வாட்சப் நடவடிக்கையை உளவு பார்த்திடும் செயலி !

வாட்சப். இன்று உலகம் முழுவதும் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலி. வாட்சப் பயனர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்சப் செயலியை உளவு பார்க்கும் "ChatWatch" என்ற செயலியை "லைப் ஹெக்கர்கள்" வெளியிட்டிருக்கிறார்கள்.

chatwatch spy app for whatsapp

நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாரின் வாட்சப் நடவடிக்கையை இந்த ஆப் மூலம் அறிந்துகொள்ள முடியும். வாட்சப்பில் "Last Seen" என்ற அம்சத்தை மறைத்து வைத்திருந்தால் கூட இந்த செயலி வேலை செய்யும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதனால் வாட்சப் பயனர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக்கபட்டுள்ளது. இந்த செயலின் மூலம் பிறரின் சாட் நடவடிக்கைளை கண்காணிக்க முடியும் என்பதால் வாட்சப் பயனர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு வாட்சப் தொடர்ந்து ஏதேனும் அப்டேட் வழங்கிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags: Whatsapp, ChatWatch, Spy App, Android app.

Post a comment

0 Comments