குரோம் பிரௌசரில் ஏற்படும் Aw Snap பிழை சரி செய்திட

குரோம் பிரௌசர் அவ்வப்பொழுது Aw Snap பிழை ஏற்படும். பிரௌசர் ஊடாக ஒரு இணையதளத்தை திறந்து பார்வையிடுகையில் திடீரென அந்த இணையதளம் மறைந்து  Aw, Snap ! Something wnet wrong shile displaing this ebpage என்ற பிழைச் செய்தி காட்டிடும்.

aw snap error solved

அவ்வாறு காட்டிடும்பொழுது, அந்த பக்கத்தை மறுதொடக்கம் (Refresh) செய்தால் மீண்டும் அந்த வெப் பேஜ் திறந்திடும்.

அது போன்ற பிழை ஏன் ஏற்படுகிறது? இதற்கு என்ன காரணம்? என்ன செய்தால் Aw, Snap பிழைச் செய்தி வராமல் தடுத்திடலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
aw snap error clearing
Aw, Snap பிழை ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்: 

1. பிரௌசர் கேட்சி மெமரி குறைவாக இருப்பது.
2. இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருப்பது
3. ஹார்ட் டிஸ்க் பிரச்னை
4. பிரோசர் பிளகின்ஸ்

மேற்குறிப்பிட்ட 4 காரணங்களால் Aw, Snap பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் முதலில் இந்த பிரச்னைகள் ஏதும் உள்ளதா என சோதித்துவிட வேண்டும்.

முதலில் கூகிள் குரோம் பிரௌசர் இன்டர்நெட் ஹிஸ்டரியை கிளியர் செய்ய வேண்டும்.

அதற்கு கூகிள் குரோம் பிரௌசர் வலது மூளையில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி செட்டிங்ஸ் கிளிக் செய்ய வேண்டும்.

settings in google chrome browser


செட்டிங்ஸ் பக்கத்தில் Scroll செய்து பார்த்தால் Advanced Settings இருக்கும்.
அதை கிளிக் செய்து, வரும் பக்கத்தில் Privacy and security என்ற தலைப்பின் இறுதியில் உள்ள Clear Browsing Data என்பதை கிளிக் செய்து, அங்குள்ள Clear Browser History பட்டனை அழுத்தி செயற்படுத்துவதன் மூலம் பிரௌசிங் ஹிஸ்டரி கிளியர் செய்துகொள்ள முடியும்.

அல்லது  பட்டனை அழுத்தி History => History => Clearing Browsing Data => Clear Browsing Data என்ற வழியில் சென்று Browsing History நீக்கிடலாம்.

ஆன்ட்டி வைரஸ்

ஆன்டி வைரசால் கூட சில சமயம் இதுபோன்ற பிரச்னை ஏற்படும். குறிப்பிட்ட அந்த வெப்சைட்டை ஆன்ட்டி வைரஸ் பிளாக் செய்து இருக்கும். அப்படி இருப்பபின் அந்த வெப்சைட்டை பார்வையிடும்பொழுது மட்டும் ஆன்ட்டி வைரஸை டிஆக்டிவேட் செய்துவிட வேண்டும்.

சில சமயம் வேண்டாத சில சாப்ட்வேர்களாலும் இதுபோன்று நிகழலாம். குரோம் கிளீன் அப் டூல் மூலம் அதை கண்டறிந்து நீக்கிவிட முடியும்.

சில நேரங்களில் கூகிள் குரோம் ரெப்ரஸ் செய்தால் கூட போதுமானது. அந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு விடும். இதை செய்தும் கூட பிரச்னை சரியாகவில்லை என்றால், கூகிள் குரோம் பிரௌசரை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு, பிறகு புதியதாக இன்ஸ்டால் செய்ய வேண்டியதுதான். பிரௌசரை அன் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு, கண்டிப்பாக பிரௌசரில் உள்ள புக்மார்க்கை பேக்கப் எடுத்துக்கொள்ள மறக்க வேண்டாம்.

தொடர்புடைய இடுகை: கூகிள் குரோம் பிரௌசரில் புக்மார்க்ஸ் பேக்கப் செய்வது எப்படி?

Tags: google chrome error, Aw snap Error, Chrome Aw Snap Error, chrome browser, chrome browser error, aw snap, browser tips, computer tips,

Post a Comment

0 Comments