ஸ்மார்ட் போனுக்கான புதிய Wireless Charger

இதுவரைக்கும் வயர் மூலமே போன்களுக்கு சார்ஜ் ஏற்றப்பட்டு வந்தது. இனி ஸ்மார்ட் போன்களில் வயர் மூலம் சார்ஜ் செய்வதற்கு பதில் புதிய வயர்லஸ் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம்.

வயர்லஸ் முறையில் ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் செய்வது சாத்தியமா? 


சாத்தியம்தான் என நிரூபித்துள்ளது orean Advanced Institute of Science and Technology. 

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மின்சக்தியை வயர்லஸ் முறையில் அனுப்புவதற்கு பல்வேறு ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். 2007 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி. என அழைக்கப்படும், உலகின் முன்னணி பொறியியல் ஆய்வு மையமான Massachusetts Institute of Technology (MIT) இந்த வகையில் முதல் ஆய்வினை மேற்கொண்டது.

பின்னர், பல பல்கலைக் கழகங்கள் இதனைத் தொடர்ந்தன. இவர்களில், கொரியன் ஆய்வு மையம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த Korean Advanced Institute of Science and Technology (KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் "Dipole Coil Resonant System” (DCRS) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர்.
new-wireless-charger-for-smartphone
வயர்லஸ் சார்ஜர்

இது ட்ரான்ஸ்மிட்டருக்கும், மின் சக்தியை ஏற்றுக் கொள்ளும் சாதனத்தில் உள்ள காயில்களுக்கும் இடையே செயல்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து புதிய வயர்லஸ் சார்ஜர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனி, வீடுகளில் Wi-Fi வழி INTERNET (இணைய இணைப்பு) பயன்படுத்துவது போல, வயர்லஸ் முறையில் ஒரே நேரத்தில் பல மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கொரியாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள், ஒரே நேரத்தில், 16 அடி தூரத்தில் வைத்து 40 ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்து, சாதனை படைத்துள்ளனர்.

Tags: Smartphone, Wireless charger, Smartphone charger. 

Post a comment

3 Comments

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.