வால்யூம் ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம். ஆனால் பவர் பட்டன் உடைந்துவிட்டால்?

போனை ஆன் செய்வது சிரம ம். ஆஃப் செய்வது அதைவிட சிரமம். அதற்கு மாற்று வழிகள் உண்டா? என்றால் நிச்சயம் உண்டு.

உடனடியாக போன் இயக்கி பேச வேண்டும் என்றால், முதலில் போனில் Back cover ஐ நீக்கி, POWER BUTTON இருப்பதற்கு நேராக ஒரு புள்ளி போன்று இருக்கும்.

அதை தொட்டால் போன் ஆன் ஆகிவிடும். மீண்டும் தொட்டால் ஆப் ஆகிவிடும். இந்த முறையில் On/Off செய்திடலாம்.

சில போன்களில் வால்யூம் பட்டனே, பவர் பட்டன் ஆக கூட செயல்படும். வால்யூம் பட்டனை பவர் ஆன்/ஆஃப் செய்திடலாம்.

யூஎஸ்பி கேபிள் (USB Cable) வழியாக சார்ஜ் செய்யும்போது கூட போனை ஆன்/ ஆப் செய்திடும் வசதி ஸ்கிரீனில் காட்டும். அதைப் பயன்படுத்தி எளிதாக On/Off செய்திடலாம்.

டூப்ளிகேட் பவர் பட்டன்; உடைந்த பவர் பட்டனை போலவே உள்ள டூப்ளிகேட் பவர் பட்டனை - Duplicate Power Button பொருத்துவதன் மூலம் மீண்டம் அதை சரி செய்திடலாம்.

இவற்றைவிட மேலானது, உடனடியா மொபைல் போன் சர்வீஸ் சென்டரில் போனை கொடுத்து சர்வீஸ் செய்துகொள்வது நல்லது.

Tags: mobile tips, power button, mobile phone service.

Post a Comment

0 Comments