இந்தியர்களின் ஆவலை தூண்டும் இணையதளம்

இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் குறைந்த கட்டணத்தில்  இணைய வசதி கிடைப்பதுதான். கடந்த ஆண்டிலிருந்து "இன்டர்நெட்" சேவை வழங்கும் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு பல சலுகைகளை வழங்கிவருவதால் மொபைல் போன் வழி இணைய பயன்பாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.


அவ்வாறு இணையத்தை பயன்படுத்துபவர்களின் ஆவலைத் தூண்டி, தினந்தோறும் 80% சதவிகித பேரை அன்றாடம் வீடியோ பார்க்க வைக்கிறது  யூடீயூப் இணையதளம்.

யூட்யூப் இணையதளத்தில் சினிமா, விளையாட்டு, பயனுள்ள குறிப்புகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. இதனால் அந்த இணையதளதை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் மட்டும் நாளொன்றிற்கு 23 கோடி பேர் யூடியூப் இணையதளத்தில் வீடியோக்களை தேடுகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த இணையதளத்தின் மூலம் வீடியோ பார்க்கின்றனர்.

2008 ம் ஆண்டு தனது சேவையை தொங்கிய யூடீயூப் பத்தாண்டுகளில் இந்த அபரிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது.


Tags: YouTube, Users, India, Internet Service, Video.

Post a comment

0 Comments