கம்ப்யூட்டர் Hijacking தடுப்பது எப்படி?

கம்ப்யூட்டர் ஹைஜாக்கிங் எனப்படுவது உங்களின் அனுமதியில்லாமல், உங்களது கம்ப்யூட்டரை இணையத்தின் வழியாக கைப்பற்றி, அதில் உள்ள தகவல்களை திருடுவது, மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அல்லது கம்ப்யூட்டர் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து, இயக்கத்தினை முடக்குவது.

ஆபிஸ் அல்லது வீடுகளில் ஒரே கம்ப்யூட்டரை பலர் பயன்படுத்த நேரிடும். குறிப்பாக பர்சனல் கம்ப்யூட்டர் எனில் அதில் இருக்கும் தகவல்களை பிறர் திருட வாய்ப்புகள் (Hijack) அதிகம்.

இதனை தடுத்திடும் வசதி  விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது . Group Policy Editor என்ற இந்த ஆப்சனில் சென்று செட்டிங்ஸ் மாற்றம் செய்வதன் மூலம், உங்களுடைய கம்ப்யூட்டரில் மற்றவர்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதோ, வேறு மாற்றங்கள் செய்வதோ முடியாது.

how to prevent pc hijacking

இதைச் செய்வதன் மூலம் மற்றவர்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை Hijack செய்வதை தடுத்திட இயலும்.

எப்படி Settings அமைப்பது?


1. ஸ்டார்ட் பட்டன் + R அழுத்தி, ரன் விண்டோவை உயிர்ப்பிக்கவும்.
2. அதில் gpedit.msc என டைப் செய்து OK கிளிக் செய்யவும்.
3. இப்பொழுது Group Ploicy Editor என்ற பக்கம் தோன்றிடும்.
4. அதில் User configuration=> administrative Template=> Control Panel செல்ல வேண்டும்.
5. அதில் Prohobit Access to Control Panel என்பதன் மீது டபுள் கிளிக் செய்யவும்.
6. Configuration திறக்கும். அதில் Settings கிளிக் செய்து Not Configured என்பதில் Enable கொடுக்க வேண்டும்.
அவ்வளவுதான். இனி, யார் ஒருவரும் உங்களது கம்ப்யூட்டரில் எந்த ஒரு மாற்றத்தினையும் செய்திட இயாலாது.

குறிப்பு:

மேற்கண்ட வழிமுறைகளை மிகச் சரியாக செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் கம்ப்யூட்டரை மீண்டும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.

மேலும் குறிப்பிட்ட விண்டோஸ் பதிப்புகளில் மட்டுமே இவ்வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

தொடர்புடைய பதிவு: பிரௌசர் ஹைஜாக்கிங் நீக்கிடும் மென்பொருள்

Tags: Tamil Computer Tips, Computer Hijacking, Computer Settings.

Post a Comment

0 Comments