ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைக்க

keyboard background image

ஆன்ட்ராய்ட் போனில் உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலின் பேக்ரவுண்ட் இமேஜாக வைப்பது எப்படி?

ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் செயலியின் பேக்ரவுண்ட் இமேஜாக உங்கள் புகைப்படத்தை கொண்டுவர முடியும். அதற்கு கூகிள் இன்டிக் கீபோர்ட்  உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கூகிள் இன்டிக் இன்புட் டூல் டவுன்லோட் செய்ய சுட்டி:


கூகிள் இன்புட் டூல் மூலம் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளிலும் டைப் செய்துகொள்ளலாம். தற்பொழுது கூகிள் இன்புட் செயலியில் புதிய மேம்படுத்தல்கள் செய்யப்படிருக்கின்றன.

அதில் உள்ள ஒரு வசதிதான் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைப்பது.

ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைப்பது எப்படி?  • முதலில் கூகிள் இன்டிக் இன்புட் டூலை போனில் இன்ஸ்டால் செய்து, திறந்து கொள்ளவும். 
  • பிறது அதில் Keyboard => Theme என்பதை கிளிக்செய்யவும்.
  • அதில் My Image என்பதை கிளிக் செய்து, உங்கள் போனில் இடம்பெற்றுள்ள உங்களுக்கு விருப்பமான போட்டோவை தேர்ந்தெடுக்கவும். 
  • அவ்வளவுதான். இனி, உங்களது கூகிள் இன்டிக் இன்புட் கீபோர்ட் பின்னணியாக நீங்கள் தெரிவு செய்த படம் வந்திருக்கும். 
Post a Comment

0 Comments