வாட்சப் உரையாடலின்போது தீரும் மெமரியை கண்டறிய

வாட்சப்பில் அடிக்கடி புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நண்பர்களுடனான வாட்சட் சாட்டுக்கு (whats-app chat) எவ்வளவு மெமரி காலி ஆகி இருக்கிறது, எவ்வளவு டேட்டா காலியிருக்கிறது என்பதை கண்டறியும் வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஐபோனில் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது.


find data for chat memory in whatsappவாட்சப் சாட்டின்போது காலியான மெமரியை எப்படி கண்டறிவது?

வாட்ஸ் அப்பில் 'செட்டிங்ஸ்' பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே புதிதாக இருக்கும் 'டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ்  - Data and Storage' பக்கத்தை க்ளிக் செய்யுங்கள் அங்கே எந்த எண்ணின் சாட்டுக்கு எவ்வளவு மெமரி தீர்ந்திருக்கிறது என்பதன் பட்டியலைக் காண முடியும்.

குறிப்பிட்ட சாட்டைக் க்ளிக் செய்து நாம் அனுப்பிய அல்லது நமக்கு வந்த குறுஞ்செய்திகள், தொடர்பு எண்கள், லொகேஷன், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் (Microphones, contact numbers, location, photos, audio, videos and documents) ஆகியவற்றின் முழுத் தகவலைப் பெற முடியும்.

இந்த புதிய வசதியில் உள்ள 'மேனேஜ் மெசேஜஸ் -Manage Messages ' தேர்வு மூலம் அத்தகைய குறுஞ்செய்திகளை தேர்ந்தெடுக்கவோ, அழிக்கவோ முடியும்.

இந்த வசதி தற்போதைய வாட்சப் v2.17.340 பதிப்பில் கிடைக்கிறது.

Post a comment

0 Comments