தம்பதிகள் உறவுகளை வளப்படுத்த தமிழ் மேட்ரிமோனி வழங்கும் டுகெதர் ஆப்

உறவுகளை வளப்படுத்த பாரத்மேட்ரிமோனி புது ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

together app

இந்த ஆப் மூலம் தம்பதிகள் வாழ்க்கை பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத்மேட்ரிமோனியின் இந்த 'டூகெதர்' ஆப், தம்பதிகளின் இன்பமான நிகழ்வுகளை பகிரவும், இருவருக்குமிடையேயான தடங்கல்களை தீர்க்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பகிரப்படும், குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வாழ்நாள் பயணங்களின் முக்கிய தருணங்களை குறிக்கும் ஒரு நினைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பதிகளுக்கு இடையே ஆரோக்கியமான உறவை வலுப்படுத்த அவர்களது இன்பமான நினைவுகளை பகிர இந்த 'டூகெதர்' ஆப் உதவும்.

தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரது சிந்தனைகளை, காதலை பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்ள, முக்கிய தருணங்களின் கோப்பாக, 'டூகெதர்' ஆப் இருக்கும்.

Tags: Together app, Matrimonial, Bridegroom.

Post a comment

0 Comments