Monday, February 29, 2016

கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்கான தீர்வு !

கம்ப்யூட்டரில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளை சரிசெய்ய கற்றுக்கொண்டால்,  ரிப்பேருக்காக கொடுக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம். சிறிய சிறிய பிரச்னைகளை நாமே சரிசெய்து விடுவதால் பெரியதாக கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆவதிலிருந்து தடுக்கலாம்.

கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள்


solve computer problem yourself
உங்கள் கம்ப்யூட்டர் பிரச்னையை நீங்களே தீர்ப்பது 

கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க


  • கம்ப்யூட்டர் வேகம் குறைவதற்கு முக்கிய காரணமே அதில் அதிமான புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்து வைத்து இருப்பதுதான்.
  • அடுத்த முக்கியமான ஒரு காரணம் வைரஸ் இருப்பது .
  • பின்னணியில் அதிக புரோகிராம்கள்  இயங்கி கொண்டிருப்பது.
  • சில ஸ்டார்ட்-அப் புரோகிராம்கள்.

தீர்வு

  • Start பட்டனை அழுத்தி தோன்றும் சர்ச விண்டோவில் 'msconfig' என டைப் செய்து, என்டர் பட்டனை தட்டவும். 
remove unwanted startup program

  • இப்போது "System Configuration" விண்டோ தோன்றும். 
  • அதில் "Start UP" டேபை கிளிக் செய்யவும்
  •  ஸ்டார்ட் அப்பில் என்னென்ன புரோகிராம்கள் தொடங்கும் வகையில் அமைக்கப் பட்டிருக்கின்றன என்பதை கவனிக்கவும். 
  • உங்களுக்குத் தேவையில்லாத புரோகிராம்கள் அதில் தொடங்கும் வகையில் இருந்தால், அதை "UnCheck" செய்திடவும் (டிக் மார்க்கை எடுத்துவிடவும்). 
  • பிறகு செய்த மாற்றங்களை சேமிக்க Apply, OK கொடுக்கவும். 

remove unwanted startup program


அவ்வளவுதான். இனி உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும்.

தேவையில்லாத புரோகிராம்களை "Uninstall" செய்வது. அன் இன்ஸ்டால் செய்வதற்கு,
  • ஸ்டார்ட் (Windows Button) பட்டன் அழுத்தவும்
  • தோன்றும் சர்ச் பாக்சில் Uninstall a Program என டைப் செய்யவும்.
  • தோன்றும் Uninstall a Program என்பதை கிளிக் செய்தால், புரோகிராம் நீக்குவதற்கான விண்டோ தோன்றும். 
  • அதில் தேவையில்லாமல், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாமல் இருக்கும் புரோகிராம்களை தேர்ந்தெடுத்து  "Uninstall" செய்துவிடலாம். 

இதனால் கம்ப்யூட்டர் வேலை பளு குறைந்து, வேகம் அதிகரிக்கும்.


C Drive CleanUp

பொதுவாக கம்ப்யூட்டரில் புரோகிராம்கள் அனைத்தும் C Drive ல் பதியப்பட்டிருக்கும். சி டிரைவை கிளீன் அப் செய்வதன் மூலம் தேவையில்லாத டெம்ப்ரரி பைல்களை டெலீட் செய்திடலாம். இதனால் C Drive - ல் Free Space அதிகமாகும். கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும்.

disk cleanup

disk cleanup

disk cleanup

disk cleanup

TEMP Files:

தற்காலிகமாக கம்ப்யூட்டரால் உருவாக்கப்படும் Temp file களை டெலீட் செய்வதன் மூலம் கணிசமாக கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்கலாம்.

வைரஸ் - Virus

வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் செயல்படும்போது கம்ப்யூட்டர் வேகம் குறையும். இதைத் தவிர்க்க கம்ப்யூட்டரில் நல்லதொரு "கட்டண மென்பொருள்" Anti-Virus Software - ஐ இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். அவ்வப்பொழுது ஸ்கேன் செய்து வைரஸ் பாதிப்பிலிருந்து கம்ப்யூட்டரை பாதுகாத்திட வேண்டும்.

CCleaner - சீ கிளீனர்

தேவையற்ற கோப்புகள், Browser History, Registry செய்வதும் நல்ல பலனை கொடுக்கும். (Temp Flies).  அதற்கு CCleaner என்ற மென்பொருள் பயன்படும்.

இவ்வாறு சிறிய சிறிய பிரச்னைகளை நாமே கையாண்டால் கட்டாயம் கம்ப்யூட்டரில் பெரிய அளவு ரிப்பேர் ஆகாமல் தடுத்திடலாம். 

1 comment:

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.