Image Re-sizer, PDF converter, PDF split-merge and slideshow maker software in one place
Icecream Image Resizer 1.47
JPG, Gif, PNG, jpg, bmp, tiff பார்மட்ல இருக்கிற எந்த ஒரு படத்தையும் ரீசைஸ் செய்து கொடுக்குது ஐஸ்கிரீம் இமெஜ் ரீசைர் டூல். அதுவும் ரொம்ப ஃபார்ஸ்டா செய்து கொடுக்குது. இது அருமையான, அற்புதமான இமேஜ் ரீசைர் சாப்ட்வேர். ஒரு சில செகண்டலயே வேலை முடிஞ்சது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தறது ரொம்ப ஈசி. ஒரே சமயத்துல ஒரு போல்டர்ல இருக்கிற இமேஜஸ் எல்லாத்தையும், விரும்பின சைசுக்கு மாத்திடலாம்.
உதாரணமா உங்க கிட்ட இருக்கிற போட்டோஸ் எல்லாமே பெரிய சைஸ்ல இருக்கு. அதை அப்லோட் பன்றதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அதுக்கு போட்டோஸ் எல்லாத்தையும் ரீசைஸ் பண்ணி வேண்டியிருக்கும். ஒவ்வொன்னா ரீசைஸ் பண்ணனும்னா நேரம் போதாது. அதனால் போட்டோஸ் இருக்கிற போல்டரையே அப்படியே டிராக் பண்ணி விட்டா போதும். எந்த சைசுக்கு மாத்தணும்ங்கிறதை செட் பண்ணிட்டு, கீழ இருக்கிற ரீசைஸ் ங்கிற பட்டனை அழுத்தினா போதும்.
நொடி நேரத்துல அதுல இருக்கிற எல்லா போட்டோசும் நீங்க குறிப்பிட்ட சைசுக்கு மாறிடும். இது ஒரு சூப்பரான மென்பொருள். குறிப்பாக போட்டோ கடை வெச்சிருக்கிறவங்க, வெப்சைட் வெச்சிருக்கிறவங்க, அப்புறம் ஸ்லைட் சோ மேக் பன்றவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும். இமேஜ் எல்லாமே ஒரே சைசா இருந்தாதானே பார்க்கிறதுக்கு நல்லா இருக்கும்.
இந்த இமேஜ் ரீசைரை டவுன்லோட் பண்ணனுமா கீழ இருக்கிற லிங்கை கிளிக் பண்ணுங்க:
Icecream PDF Converter 2.70
நிறைய PDF Converter இருக்குங்க. இது ஒரு வகையான புது PDF Converter. நிறைய அட்வான்ஸ்ட் ப்யூச்சர்ஸ் இதுல இருக்கு. இது DOC to PDF, EPUB to PDF, JPG to PDF ன்னு எந்த ஒரு பார்மட்ல இருக்கிற TEXT/Image பைலையும் PDF ஆக நொடியில மாத்திக் கொடுக்குது.
இது சப்போர்ட் பண்ணும் பார்மட் பார்த்தீங்கன்னா PDF, DOC, JPG, PNG, EPUB, MOBI, BMP, XLS, TIFF, ODT, HTML. இது கூட இன்னும் சில பார்மட் பைலையும் PDF மாத்தி கொடுக்குது.
இந்த மென்பொருள் உங்களுக்குத் தேவைன்னா கீழ இருக்கிற லிங்க் கிளிக் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கோங்க.
Icecream PDF Split&Merge 3.34
இது எதுக்குன்னா, ரெண்டு பிடிஎப் பைல்களை சேர்த்து ஒரே பிடிஎப் பைலா மாத்தறதுக்கும், ஒரு பிடிஎப் ஃபைலை சில PDF பைலாக பிரிச்சி தனி தனி File ஆக மாத்தறதுக்கும் யூஸ் ஆகுது.
ஒரு பெரிய பிடிஎப் பைலை Split பண்ணனும்னா இந்த சாப்ட்வேர் யூஸ் ஆகும். அதே போல 2 PDF ஃபைலை மெர்ஜ் பண்ணறதுக்கும் யூஸ் ஆகும். கண்டிப்பா இதுவும் ஒரு சூப்பர் மென்பொருள்தான். அதுவும் இலவசமா கொடுக்கிறாங்கன்னா சொல்ல வேணுமா என்ன?
இந்த சாப்ட்வேர் உங்களுக்கு பிடிச்சிருந்தா டவுன்லோட் பண்ணிக்கோங்க.
Icecream Slideshow Maker 2.18
பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஷோ பார்த்திருப்பீங்க இல்ல. அதைவிட அட்டகாசமான ஸ்லோட் ஷோ இந்தசாப்ட்வேர் மூலம் கிரியேட் பண்ணலாங்க. பயன்படுத்தறதும் ஈசிதான். அருமையான யூசர் இன்டர்பேஸ் இருக்கிறதால ஒரு ஸ்லைட் ஷோ உருவாக்கிறதுக்கு அதிக மெனக்கெடத் தேவையில்லை.
உங்க கிட்ட இருக்கிற போட்டோஸ் வச்சி ஒரு சூப்பர் ஸ்லைட் ஷோ உருவாக்கலாம். அதிலேயே மியூசிக் சேர்த்தும் செய்யலாம். ஸ்லைட் எஃபக்ட் கொடுத்துக்கலாம். அப்புறம் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் எவ்வளவு டைம் கொடுக்கணுங்கிறதையும் செய்துக்கலாம்.
ஆக மொத்தம் இது சிம்பிளான ஸ்லைட் ஷோ மேக்கர். ஆனால் பவர்புல் ஸ்லைட் சோ உருவாக்கலாம்.
இந்த மென்பொருள் தேவைப்பட்டா, கீழ இருக்கிற டவுன்லோட் லிங்க் கிளிக் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கோங்க.
இந்தபதிவை படிச்சு முடிச்சவுடனே ஐஸ்கிரீம் சாப்ட்வேர் பத்தி மறக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா அந்தளவுக்கு இது யூஸ்புல்லா இருக்குங்க. இந்த மென்பொருள் பத்தி உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்துச்சுன்னா, இங்க கமெண்ட் பண்ணுங்க. கூடவே சாப்ட்வேர் எப்படி இருந்துச்சுன்னும் யூஸ் பண்ணிபார்த்துட்டு இங்க வந்து கமெண்ட்ல சொல்லுங்க.
உங்களுக்கு இந்த போஸ்ட் பிடிச்சிருந்தா, FACEBOOK, TWITTER, GOOGLE PLUS, LINKEDIN, STUMBLEDUPON, WHATSAPP ல ஷேர் பண்ண மறக்காதீங்க. அடுத்து ஒரு சூப்பரான பதிவுல சந்திப்போம்.
Tags: Image Resizer, PDF converter, PDF split-merge software, slideshow maker software, Icecream Free Software in one Place.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.