ஒரு வாகனத்தைப் பற்றிய முழு தகவல்களை அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் ஆப்

ஒரு குறிப்பிட்ட வாகனத்தை பற்றிய விபரங்களை அதன் ரெஜிஸ்டர் நம்பர் மூலம் தெரிந்துகொள்வது எப்படி என பார்ப்போம்.

ஒரு இரு சக்கர வாகனம் யார்மீதாவது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளர், மற்றும் வாகனத்தைப் பற்றிய விபரங்களை மிக எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

rto car bike info android app
அதற்கு உதவுகிறது RTO Car and Bike ஆன்ட்ராய்ட் ஆப்.

இந்த ஆப்மூலம் உங்களிடம் உள்ள ரெஜிஸ்டர் நம்பரை உள்ளிட்டு அந்த வாகனத்தப் பற்றிய முழு விபரங்களை உரிமையாளர் பெயருடன் தெரிந்துகொள்ளலாம்.

எப்படி பயன்படுத்துவது?

உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் கீழுள்ள லிங்க் மூலம் ஆர்டிஓ கார் அன்ட் பைக் ஆப்பை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.

பிறகு தோன்றும் விண்டோவில் "Start" பட்டனை அழுத்திடுங்கள்.
Enter Vehicle Number என்ற பெட்டியினுள் உங்களிடம் உள்ள "Register Number"  உள்ளிட்டு Search கொடுக்கவும்.

அதன் பிறகு, அந்த வாகனத்தைப் பற்றிய முழு விபரங்களில் தோன்றும். அதில் வண்டியின் பெயர், வண்டியின் மாடல், ஓனர் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தையும் காட்டும்.

இது ஒரு சிறந்த பயன்மிக்க ஆப். இதைப் பயன்படுத்தி, நீங்கள் வாங்க இருக்கும் 2Hand Bike, 2 hand Car மற்றும் ஏதேனும் வாகன விபத்தை ஏற்படுத்திச் செல்லும் வண்டிகளை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

அதைப் போன்றே ஒரு வாகனத்தின் உரிமையாளர் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள ஆப்கள் சில உள்ளன. ஆனால் நான் பயன்படுத்திப் பார்த்ததில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தகவல்களை உடனடியாக காட்டுவதில் இது சிறந்த ஆன்ட்ராய்ட் ஆப் ஆக உள்ளது.

Tags: Android app, RTO CAR and Bike INfo, RTO Vehicle Information, Useful Android app.

Post a Comment

0 Comments