Android போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை

android pattern lock

ஆன்ட்ராய்ட் போனில் பேட்டர்ன், பாஸ்வேர்ட், பின் ஆகியவற்றை மறந்துவிட்டால் போனை ஓப்பன் செய்வது சிரமம். உடனே அதை ஒரு மொபைல் போன் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று அன்லாக் செய்திட முயற்சிப்போம். அதற்கு 300லிருந்து 350  ரூபாய் பணம் கேட்பார்கள். பணம் வீணாகும். இதற்கு என்ன செய்யலாம்?

ஸ்மார்ட்போனின் pattern, password, pin-ஐ எடுக்க மீட்டு எடுக்க இரு வழிகள் உண்டு.

  • Google Account
  • Wipe data (format,factory reset)

கூகிள் அக்கவுண்ட் மூலம் ஆன்ட்ராய்ட் போனை அன்லாக் செய்தல்

முதலில் ஆன்ட்ராய்ட் போனை எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்.

இதைச் செய்வதற்கு internet connection தேவை இல்லை. முதலில் உங்கள் pattern, password, pin-ஐ மூன்று முறை தவறாக போடுங்கள்.

கீழே “Forgot Pattern?” என்று வரும். அதை Select செய்யவும்.
பின் உங்கள் Gmail Address, Password ஆகியவற்றை type செய்து Sign in செய்யவும்.

இப்போது உங்கள் புது pattern, password, pinஐ Set செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் !!

solution forgotten password, pin, patter in android phone


இரண்டாம் வழிமுறை:


  • உங்கள் போனை switch off செய்யுங்கள்
  • Off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் …
  • (இது எல்லா போன்களில் வேலை செய்யாது. எனவே உங்கள் போன் மாடலுக்கு எப்படி ரெகவரி மோட் கொண்டு வருவது என்பதை,Googleலில் “how to go to recovery mode in “உங்கள் போன் மாடல்” என்று search செய்து தெரிந்துகொள்ளுங்கள்.)
  • Recovery modeல் touch screen வேலை செய்யாது.
  • Volume Button Move செய்வதற்கு
  • Home button அல்லது power button select செய்வதற்கு
  • Recovery modeல் “wipe data” optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்.
  • இப்போது “reboot system now” option-ஐ select செய்யுங்கள்.

அவ்வளவுதான். முடிந்தது.

உங்களுடைய போன் ரீபூட் ஆகி, மீண்டும் செயல்பட தயாராகிவிடும். இந்த இரண்டு முறைகளில் Android Phone - ன் பாஸ்வேர், பேட்டர்ன், பின் ஆகியவற்றை மறந்துவிட்ட பிறகு மீண்டும் செயல்பட வைக்க முடியும்.

Tags: Android, Forgot Password, Forgot Pattern, Forgot Pin, Fix Problem android phone forgotten password.

Post a Comment

0 Comments