இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் இலவசமாக டவுன்லோட் செய்ய

இன்டர்நெட்டில் இன்று டவுன்லோட் செய்வது மிக மிக அதிகரித்துள்ளது. குறைந்த வேகம் கொண்ட இன்டர்நெட் கனெக்சனில் கூட ஒரு திரைப்படத்தை ஒரு இரவுக்குள் டவுன்லோட் செய்ய முயற்சிக்கின்றனர்.

இதுபோன்ற செயல்களுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், தொடர்ந்து மொபைல் பேட்டரி, அல்லது கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்து இன்டர்நெட் கனெக்சனில் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்.
free internet download manager 2016
free internet download manager 2016

இந்த இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு திரைப் படத்தை டவுன்லோட் செய்து பார்க்க முடியும். திரைப்படம் மட்டுமல்ல.... அதிகளவு இருக்கும் பெரிய பைல்கள், சாப்ட்வேர்கள் போன்றவைகளுக்கு இது பொருந்தும்.

ஆனால் நடைமுறைக்கு அது சாத்தியமில்லை. டவுன்லோட் செய்யும்போது மின்சாரம் தடைபட்டு போகலாம். அல்லது இன்டர் நெட்டில் ஏதாவது "சிக்னல்" கோளாறு வந்து தடை பட்டு போகலாம். எது நடந்தாலும், நீங்கள் டவுன்லோட் செய்த பைல், விட் டுப் போன இடத்திலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக டவுன்லோட் செய்ய பயன்படும் ஒரு அற்புதமான மென்பொருள்தான் "Internet Download Manager".

இது இலவசமாக கிடைக்கிறது. கூடுதல் வசதிகளுடன் வேண்டுமானால், விலை கொடுத்து வாங்க வேண்டும். இப்பொழுது எல்லாம் யாரும் விலை கொடுத்து ஒரு மென்பொருளை வாங்குவதில்லை. "கிராக்ட்" சாப்ட்வேர் என்று கூகிளில் தேடி, அதை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர்.

ஒரு முழுமையன சாப்ட்வேர் போல அது செயல்படும். பணம் கொடுத்து வாங்காமல், அதை சில சில்லறை வேலைகள் செய்து, உடைத்து விடுகின்றனர். அதைதான் Cracked Software என்கின்றனர்.

இதுபோன்ற சாப்ட்வேர்கள் நிறையை இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் மென்பொருளும் அப்படிதான்.

எந்த ஒரு சாப்ட்வேரையும், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், ஈசியாக டவுன்லோட் செய்ய பயன்படுவதால் "இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்" மென்பொருளுக்கு எப்பொழுது மதிப்புதான்.

சரி. கிராக்ட் மென்பொருளை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாமா? என்றால் கண்டிப்பாக பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் டவுன்லோட் செய்யும் வெப்சைட் பொறுத்துதான் அதில் வைரஸ் புரோகிராம் இணைந்திருக்குமா? இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

நிறைய பேர் இதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர். முக்கியமான மென்பொருட்களை கிராக் செய்து, அதற்கான டவுன்லோட் இணைப்பை கொடுத்து விடுகின்றனர். கூடவே அதில் இலவமாக Spyware, Adware போன்ற வைரஸ்களையும் இணைத்து விடுகின்றனர்.

இது அவர்களின் தளத்திற்கு அழைத்து செல்லக்கூடியவை. உங்களுடைய கம்ப்யூட்டர்களையும் துவம்சம் செய்யக்கூடியவை. குறிப்பாக உங்களுடைய இன்டர்நெட் செட்டிங்சில் மாற்றம் ஏற்படுத்தக்கூடியவை. நீங்கள் எந்த ஒரு பிரௌசர பயன்படுத்தினாலும், அதில் ப்ராபர்டீசில் மாற்றத்தை ஏற்படுத்தி, உங்களுடைய "ஹோம்" பேஜ்-ஐ மாற்றிவிடும்.

தேவையில்லாத சின்ன சின்ன வியாபார நோக்கம் கொண்ட சாட்வேர்களை தானாகவே இன்ஸ்டால் செய்துவிடும்.

அதனால்தான் "இலவச மென்பொருள்" Cracked Software டவுன்லோட் செய்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சரி.. சப்ஜெக்டை விட்டு வெளியே வந்துவிட்டோம் என நினைக்கின்றேன். மீண்டும் டவுன்லோட் மேனேஜர் மென்பொருளுக்கே வருவோம்.

இதை எப்படி பயன்படுத்துவது?

அது ரொம்ப சுலபம்தான். முதலில் கொடுக்கப்பட்ட லிங்கிலிருந்து டவுன்லோட் மேனேஜரை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை "இன்ஸ்டால்" செய்ய வேண்டும்.

இன்ஸ்டலேசன் முடிந்த பிறகு, எந்த சாப்ட்வேர் டவுன்லோட் செய்தாலும், அதற்கான சுட்டியை Add Url என்பதை கிளிக் செய்து, அதில் Paste செய்துவிட்டால் போதும். டவுன்லோட் தொடங்கிவிடும். அதில் டவுன்லோட் செய்யப்படும் வேகமும் என்பதை காட்டும்.

உங்களுடைய இன்டர்நெட் வேகம், டவுன்லோட் செய்யப்படும் ஃபைலின் அளவு ஆகியவற்றை பொருத்து, உங்களுடைய ஃபைல் தரவிறங்கும் வேகம் இருக்கும்.

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் டவுன்லோட் செய்ய சுட்டி:

Post a Comment

1 Comments

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.