புதிய கம்ப்யூட்டர் அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் வின்டோஸ் இன்டாலேசன் - Windows Installation முடிந்த பிறகு, அதில் என்னென்ன மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
Windows க்கு என இணையத்தில் நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது? எது முக்கியமானவை? எது நம்பகமானவையாக இருக்க கூடும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
எனினும், மிகப் பரவலாக கணினி பயன்பாட்டில் உள்ள சில அடிப்படை மென்பொருட்கள் எவையெவை? அவை ஏன் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
Windows OS பதிந்த பிறகு, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டிய மென்பொருட்கள்:
1. கூகிள் குரோம் (Browser)
ஒரு கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டியது பிரௌசர். இயல்பிருப்பா விண்டோசுடன் INTERNET EXPLORER பிரௌசரும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அதைவிட, சிறந்தது, விரைவானது Google Chrome Browser.
2. ஆபிஸ் தொகுப்பு: (MS-Office)
நிச்சயமாக ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இருக்க வேண்டியது. MS-Office கட்டணம் செலுத்தி பெற வேண்டும். அதில் வசதிகள் ஏராளம்.
அதைபோன்றே வசதிகள் கொண்ட இலவச Office தொகுப்புகள் உண்டு. அதைபோன்றதொரு இலவச ஆபிஸ் தொகுப்பு Libre Office.
3. மீடியா பிளேயர் / Media Player
வீடியோ, பாடல் போன்ற பொழுதுபோக்கிற்கு மீடியா பிளேயர் அவசியம். பல வசதிகள், பயன்கள் அதிகம் கொண்ட ஒரு பிளேயர் VLC
4. ஆன்ட்டி வைரஸ் / Anti Virus
இன்டர்நெட், பென்டிரைவ், டிவிடி, செல்போன் என கம்ப்யூட்டருடன் இணைபவைகளால் வைரஸ் தொற்று கட்டாயம் ஏற்படும். அதைத் தவிர்த்து பாதுகாத்திட ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் தேவை.
சிறந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் : Kasperskey
5. இமெஜ் எடிட்டர் / Image Editor
படங்களை எடிட் செய்திட பயன்படும் மென்பொருள் இது. Photoshop, Gimp, Paint.net போன்ற சில உள்ளன. இலவசமாக கிடைப்பது Gimp. அதை போன்றதே Pain.net. பயன்படுத்துவது சுலபம்.
6. பிசி கிளீனிங் / PC Cleaning
கம்ப்யூட்டர் சுத்தம் செய்திட உதவும் மென்பொருள் இது. இலவசமாக கிடைப்பது CCleaner
7. பேக்கப் / Backup
இந்த வசதி விண்டோசில் உள்ளதென்றாலும், அது சிற்ந்தாக இல்லை. டேட்டா அனைத்தையும் பேக்கப் செய்திட Crash Plan. மிக மிக முக்கியமான தகவல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் மட்டுமே பயன்படுத்தவும்.
8. ஃபைல் கம்ப்ரசன் டூல் / File Compression and Extraction
கட்டாயம் இருக்க வேண்டிய டூல். ஃபைல்களின் அளவை சுருக்கி, விரித்திட உதவும். ZiP , 7Zip போன்றவை பயன்படும். மற்றுமொரு சிறந்த ஃபைல் கம்ப்ரசர் PeaZip.
இது தொடர்புடைய பதிவு ஒன்று.
கம்ப்யூட்டருக்குத் தேவையான மென்பொருட்கள் ஒரே இடத்தில்
Tags: Basic Computer, Software, Windows OS, Operating System.
2 Comments
நல்ல தகவல். நன்றி.
ReplyDeleteநல்ல தகவல். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.
ReplyDeleteComment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.