பிரௌசர் ஹைஜாக்கிங் புரோகிராம் நீக்க பயன்படும் மென்பொருள்

பிரௌசர் ஹைஜாக்கிங்: இது ஒரு மோசமான செயல்பாடு மிக்க புரோகிராம். சில வெப்சைட்டுகளை பார்வையிடும்பொழுது தானாகவே உங்களது பிரௌசரில் இணைந்திடும். பிறகு நீங்கள் உலவும் இணையதள பக்கங்களில் விளம்பரங்களை காட்டத் தொடங்கிடும். அது போன்றதொரு மோசமான Browser Hijacker புரோகிராம்தான்  CoolWebSearch.

இது சில டஜன் கணக்கான "போர்ன்" சைட்டுகளை உங்கள் டெஸ்க்டாப்பில் புக் மார்க்கிங் செய்துவிடும். உங்களுடைய அனுமதி இல்லாமலேயே பிரௌசர் ஹோம் பேஜ் மாற்றிவிடும்.


remove coolwebsearch in destop

சில நேரங்களில் விண்டோஸ் இயங்குதளத்தையே உறைய செய்து விடும். கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்.

இத்தகைய மோசமான இந்த புரோகிராமை நீக்க பயன்படும் டூல்தான் Trend Micro CWShredder. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள CoolWebSearch தொடர்புடைய பைல்கள் அனைத்தையும் நீக்குகிறது.

அதன் பிறகு எப்பொழுதும் போல உங்களது கம்ப்யூட்டர் - பிரௌசர் இயல்பாக செயல்படும்.

Trend Micro CWShredder டவுன்லோட் செய்ய சுட்டி:

Post a comment

0 Comments